Skip to main content

ٱنفِرُوا۟
புறப்படுங்கள்
خِفَافًا
இலகுவானவர்களாக
وَثِقَالًا
இன்னும் கனமானவர்களாக
وَجَٰهِدُوا۟
இன்னும் போரிடுங்கள்
بِأَمْوَٰلِكُمْ
உங்கள் செல்வங்களாலும்
وَأَنفُسِكُمْ
உங்கள் உயிர்களாலும்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
ذَٰلِكُمْ
இதுவே
خَيْرٌ
மிகச் சிறந்தது
لَّكُمْ
உங்களுக்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تَعْلَمُونَ
நீங்கள் அறிபவர்களாக

Infiroo khifaafanw wa siqaalanw wa jaahidoo bi amwaalikum wa anfusikum fee sabeelil laah; zaalikum khairul lakum in kuntum ta'lamoon

நீங்கள் சொற்ப ஆயுதமுடையவர்களாக இருந்தாலும் சரி, முழு ஆயுதபாணிகளாக இருந்தாலும் சரி, நீங்கள் (கால்நடையாகவோ குதிரை மீதேறியோ) புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் உங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாய் இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று.

Tafseer

لَوْ كَانَ
இருந்திருந்தால்
عَرَضًا
பொருளாக
قَرِيبًا
அருகில் உள்ளது
وَسَفَرًا
இன்னும் பயணமாக
قَاصِدًا
சமீபமானது
لَّٱتَّبَعُوكَ
பின்பற்றியிருப்பார்கள்/உம்மை
وَلَٰكِنۢ
எனினும்
بَعُدَتْ
தூரமாகி விட்டது
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلشُّقَّةُۚ
எல்லை
وَسَيَحْلِفُونَ بِٱللَّهِ
இன்னும் சத்தியம் செய்கிறார்கள்/அல்லாஹ்வின் மீது
لَوِ ٱسْتَطَعْنَا
நாங்கள் ஆற்றல் பெற்றிருந்தால்
لَخَرَجْنَا
வெளியேறிஇருப்போம்
مَعَكُمْ
உங்களுடன்
يُهْلِكُونَ
அழிக்கின்றனர்
أَنفُسَهُمْ
தங்களையே
وَٱللَّهُ
அல்லாஹ்
يَعْلَمُ
அறிவான்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்

Law kaana 'aradan qareebanw wa safaran qaasidal lattaba'ooka wa laakim ba'udat 'alaihimush shuqqah; wa sayahlifoona billaahi lawis tata'naa lakharajnaa ma'akum; yuhlikoona anfusahum wal laahu ya'lamu innahum lakaa ziboon

(நபியே!) எளிதில் ஏதும் பொருள் கிடைக்கக்கூடியதாயிருந்து (நீங்கள் சென்ற இடம்) சமீபத்திலும் இருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் உங்களைப் பின்பற்றி வந்தே இருப்பார்கள். எனினும் (நீங்கள் சென்ற இடம் அவர்களுக்கு) வெகு தூரமாகி பெரும் சிரமமாகத் தோன்றியது. (ஆதலால்தான் அவர்கள் உங்களைப் பின்பற்றி வரவில்லை. ஆகவே, நீங்கள் அவர்களை நோக்கி "நீங்கள் ஏன் வரவில்லை" எனக் கேட்பீராயின் அதற்கவர்கள்) "எங்களுக்குச் சாத்தியப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களுடன் வந்திருப்போம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து கூறு)வார்கள். (இவ்வாறு பொய் சத்தியம் செய்யும்) அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

عَفَا
மன்னிப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَنكَ
உம்மை
لِمَ أَذِنتَ
ஏன்அனுமதியளித்தீர்?
لَهُمْ
அவர்களுக்கு
حَتَّىٰ
வரை
يَتَبَيَّنَ
தெளிவாகி
لَكَ
உமக்கு
ٱلَّذِينَ صَدَقُوا۟
உண்மை உரைத்தவர்கள்
وَتَعْلَمَ
இன்னும் நீர் அறிகின்ற
ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களை

'Afal laahu 'anka lima azinta lahum hattaa yatabai yana lakal lazeena sadaqoo wa ta'lamal kaazibeen

(நபியே!) அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! (அவர்கள் உங்களுடன் போருக்கு வராது தங்கிவிட உங்களிடம் அனுமதி கோரிய சமயத்தில்) நீங்கள் ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்கள்? (அனுமதி அளிக்காது இருந்திருந்தால்) அவர்களில் உண்மை சொல்பவர்கள் யார் என்பதையும் பொய் சொல்பவர்கள் யார் என்பதையும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.

Tafseer

لَا يَسْتَـْٔذِنُكَ
அனுமதி கோர மாட்டார்(கள்)/உம்மிடம்
ٱلَّذِينَ يُؤْمِنُونَ
எவர்கள்/நம்பிக்கை கொள்வார்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
أَن يُجَٰهِدُوا۟
அவர்கள் போரிடுவதிலிருந்து
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் செல்வங்களால்
وَأَنفُسِهِمْۗ
இன்னும் தங்கள் உயிர்களால்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களை

Laa yastaazinukal lazeena yu'minoona billaahi wal Yawmil Aakhiri ai yujaa hidoo bi amwaalihim wa anfusihim; wallaahu 'aleemum bilmut taqeen

அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியாமலிருக்க உங்களிடம் அனுமதி கோரவே மாட்டார்கள். இறையச்சம் உடைய(இ)வர்களை அல்லாஹ் நன்கறிவான்.

Tafseer

إِنَّمَا
எல்லாம்
يَسْتَـْٔذِنُكَ
அனுமதி கோருவார்(கள்)/உம்மிடம்
ٱلَّذِينَ
எவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
وَٱرْتَابَتْ
இன்னும் சந்தேகித்தன
قُلُوبُهُمْ
உள்ளங்கள்/அவர்களுடைய
فَهُمْ
எனவே, அவர்கள்
فِى رَيْبِهِمْ
தங்கள் சந்தேகத்தில்
يَتَرَدَّدُونَ
தடுமாறுகின்றனர்

Innamaa yastaazinukal lazeena laa yu'minoona billaahi wal Yawmil Aakhiri wartaabat quloobuhum fahum fee raibihim yataraddadoon

(போருக்கு வராதிருக்க) உங்களிடம் அனுமதி கோருவதெல்லாம், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உண்மை யாகவே நம்பிக்கை கொள்ளாதவர்கள்தாம். அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து விட்டன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்திலேயே சிக்கித் தடுமாறுகின்றனர்.

Tafseer

وَلَوْ أَرَادُوا۟
அவர்கள் நாடியிருந்தால்
ٱلْخُرُوجَ
வெளியேறுவதை
لَأَعَدُّوا۟
ஏற்பாடு செய்திருப்பார்கள்
لَهُۥ
அதற்கு
عُدَّةً
ஒரு தயாரிப்பை
وَلَٰكِن
எனினும்
كَرِهَ
வெறுத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱنۢبِعَاثَهُمْ
அவர்கள் புறப்படுவதை
فَثَبَّطَهُمْ
ஆகவே தடுத்து விட்டான்/அவர்களை
وَقِيلَ
இன்னும் கூறப்பட்டது
ٱقْعُدُوا۟
தங்கி விடுங்கள்
مَعَ
உடன்
ٱلْقَٰعِدِينَ
தங்குபவர்கள்

Wa law araadul khurooja la-'addoo lahoo 'uddatanw wa laakin karihal laahum bi'aasahum fasabbatahum wa qeelaq 'udoo ma'al qaa'ideen

அவர்கள் (உங்களுடன் போருக்கு) புறப்பட (உண்மை யாகவே) எண்ணியிருந்தால் அதற்கு வேண்டிய தயாரிப்புகளை (முன்னதாகவே) அவர்கள் செய்திருப்பார்கள். எனினும் (உங்களுடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து அவர்கள் புறப்படாது தடை செய்துவிட்டான். ஆகவே (முதியோர் சிறியோர் பெண்கள் போன்ற, போருக்கு வரமுடியாது வீட்டில்) தங்குபவர்களுடன் நீங்களும் தங்கிவிடுங்கள் என்று (அவர்களுக்குக்) கூறப்பட்டு விட்டது (போலும்.)

Tafseer

لَوْ خَرَجُوا۟
அவர்கள் வெளியேறி இருந்தால்
فِيكُم
உங்களுடன்
مَّا
அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்
زَادُوكُمْ
அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள் உங்களுக்கு
إِلَّا
தவிர
خَبَالًا
தீமையை
وَلَأَوْضَعُوا۟
இன்னும் விரைந்திருப்பார்கள்
خِلَٰلَكُمْ
உங்களுக்கிடையில்
يَبْغُونَكُمُ
தேடுவார்கள்/உங்களுக்கு
ٱلْفِتْنَةَ
குழப்பத்தை
وَفِيكُمْ
இன்னும் உங்களுடன்
سَمَّٰعُونَ
ஒற்றர்கள்
لَهُمْۗ
அவர்களுக்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
بِٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை

