Skip to main content
bismillah

إِذَا زُلْزِلَتِ
நடுங்க வைக்கப்படும் போது
ٱلْأَرْضُ
பூமி
زِلْزَالَهَا
அதன் நிலநடுக்கத்தால்

Izaa zul zilatil ardu zil zaalaha

(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,

Tafseer

وَأَخْرَجَتِ
இன்னும் எறிந்துவிடும்
ٱلْأَرْضُ
பூமி
أَثْقَالَهَا
அதன் சுமைகளை

Wa akh rajatil ardu athqaalaha

அது, தான் சுமந்திருப்பவைகளை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,

Tafseer

وَقَالَ
இன்னும் கூறுவான்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
مَا لَهَا
இதற்கென்ன

Wa qaalal insaanu ma laha

மனிதன் (திடுக்கிட்டு) இதற்கென்ன நேர்ந்தது, (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.

Tafseer

يَوْمَئِذٍ
அந்நாளில்
تُحَدِّثُ
அறிவிக்கும்
أَخْبَارَهَا
அது தன் செய்திகளை

Yawmaa izin tuhad dithu akhbaaraha

அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.

Tafseer

بِأَنَّ
அதாவது நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
أَوْحَىٰ لَهَا
தனக்கு கட்டளையிட்டான்

Bi-anna rabbaka awhaa laha

அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவைகளை எல்லாம் அறிவித்து (இவ்வாறே) உங்களது இறைவன் வஹீ மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கின்றான் என்று கூறும்.

Tafseer

يَوْمَئِذٍ
அந்நாளில்
يَصْدُرُ
புறப்படுவார்கள்
ٱلنَّاسُ
மக்கள்
أَشْتَاتًا
பலபிரிவுகளாக
لِّيُرَوْا۟
அவர்கள் காண்பதற்காக
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை

Yawma iziy yas durun naasu ash tatal liyuraw a'maalahum

அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.

Tafseer

فَمَن
ஆகவே, யார்
يَعْمَلْ
செய்வாரோ
مِثْقَالَ
அளவு
ذَرَّةٍ
ஓர் அணு
خَيْرًا
நன்மை
يَرَهُۥ
அதைப் பார்ப்பார்

Famaiy ya'mal mithqala zarratin khai raiy-yarah

ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டுகொள்வார்.

Tafseer

وَمَن
இன்னும் யார்
يَعْمَلْ
செய்வாரோ
مِثْقَالَ
அளவு
ذَرَّةٍ
ஓர் அணு
شَرًّا
தீமை
يَرَهُۥ
அதைப் பார்ப்பார்

Wa maiy-y'amal mithqala zarratin sharraiy-yarah

(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்குக்) கண்டுகொள்வான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துஜ் ஜில்ஜால்
القرآن الكريم:الزلزلة
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Az-Zalzalah
ஸூரா:99
வசனம்:8
Total Words:35
Total Characters:194
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:93
Starting from verse:6138