Skip to main content

وَإِذَا مَسَّهُ
இன்னும் அவனுக்கு ஏற்பட்டால்
ٱلْخَيْرُ
வசதி
مَنُوعًا
முற்றிலும் தடுப்பவனாக

Wa izaa massahul khairu manoo'aa

அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ, அதனை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கின்றான்.

Tafseer

إِلَّا
தவிர
ٱلْمُصَلِّينَ
தொழுகையாளிகளை

Illal musalleen

ஆயினும், தொழுகையாளிகளைத் தவிர.

Tafseer

ٱلَّذِينَ هُمْ
எவர்கள்/அவர்கள்
عَلَىٰ صَلَاتِهِمْ
தங்கள் தொழுகையில்
دَآئِمُونَ
நிரந்தரமாக இருக்கின்றார்களோ

Allazeena hum 'alaa Salaatihim daaa'imoon

அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ فِىٓ
இன்னும் எவர்கள்/அவர்களுடைய செல்வங்களில்
حَقٌّ
உரிமை
مَّعْلُومٌ
குறிப்பிட்ட

Wallazeena feee amwaalihim haqqum ma'loom

அவர்களுடைய பொருள்களில் (ஏழைகளுக்குக்) குறிப்பிட்ட பங்கு உண்டு.

Tafseer

لِّلسَّآئِلِ
யாசிப்பவருக்கு(ம்)
وَٱلْمَحْرُومِ
இல்லாதவருக்கும்

Lissaaa 'ili walmahroom

அதனைக் கேட்பவர்களுக்கும் (வெட்கத்தால்) கேட்காதவர் களுக்கும் (கொடுப்பார்கள்).

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
يُصَدِّقُونَ
உண்மைப்படுத்துவார்களோ
بِيَوْمِ ٱلدِّينِ
கூலி நாளை

Wallazeena yusaddiqoona bi yawmid Deen

கூலி கொடுக்கும் நாளையும் அவர்கள் உண்மையென்றே நம்புகின்றனர்.

Tafseer

وَٱلَّذِينَ هُم
இன்னும் எவர்கள்/அவர்கள்
مِّنْ عَذَابِ
தண்டனையை
رَبِّهِم
தங்கள் இறைவனின்
مُّشْفِقُونَ
பயப்படுகின்றார்களோ

Wallazeena hum min 'azaabi Rabbihim mushfiqoon

(இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்கள் இறைவனின் வேதனைக்குப் பயந்துகொண்டே இருப்பார்கள்.

Tafseer

إِنَّ عَذَابَ
நிச்சயமாக தண்டனை
رَبِّهِمْ
அவர்களுடைய இறைவனின்
غَيْرُ مَأْمُونٍ
பயமற்று இருக்கக்கூடியது அல்ல

Inna 'azaaba Rabbihim ghairu maamoon

(ஏனென்றால்,) நிச்சயமாகத் தங்கள் இறைவனின் வேதனை அச்சமற்றிருக்கக் கூடியதன்று.

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
هُمْ لِفُرُوجِهِمْ
அவர்கள்/தங்கள் மர்மஸ்தானங்களை
حَٰفِظُونَ
பாதுகாப்பார்களோ

Wallazeena hum lifuroo jihim haafizoon

அவர்கள், தங்கள் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்துக் கொள்வார்கள்.

Tafseer

إِلَّا
தவிர
عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ
தங்கள் மனைவிகள்
أَوْ مَا
அல்லது/சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம்
أَيْمَٰنُهُمْ
தங்கள் வலக்கரங்கள்
فَإِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
غَيْرُ مَلُومِينَ
பழிக்கப்பட மாட்டார்கள்

Illaa 'alaaa azwaajihim aw maa malakat aymaanuhum fainnahum ghairu maloomeen

ஆயினும், தங்கள் மனைவிகளிடத்திலும், தங்கள் அடிமைப் பெண்களிடத்திலும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

Tafseer