Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௧௦௮

لَا تَقُمْ فِيْهِ اَبَدًاۗ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِۗ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْاۗ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ   ( التوبة: ١٠٨ )

(Do) not stand
لَا تَقُمْ
நின்று வணங்காதீர்
in it
فِيهِ
அதில்
ever
أَبَدًاۚ
ஒரு போதும்
A masjid
لَّمَسْجِدٌ
மஸ்ஜிதுதான்
founded
أُسِّسَ
அடித்தளமிடப்பட்டது
on the righteousness
عَلَى ٱلتَّقْوَىٰ
இறையச்சத்தின் மீது
from (the) first
مِنْ أَوَّلِ
இருந்து/முதல்
day
يَوْمٍ
நாள்
(is) more worthy
أَحَقُّ
மிகத் தகுதியானது
that you stand
أَن تَقُومَ
நீர் நின்று வணங்குவதற்கு
in it
فِيهِۚ
அதில்
Within it
فِيهِ
அதில்
(are) men
رِجَالٌ
ஆண்கள்
who love
يُحِبُّونَ
விரும்புகின்றர்
to purify themselves
أَن يَتَطَهَّرُوا۟ۚ
தாங்கள் அதிகம் பரிசுத்தமாகுவதை
and Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
loves
يُحِبُّ
நேசிக்கிறான்
the ones who purify themselves
ٱلْمُطَّهِّرِينَ
மிக பரிசுத்தமானவர்களை

Laa taqum feehi abadaa; lamasjidun ussisa 'alat taqwaa min awwali yawmin ahaqqu an taqooma feeh; feehi rijaaluny yuhibbona ai yatatahharoo, wallaahu yuhibbul mmuttah hireen (at-Tawbah 9:108)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) நீங்கள் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட பள்ளிதான் நீங்கள் நின்று தொழ(வும் தொழ வைக்கவும்) மிகத் தகுதியுடையது. அதிலிருக்கும் மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தவான்களையே நேசிக்கின்றான்.

English Sahih:

Do not stand [for prayer] within it – ever. A mosque founded on righteousness from the first day is more worthy for you to stand in. Within it are men who love to purify themselves; and Allah loves those who purify themselves. ([9] At-Tawbah : 108)

1 Jan Trust Foundation

ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.