Wat teeni waz zaitoon
அத்தியின் மீதும், ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!
Wa haazal balad-il ameen
அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக,
Laqad khalaqnal insaana fee ahsani taqweem
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம்.
Thumma ra dad naahu asfala saafileen
(அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகின்றோம்.
Ill-lal lazeena aamanoo wa 'amilus saalihaati; falahum ajrun ghairu mamnoon
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்து வருகின்றார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.
Fama yu kaz zibuka b'adu bid deen
கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உங்களை எவர்தாம் பொய்யாக்க முடியும்?
Alai sal laahu bi-ahkamil haakimeen
தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?
القرآن الكريم: | التين |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | At-Tin |
ஸூரா: | 95 |
வசனம்: | 8 |
Total Words: | 34 |
Total Characters: | 150 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 28 |
Starting from verse: | 6098 |