Wa maa yughnee 'anhu maaluhooo izaa taraddaa
அவன் (நரகத்தில்) விழுந்துவிட்டால், அவனுடைய பொருள் அவனுக்கு (யாதொரு) பயனுமளிக்காது.
Inna 'alainaa lal hudaa
நிச்சயமாக நேர்வழியை அறிவிப்பதுதான் நமது கடமையாகும்.
Wa inna lanaa lal Aakhirata wal oolaa
நிச்சயமாக இம்மையும், மறுமையும் நம்முடையனவே!
Fa anzartukum naaran talazzaa
(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்.
Laa yaslaahaaa illal ashqaa
மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்.
Allazee kazzaba wa tawallaa
அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.
Wa sa yujannnabuhal atqaa
இறை அச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
Allazee yu'tee maalahoo yatazakkaa
(அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
Wa maa li ahadin 'indahoo min ni'matin tujzaaa
அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும்,
Illab tighaaa'a wajhi rabbihil a 'laa
மிக்க மேலான தன் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பியே (தானம் கொடுப்பார்).