Wa annaa minnas saalihoona wa minnaa doona zaalika kunnaa taraaa'ilqa qidadaa
நிச்சயமாக நம்மில் நல்லவர்களும் சிலர் இருக்கின்றனர்; மற்றவர்களும் நம்மில் சிலர் இருக்கின்றனர். நாம் பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டோம்.
Wa annaa zanannaaa al lan nu'jizal laaha fil ardi wa lan nu'jizahoo harabaa
நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது என்பதையும், (பூமியிலிருந்து) ஓடி அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்து கொண்டோம்.
Wa annaa lammaa sami'nal hudaaa aamannaa bihee famany yu'mim bi rabbihee falaa yakhaafu bakhsanw wa laa rahaqaa
(இந்தக் குர்ஆனிலுள்ள) நேரான வழிகளைச் செவியுற்ற போதே அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எவன் தன் இறைவனை நம்பிக்கை கொள்கின்றானோ, அவன் நஷ்டத்தைப் பற்றியும், துன்பத்தைப் பற்றியும் பயப்படமாட்டான்.
Wa annaa minnal muslimoona wa minnal qaasitoona faman aslama fa ulaaa'ika taharraw rashadaa
முற்றிலும் (அவனுக்கு) வழிப்பட்டவர்களும் நிச்சயமாக நம்மில் பலர் இருக்கின்றனர்; வரம்பு மீறியவர்களும் நம்மில் பலர் இருக்கின்றனர். எவர்கள் முற்றிலும் வழிப்படுகின்றார்களோ, அவர்கள்தாம் நேரான வழியைத் தெரிந்து கொண்டவர்கள்.
Wa ammal qaasitoona fa kaanoo li jahannama hatabaa
வரம்பு மீறியவர்களோ, நரகத்தின் எரி கட்டையாகி விட்டனர்" (என்றும் கூறினர்).
Wa alla wis taqaamoo 'alat tareeqati la asqaynaahum maa'an ghadaqaa
(நபியே! இந்த மனிதர்கள்) மார்க்கவழியில் உறுதியாக இருந்தால், தடையின்றியே அவர்களுக்கு தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்போம்.
Linaftinahum feeh; wa many yu'rid 'an zikri rabbihee yasluk hu 'azaaban sa'adaa
இதில் அவர்களை நாம் சோதிப்போம். ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதையே புறக்கணிக்கின்றானோ அவனைக் கடினமான வேதனையில் அவன் புகுத்திவிடுவான்.
Wa annal masaajida lillaahi falaa tad'oo ma'al laahi ahadaa
நிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது)களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவைகளில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள்.
Wa annahoo lammaa qaama 'adul laahi yad'oohu kaadoo yakoonoona 'alaihi libadaa
நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியா(ராகிய நம்முடைய தூத)ர், அவனைப் பிரார்த்தனை செய்து தொழ ஆரம்பித்தால், (இதைக் காணும் ஜின்களும், மக்களும் ஆச்சரியப்பட்டுக்) கூட்டம் கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்துகொள்கின்றனர்.
Qul innamaaa ad'oo rabbee wa laaa ushriku biheee ahadaa
(அவர்களுக்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்.