Skip to main content

عَٰلِيَهُمْ
அவர்களுக்கு மேல்
ثِيَابُ
ஆடைகளும்
سُندُسٍ
மென்மையான பட்டும்
خُضْرٌ
பச்சை நிற
وَإِسْتَبْرَقٌۖ
இன்னும் தடிப்பான பட்டு
وَحُلُّوٓا۟
இன்னும் அலங்கரிக்கப் படுவார்கள்
أَسَاوِرَ
காப்புகளால்
مِن فِضَّةٍ
வெள்ளியினால்
وَسَقَىٰهُمْ
புகட்டுவான்/ அவர்களுக்கு
رَبُّهُمْ
அவர்களின் இறைவன்
شَرَابًا
பானத்தை
طَهُورًا
மிகத் தூய்மையான

'Aaliyahum siyaabu sundusin khudrunw wa istabraq, wa hullooo asaawira min fiddatinw wa saqaahum Rabbuhum sharaaban tahooraa

அவர்கள் தேகத்தின் மேல் மெல்லிய பசும் பட்டாடையோ அல்லது தடிப்பான (பல நிற) பட்டாடையோ இருக்கும். (விருதாக) வெள்ளிக்காப்பும் அவர்களுக்கு அணியப்படும். (இவைகளன்றிப்) பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டுவான்

Tafseer

إِنَّ
நிச்சயமாக
هَٰذَا
இவை
كَانَ
இருக்கும்
لَكُمْ
உங்களுக்கு
جَزَآءً
கூலியாக
وَكَانَ
இன்னும் இருக்கும்
سَعْيُكُم
உங்கள் உழைப்புகள்
مَّشْكُورًا
நன்றிஅறியப்பட்டதாக

Innaa haazaa kaana lakum jazz 'anw wa kaana sa'yukum mashkooraa

(அவர்களை நோக்கி) "நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக கொடுக்கப்பட்டது; உங்களுடைய முயற்சியும் அங்கீகரிக்கப்பட்டது" (என்றும் கூறுவான்).

Tafseer

إِنَّا
நிச்சயமாக
نَحْنُ
நாம்தான்
نَزَّلْنَا
இறக்கினோம்
عَلَيْكَ
உம்மீது
ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
تَنزِيلًا
கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்

Innaa nahnu nazzalnaa 'alaikal quraana tanzeelaa

(நபியே!) நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனைச் சிறிது சிறிதாகவே உங்கள்மீது இறக்கி வைக்கின்றோம்.

Tafseer

فَٱصْبِرْ
நீர் சகித்திருப்பீராக!
لِحُكْمِ
தீர்ப்புக்காக
رَبِّكَ
உமது இறைவனின்
وَلَا تُطِعْ
நீர் கீழ்ப்படியாதீர்!
مِنْهُمْ
அவர்களில்
ءَاثِمًا
பாவிக்கும்
أَوْ
அல்லது
كَفُورًا
நிராகரிப்பாளருக்கும்

Fasbir lihukmi Rabbika wa laa tuti' minhum aasiman aw kafooraa

ஆகவே, நீங்கள் பொறுத்திருந்து உங்களது இறைவனின் கட்டளையை (பெற்றுக் கொள்ளுங்கள்.) அவர்களிலுள்ள யாதொரு பாவியையும், நன்றி கெட்டவர்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள்.

Tafseer

وَٱذْكُرِ
நினைவு கூர்வீராக
ٱسْمَ رَبِّكَ
பெயரை/ உமது இறைவனின்
بُكْرَةً
காலையிலும்
وَأَصِيلًا
மாலையிலும்

Wazkuris ma Rabbika bukratanw wa aseelaa

காலையிலும் மாலையிலும் உங்களது இறைவனின் திருநாமத்தை(க் கூறி) நினைவுகூருங்கள்.

Tafseer

وَمِنَ ٱلَّيْلِ
இரவில்
فَٱسْجُدْ
சிரம் பணிந்து தொழுவீராக!
لَهُۥ
அவனுக்காக
وَسَبِّحْهُ
இன்னும் அவனை தொழுது வணங்குவீராக!
لَيْلًا
இரவில்
طَوِيلًا
நீண்ட நேரம்

Wa minal laili fasjud lahoo wa sabbihhu lailan taweelaa

இரவிலும், அவனுக்குச் சிரம் பணிந்து வணங்கி, இரவு நேரத்தில் நெடு நேரம் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக!

Tafseer

إِنَّ هَٰٓؤُلَآءِ
நிச்சயமாக/இவர்கள்
يُحِبُّونَ
நேசிக்கின்றனர்
ٱلْعَاجِلَةَ
உலக வாழ்க்கையை
وَيَذَرُونَ
இன்னும் விட்டுவிடுகின்றனர்
وَرَآءَهُمْ
அவர்களுக்கு முன்னர்
يَوْمًا
ஒரு நாளை
ثَقِيلًا
மிக கனமான

Inna haaa'ulaa'i yuhibboona 'aajilata wa yazaroona waraaa'ahum yawman saqeelaa

நிச்சயமாக இந்த மக்கள் இம்மையை விரும்பி, அவர்களுக்கு முன்னிருக்கும் (மறுமையின்) கடினமான நாளைப் புறக்கணித்து விடுகின்றனர்.

Tafseer

نَّحْنُ
நாம்தான்
خَلَقْنَٰهُمْ
அவர்களை படைத்தோம்
وَشَدَدْنَآ
இன்னும் உறுதிப்படுத்தினோம்
أَسْرَهُمْۖ
அவர்களின் படைப்பை
وَإِذَا شِئْنَا
நாம் நாடினால்
بَدَّلْنَآ
பதிலாக கொண்டுவருவோம்
أَمْثَٰلَهُمْ
அவர்கள் போன்றவர்களை
تَبْدِيلًا
பதிலாக

Nahnu khalaqnaahum wa shadadnaaa asrahum wa izaa shi'naa baddalnaaa amsaala hum tabdeelaa

நாம்தாம் அவர்களைப் படைத்தோம். நாம்தாம் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (அவர்களை) மாற்றி அவர்களைப் போன்ற மற்றவர்களை (அவர்கள் இடத்தில்) அமர்த்திவிடுவோம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
هَٰذِهِۦ
இது
تَذْكِرَةٌۖ
ஓர் அறிவுரையாகும்
فَمَن شَآءَ
யார் நாடுகிறாரோ
ٱتَّخَذَ
அவன் ஏற்படுத்திக் கொள்ளட்டும்
إِلَىٰ رَبِّهِۦ
தன் இறைவனின் பக்கம்
سَبِيلًا
ஒரு பாதையை

Inna haazihee tazkiratun fa man shaaa'at takhaza ilaa rabbihee sabeela

நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும். விரும்பியவர் தன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய (நேரான இதன்) வழியைப் பலமாகப் பிடித்துக் கொள்ளவும்.

Tafseer

وَمَا تَشَآءُونَ
நீங்கள் நாடமுடியாது
إِلَّآ
தவிர
أَن يَشَآءَ
நாடினால்
ٱللَّهُۚ
அல்லாஹ்
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கின்றான்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
حَكِيمًا
மகா ஞானவானாக

Wa maa tashaaa'oona illaa anyyashaaa'al laah; innal laahaa kaana'Aleeman Hakeema

எனினும், அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மையையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer