Wallaili izaa yaghshaa
(அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
Wannahaari izaa tajalla
பிரகாசமுள்ள பகலின் மீது சத்தியமாக!
Wa maa khalaqaz zakara wal unthaa
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!
Inna sa'yakum lashattaa
(மனிதர்களே!) நிச்சயமாக உங்களுடைய முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன.
Fa ammaa man a'taa wattaqaa
ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,
Wa saddaqa bil husnaa
(இந்த மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் (நல்லதென்றே) உண்மையாக்கி வைக்கின்றாரோ,
Fasanu yassiruhoo lilyusraa
அவர் சுகமடைவதற்குள்ள (சுவனபதியின்) வழியை நாம் அவருக்கு எளிதாக்கித் தருவோம்.
Wa ammaa mam bakhila wastaghnaa
எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது,
Wa kazzaba bil husnaa
(இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கின்றானோ,
Fasanu yassiruhoo lil'usraa
அவனுக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்.
القرآن الكريم: | الليل |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Lail |
ஸூரா: | 92 |
வசனம்: | 21 |
Total Words: | 71 |
Total Characters: | 310 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 9 |
Starting from verse: | 6058 |