Aizaa kunna 'izaa man-nakhirah
(அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர்.
Qaalu tilka izan karratun khaasirah.
"அவ்வாறாயின், அது பெரும் கஷ்டமான மீட்சிதான் என்றும் அவர்கள் (பரிகாசமாகக்)" கூறுகின்றனர்.
Fa inna ma hiya zajratuw-waahida
(இது அவர்களுக்கு அசாத்தியமாகத் தோன்றலாம்; எனினும், நமக்கோ) அது ஓர் அதட்டல் (ஒரு உறுத்தல், ஒரு சப்தம்)தான்.
Faizaa hum biss saahirah
உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள்.
Hal ataaka hadeethu Musaa
(நபியே!) மூஸாவுடைய செய்தி உங்களுக்கு எட்டியதா?
Iz nadaahu rabbuhu bil waadil-muqad dasi tuwa
"துவா" என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்து,
Izhab ilaa fir'auna innahu taghaa.
"நிச்சயமாக ஃபிர்அவ்ன் வரம்பு மீறிவிட்டான். நீங்கள் அவனிடம் சென்று,
Faqul hal laka ilaa-an tazakka.
(அவனை நோக்கிப்) (பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம்தானா?
Wa ahdi yaka ila rabbika fatakh sha
(அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கறிவிக்கின்றேன். அவனுக்கு நீ பயந்துகொள்" என்று கூறுங்கள் (என, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்).
Fa araahul-aayatal kubra.
(மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார்.