Yursilis samaaa'a 'alaikum midraaraa
(அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான்.
Wa yumdidkum bi am waalinw wa baneena wa yaj'al lakum Jannaatinw wa yaj'al lakum anhaaraa
பொருள்களையும், மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான்.
Maa lakum laa tarjoona lillaahi waqaaraa
உங்களுக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் நம்பவில்லை!
Wa qad khalaqakum at waaraa
உங்களை விதவிதமாகவும் அவன் படைத்திருக்கின்றான்.
Alam taraw kaifa khalaqal laahu sab'a samaawaatin tibaaqaa
ஏழு வானங்களையும், அடுக்கடுக்காக எவ்வாறு அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?
Wa ja'alal qamara feehinna nooranw wa ja'alash shamsa siraajaa
அவனே, அவைகளில் சந்திரனைப் பிரதிபலிக்கும் வெளிச்சமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அமைத்தான்.
Wallaahu ambatakum minal ardi nabaataa
அல்லாஹ்வே உங்களை (ஒரு செடியைப் போல்) பூமியில் வளரச் செய்தான் (வெளிப்படுத்தினான்).
Summa yu'eedukum feehaa wa ukhrijukum ikhraajaa
பின்னும், அதில்தான் உங்களை (மரணிக்கும்படி செய்து, அதில்) சேர்த்து விடுவான். (அதிலிருந்தே) மற்றொரு முறையும் உங்களை வெளிப்படுத்துவான்.
Wallaahu ja'ala lakumul arda bisaataa
அல்லாஹ்வே உங்களுக்குப் பூமியை விரிப்பாக அமைத்தான்.
Litaslukoo minhaa subulan fijaajaa
அதில் (பல பாகங்களுக்கும்) நீங்கள் செல்வதற்காக, விரிவான பாதைகளையும் அமைத்தான்" (என்றெல்லாம் அவர்கள் தன் மக்களுக்குக் கூறினார்)."