Skip to main content
bismillah

سَبِّحِ
துதித்து தூய்மைப் படுத்துவீராக
ٱسْمَ
பெயரை
رَبِّكَ
உம் இறைவனின்
ٱلْأَعْلَى
மிக உயர்ந்தவனாகிய

Sabbihisma Rabbikal A'laa

(நபியே!) மிக மேலான உங்களது இறைவனின் திருப்பெயரை நீங்கள் புகழ்ந்து துதி செய்வீராக;

Tafseer

ٱلَّذِى خَلَقَ
அவன்தான் படைத்தான்
فَسَوَّىٰ
இன்னும் ஒழுங்கு படுத்தினான்

Allazee khalaqa fasawwaa

அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, அவைகளை ஒழுங்குபடுத்தியவன்.

Tafseer

وَٱلَّذِى قَدَّرَ
அவன்தான் நிர்ணயம் செய்தான்
فَهَدَىٰ
இன்னும் வழிகாட்டினான்

Wallazee qaddara fahadaa

அவனே (அவைகளுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவைகளை அடையக்கூடிய) வழிகளையும் அவைகளுக்கு அறிவித்தான்.

Tafseer

وَٱلَّذِىٓ أَخْرَجَ
அவன்தான் வெளியாக்கினான்
ٱلْمَرْعَىٰ
பசுமையான புல்லை

Wallazeee akhrajal mar'aa

அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகின்றான்.

Tafseer

فَجَعَلَهُۥ
இன்னும் அதை ஆக்கினான்
غُثَآءً
சருகாக
أَحْوَىٰ
கருத்த (காய்ந்த)

Faja'alahoo ghusaaa'an ahwaa

பின்னர் அவைகளை உலர்ந்த சருகுகளாக்குகின்றான்.

Tafseer

سَنُقْرِئُكَ
உமக்குக் கற்பிப்போம்
فَلَا تَنسَىٰٓ
ஆகவே நீர் மறக்க மாட்டீர்

Sanuqri'uka falaa tansaaa

(நபியே! இந்தக் குர்ஆனை) நாம் உங்களுக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலன்றி, (அதில் யாதொன்றையும்) நீங்கள் மறக்கமாட்டீர்கள்.

Tafseer

إِلَّا
தவிர
مَا شَآءَ
நாடியதை
ٱللَّهُۚ
அல்லாஹ்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
يَعْلَمُ
அறிவான்
ٱلْجَهْرَ
வெளிப்படையானதை
وَمَا يَخْفَىٰ
இன்னும் மறைந்திருப்பதை

Illaa maa shaaa'al laah; innahoo ya'lamul jahra wa maa yakhfaa

நிச்சயமாக அவன் மறைந்திருப்பவைகளையும் வெளிப்படை யானதையும் நன்கறிகின்றான்.

Tafseer

وَنُيَسِّرُكَ
உமக்கு இலகுவாக்குவோம்
لِلْيُسْرَىٰ
சொர்க்கப் பாதையை

Wa nu-yassiruka lilyusraa

நம்முடைய பாதையை நாம் உங்களுக்கு எளிதாக்கித் தருவோம்.

Tafseer

فَذَكِّرْ
ஆகவே, அறிவுரை கூறுவீராக
إِن نَّفَعَتِ
பலனளித்தால்
ٱلذِّكْرَىٰ
அறிவுரை

Fazakkir in nafa'atizzikraa

ஆகவே, நல்லுபதேசம் (மக்களுக்குப்) பயனளிக்கும் வரையில் நீங்கள் உபதேசித்துக் கொண்டே வாருங்கள்.

Tafseer

سَيَذَّكَّرُ
அறிவுரை பெறுவார்
مَن
எவர்
يَخْشَىٰ
பயப்படுகிறார்

Sa yazzakkaru maiyakhshaa

நிச்சயமாக எவர் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகின்றாரோ அவன், (இதனைக் கொண்டு) நல்லறிவை அடைவான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் அஃலா
القرآن الكريم:الأعلى
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-A'la
ஸூரா:87
வசனம்:19
Total Words:72
Total Characters:291
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:8
Starting from verse:5948