Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௫௩

هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَأْوِيْلَهٗۗ يَوْمَ يَأْتِيْ تَأْوِيْلُهٗ يَقُوْلُ الَّذِيْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَاۤءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّۚ فَهَلْ لَّنَا مِنْ شُفَعَاۤءَ فَيَشْفَعُوْا لَنَآ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِيْ كُنَّا نَعْمَلُۗ قَدْ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ࣖ   ( الأعراف: ٥٣ )

Do they wait
هَلْ يَنظُرُونَ
எதிர்பார்க்கின்றனரா?
except
إِلَّا
தவிர
(for) its fulfillment
تَأْوِيلَهُۥۚ
அதன் முடிவை
(The) Day
يَوْمَ
நாள்
(will) come
يَأْتِى
வரும்
its fulfillment
تَأْوِيلُهُۥ
அதன் முடிவு
will say
يَقُولُ
கூறுவார்(கள்)
those who
ٱلَّذِينَ
எவர்கள்
had forgotten it
نَسُوهُ
மறந்தனர்/அதை
from before
مِن قَبْلُ
முன்னர்
"Verily had come
قَدْ جَآءَتْ
வந்தா(ர்க)ள்
(the) Messengers
رُسُلُ
தூதர்கள்
(of) our Lord
رَبِّنَا
எங்கள் இறைவனின்
with the truth
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
so are (there) for us
فَهَل لَّنَا
எங்களுக்கு உண்டா?
any intercessors
مِن شُفَعَآءَ
சிபாரிசு செய்பவர்களில்
so (that) they intercede
فَيَشْفَعُوا۟
சிபாரிசு செய்வார்கள்
for us
لَنَآ
எங்களுக்கு
or
أَوْ
அல்லது
we are sent back
نُرَدُّ
நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால்
so (that) we do (deeds)
فَنَعْمَلَ
செய்வோமே
other than that which
غَيْرَ ٱلَّذِى
அல்லாததை
we used to do"
كُنَّا نَعْمَلُۚ
இருந்தோம்/செய்வோம்
Verily they lost
قَدْ خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்துக் கொண்டனர்
themselves
أَنفُسَهُمْ
தங்களுக்கே
and strayed
وَضَلَّ
இன்னும் மறைந்துவிட்டன
from them
عَنْهُم
அவர்களை விட்டு
what they used to
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
invent
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுவார்கள்

hal yanzuroona illaa taa weelah; yawma yaatee taaweeluhoo yaqoolul lazeena nasoohu min qablu qad jaaa'at Rusulu Rabbinaa bilhaqq; fahal lanaa min shufa'aaa'a fa yashfa'oo lanaaa aw nuraddu fana'mala ghairal lazee kunnaa na'mal; qad khasirooo anfusahum wa dalla 'anhum maa kaanoo yaftaroon (al-ʾAʿrāf 7:53)

Abdul Hameed Baqavi:

(மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதையன்றி (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள் "நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப் பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவைகளைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்" என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். அன்றி இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும்.

English Sahih:

Do they await except its result? The Day its result comes, those who had ignored it before will say, "The messengers of our Lord had come with the truth, so are there [now] any intercessors to intercede for us or could we be sent back to do other than what we used to do?" They will have lost themselves, and lost from them is what they used to invent. ([7] Al-A'raf : 53)

1 Jan Trust Foundation

இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.