Skip to main content

وَإِذَا ٱنقَلَبُوٓا۟
இன்னும் அவர்கள் திரும்பும் போது
إِلَىٰٓ أَهْلِهِمُ
தங்கள் குடும்பத்தாரிடம்
ٱنقَلَبُوا۟
திரும்புகிறார்கள்
فَكِهِينَ
மகிழ்ச்சியாளர்களாக

Wa izan qalabooo ilaaa ahlihimun qalaboo fakiheen

(அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தார்களிடம் சென்றுவிட்டபோதிலும், (பின்னும்) இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர்.

Tafseer

وَإِذَا رَأَوْهُمْ
இன்னும் அவர்கள் அவர்களைப் பார்க்கும் போது
قَالُوٓا۟
கூறுகிறார்கள்
إِنَّ
நிச்சயமாக
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
لَضَآلُّونَ
வழிதவறியவர்கள்தான்

Wa izaa ra awhum qaalooo inna haaa'ulaaa'i ladaaal loon

(வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) "நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்" என்றும் கூறுகின்றனர்.

Tafseer

وَمَآ أُرْسِلُوا۟
இன்னும் இவர்கள் அனுப்பப்படவில்லையே
عَلَيْهِمْ
அவர்கள் மீது
حَٰفِظِينَ
கண்காணிப் பவர்களாக

Wa maaa ursiloo 'alaihim haafizeen

(நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே!

Tafseer

فَٱلْيَوْمَ
ஆகவே, இன்று
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்கள்
مِنَ ٱلْكُفَّارِ
நிராகரிப்பாளர்களைப் பார்த்து
يَضْحَكُونَ
சிரிப்பார்கள்

Fal yawmal lazeena aamanoo minal kuffaari yadhakoon

எனினும், (மறுமை நாளாகிய) இன்றைய தினம் நம்பிக்கை கொண்டவர்கள் அந்நிராகரிப்பவர்களைக் கண்டு சிரிக்கின்றனர்.

Tafseer

عَلَى
மீது
ٱلْأَرَآئِكِ
கட்டில்கள்
يَنظُرُونَ
பார்ப்பார்கள்

'Alal araaa'iki yanzuroon

(சுவனபதியிலுள்ள சிறந்த) ஆசனங்கள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்துகொண்டு, இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக்கொண்டு,

Tafseer

هَلْ ثُوِّبَ
கூலி கொடுக்கப்பட்டார்களா?
ٱلْكُفَّارُ
நிராகரிப்பாளர்கள்
مَا
எது
كَانُوا۟
இருந்தார்கள்
يَفْعَلُونَ
செய்கிறார்கள்

Hal suwwibal kuffaaru maa kaanoo yaf'aloon

(மறுமையை) நிராகரித்த இவர்களுக்கு, இவர்களுடைய செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பார்கள்.)

Tafseer