Law kharajoo feekum maa zaadookum ilaa Khabaalanw wa la awda'oo khilaalakum yabghoona kumul fitnata wa feekum sammaa'oona lahum; wallaahu 'aleemum biz zaalimeen

அவர்கள் உங்களுடன் வந்திருந்தால் ஒழுங்கீனத்தைத் தவிர (வேறு எதனையும்) உங்களுக்கு அதிகரிக்கச் செய்திருக்க மாட்டார்கள். விஷமத்தைக் கருதி உங்கள் மத்தியில் அலங்கோலத்தையும் உண்டுபண்ணி இருப்பார்கள். அவர்களுடைய ஒற்றர்களும் உங்களுடன் இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்காரர்களை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

لَقَدِ ٱبْتَغَوُا۟
தேடியுள்ளனர்
ٱلْفِتْنَةَ
குழப்பத்தை
مِن قَبْلُ
முன்னர்
وَقَلَّبُوا۟ لَكَ
இன்னும் புரட்டினர்/உமக்கு
ٱلْأُمُورَ
காரியங்களை
حَتَّىٰ
இறுதியாக
جَآءَ ٱلْحَقُّ
வந்தது/சத்தியம்
وَظَهَرَ
இன்னும் வென்றது
أَمْرُ
கட்டளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَهُمْ
அவர்கள் இருந்தும்
كَٰرِهُونَ
வெறுப்பவர்களாக

Laqadib taghawul fitnata min qablu wa qallaboo lakal umoora hattaa jaaa'al haqqu wa zahara amrul laahi wa hum kaarihoon

(உங்களுக்கு) வெற்றி கிடைக்கும் வரையில் இதற்கு முன்னரும் அவர்கள் விஷமம் செய்யக் கருதி உங்கள் காரியங்களை (தலைகீழாய்)ப் புரட்டிக்கொண்டே இருந்தனர். (உங்களுடைய வெற்றியை) அவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ்வுடைய கட்டளையே வெற்றியடைந்தது.

Tafseer

وَمِنْهُم
அவர்களில்
مَّن
எவர்
يَقُولُ
கூறுகிறார்
ٱئْذَن
அனுமதி தருவீராக
لِّى
எனக்கு
وَلَا تَفْتِنِّىٓۚ
சோதிக்காதீர்/என்னை
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
فِى ٱلْفِتْنَةِ
சோதனையில்
سَقَطُوا۟ۗ
விழுந்தனர்
وَإِنَّ جَهَنَّمَ
நிச்சயமாக நரகம்
لَمُحِيطَةٌۢ
சூழ்ந்தே உள்ளது
بِٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களை

Wa minhum mai yaqoolu' zal lee wa laa taftinneee; alaa fil fitnati saqatoo; wa inna Jahannama lamuheetatum bil kaafireen

(நபியே! "போருக்கு அழைத்து) நீங்கள் என்னைச் சோதனைக்குள்ளாக்காமலே (வீட்டில் நான் தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கோருபவர்களும் அவர்களில் சிலர் இருக்கின்றனர். (எனினும் இவ்வாறு கோரும்) அவர்கள் (கஷ்டமான பல) சோதனைகளிலேயே மூழ்கிக் கிடக்கவில்லையா? நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

Tafseer

إِن تُصِبْكَ
அடைந்தால்/உம்மை
حَسَنَةٌ
ஒரு நன்மை
تَسُؤْهُمْۖ
துக்கப்படுத்துகிறது/அவர்களை
وَإِن تُصِبْكَ
இன்னும் அடைந்தால்/உம்மை
مُصِيبَةٌ
ஒரு சோதனை
يَقُولُوا۟
கூறுகின்றனர்
قَدْ أَخَذْنَآ
எடுத்துக் கொண்டோம்
أَمْرَنَا
எங்கள் காரியத்தை
مِن قَبْلُ
முன்னரே
وَيَتَوَلَّوا۟
திரும்புகின்றனர்
وَّهُمْ
அவர்கள்
فَرِحُونَ
மகிழ்ச்சியடைந்தவர்களாக

in tusibka hasanatun tasu'hum; wa in tusibka museebatuny yaqooloo qad akhaznaaa amranaa min qablu wa yatawallaw wa hum farihoon

(நபியே!) உங்களுக்கு யாதொரு நன்மையேற்படின் (அது) அவர்களுக்குத் துன்பத்தைத் தருகின்றது. உங்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டாலோ "நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் (உங்களைச் சம்பந்தப்படுத்தாது) ஏற்கனவே எச்சரிக்கையாய் இருந்து கொண்டோம்" என்று கூறி மிக்க மகிழ்ச்சியுடன் (உங்களை விட்டு) விலகிச் செல்கின்றனர்.

Tafseer