Izas samaaa'un shaqqat
(உலக முடிவின்போது) வானம் பிளந்துவிடும்,
Wa azinat li Rabbihaa wa huqqat
அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும். (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
Wa izal ardu muddat
மேலும் பூமி விரிக்கப்பட்டுவிடும்.
Wa alqat maa feehaa wa takhallat
அது தன்னிடம் உள்ளவைகளையெல்லாம் எறிந்து வெறுமனேயாகிவிடும்.
Wa azinat li Rabbihaa wa huqqat
அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும். (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
Yaaa ayyuhal insaanu innaka kaadihun ilaa Rabbika kad han famulaaqeeh
மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரையில் (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டுக்) கஷ்டத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கின்றாய். (பின்னர் மறுமையில்) அவனை நீ சந்திக்கின்றாய்.
Fa ammaa man ootiya kitaabahoo biyameenih
ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய ஏடு கொடுக்கப்படுகின்றதோ,
Fasawfa yuhaasabu hi saabai yaseeraa
அவன் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
Wa yanqalibu ilaaa ahlihee masrooraa
அவர் சந்தோஷப்பட்டவனாக(ச் சுவனபதியிலுள்ள) தன்னுடைய குடும்பத்தார்களிடம் திரும்புவான்.
Wa ammaa man ootiya kitaabahoo waraaa'a zahrih
எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,
القرآن الكريم: | الإنشقاق |
---|---|
ஸஜ்தா (سجدة): | 21 |
ஸூரா (latin): | Al-Insyiqaq |
ஸூரா: | 84 |
வசனம்: | 25 |
Total Words: | 107 |
Total Characters: | 430 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 83 |
Starting from verse: | 5884 |