Skip to main content

إِنَّ
நிச்சயமாக
لِلْمُتَّقِينَ
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
مَفَازًا
வெற்றி

Inna lil mutta qeena mafaaza

ஆயினும், இறை அச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சுவர்க்கம் என்னும்) இடம் உண்டு.

Tafseer

حَدَآئِقَ
தோட்டங்கள்
وَأَعْنَٰبًا
இன்னும் திராட்சைகள்

Hadaa-iqa wa a'anaa ba

(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.

Tafseer

وَكَوَاعِبَ
இன்னும் மார்பு நிமிர்ந்த கன்னிகள்
أَتْرَابًا
சம வயதுடைய(வர்கள்)

Wa kaawa 'iba at raaba

(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,

Tafseer

وَكَأْسًا
இன்னும் கிண்ணம்
دِهَاقًا
நிரம்பிய

Wa ka'san di haaqa

(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).

Tafseer

لَّا يَسْمَعُونَ
செவியுறமாட்டார்கள்
فِيهَا
அதில்
لَغْوًا
வீண் பேச்சை
وَلَا كِذَّٰبًا
இன்னும் பொய்ப்பிப்பதை

Laa yasma'oona fiha lagh waw walaa kizzaba

அங்கு அவர்கள் யாதொரு வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.

Tafseer

جَزَآءً
கூலியாக
مِّن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
عَطَآءً
கொடையாக
حِسَابًا
கணக்கிடப்பட்ட

Jazaa-am mir-rabbika ataa-an hisaaba

(இவைகளெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உங்களது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்.

Tafseer

رَّبِّ
அதிபதியாகிய
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَمَا بَيْنَهُمَا
இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்
ٱلرَّحْمَٰنِۖ
பேரருளாளனாகிய
لَا يَمْلِكُونَ
சக்தி பெறமாட்டார்கள்/ உரிமை பெறமாட்டார்கள்
مِنْهُ
அவனிடம்
خِطَابًا
பேசுவதற்கு

Rabbis samaa waati wal ardi wa maa baina humar rahmaani laa yam likoona minhu khi taaba

அவனே வானங்கள், பூமி, இவைகளுக்கு மத்தியிலுள்ளஅனைத்தின் சொந்தக்காரன்; அளவற்ற அருளாளன். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்திபெற மாட்டார்கள்.

Tafseer

يَوْمَ
நாளில்
يَقُومُ
நிற்கின்ற
ٱلرُّوحُ
ஜிப்ரீல்
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
صَفًّاۖ
வரிசையாக
لَّا يَتَكَلَّمُونَ
பேசமாட்டார்கள்
إِلَّا مَنْ
தவிர/எவர்
أَذِنَ
அனுமதித்தான்
لَهُ
அவருக்கு
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
وَقَالَ
இன்னும் கூறுவார்
صَوَابًا
சரியானதையே

Yauma yaqoo mur roohu wal malaa-ikatu saf-fal laa yata kalla moona illa man azina lahur rahmaanu wa qaala sawaaba

ஜிப்ரயீலும், மலக்குகளும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து "சரி! பேசும்" எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.

Tafseer

ذَٰلِكَ
அதுதான்
ٱلْيَوْمُ
நாள்
ٱلْحَقُّۖ
உண்மையான
فَمَن
ஆகவே யார்
شَآءَ
நாடுவாரோ
ٱتَّخَذَ
ஆக்கிக்கொள்வார்
إِلَىٰ رَبِّهِۦ
தம் இறைவனருகில்
مَـَٔابًا
தங்குமிடத்தை

Zaalikal yaumul haqqu faman shaa-at ta khaaza ill-laa rabbihi ma-aaba

இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَنذَرْنَٰكُمْ
உங்களை எச்சரித்தோம்
عَذَابًا
ஒரு வேதனையைப் பற்றி
قَرِيبًا
சமீபமான
يَوْمَ
நாளில்
يَنظُرُ
பார்க்கின்ற
ٱلْمَرْءُ
மனிதன்
مَا قَدَّمَتْ
முற்படுத்தியவற்றை
يَدَاهُ
தனது இரு கரங்கள்
وَيَقُولُ
இன்னும் கூறுவான்
ٱلْكَافِرُ
நிராகரிப்பாளன்
يَٰلَيْتَنِى كُنتُ
நான் ஆகவேண்டுமே
تُرَٰبًۢا
மண்ணாக

In naa anzar naakum azaaban qareebaiy-yauma yan zurul marr-u maa qaddamat yadaahu wa ya qoolul-kaafiru yaa lai tanee kuntu turaaba

சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கின்றோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் இரு கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்!

Tafseer