Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪௮

وَنَادٰٓى اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا يَّعْرِفُوْنَهُمْ بِسِيْمٰىهُمْ قَالُوْا مَآ اَغْنٰى عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ   ( الأعراف: ٤٨ )

And (will) call out
وَنَادَىٰٓ
அழைப்பார்(கள்)
(the) companions (of) the heights
أَصْحَٰبُ ٱلْأَعْرَافِ
சிகரவாசிகள்
(to) men
رِجَالًا
சில மனிதர்களை
whom they recognize
يَعْرِفُونَهُم
அறிவார்கள் அவர்களை
by their marks
بِسِيمَىٰهُمْ
முகஅடையாளத்தைக் கொண்டு/அவர்களின்
saying
قَالُوا۟
கூறுவார்கள்
"Not (has) availed
مَآ أَغْنَىٰ
பலனளிக்கவில்லை
[to] you
عَنكُمْ
உங்களுக்கு
your gathering
جَمْعُكُمْ
உங்கள் சேமிப்பு
and what you were arrogant (about)"
وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ
நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும்

Wa naadaaa Ashaabul A'raffi rijaalany ya'rifoonahum biseemaahum qaaloo maaa aghnaa 'ankum jam'ukum wa maa kuntum tastakbiroon (al-ʾAʿrāf 7:48)

Abdul Hameed Baqavi:

அந்த சிகரங்களில் உள்ளவர்கள் அவர்களின் (முக) அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக்குள்ளானவர்கள் என தாங்கள் அறிந்த சில மனிதர்களை நோக்கி) "நீங்கள் (உலகத்தில் சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவைகளும், நீங்கள் எவைகளைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவைகளும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!" என்றும்,

English Sahih:

And the companions of the Elevations will call to men [within Hell] whom they recognize by their mark, saying, "Of no avail to you was your gathering and [the fact] that you were arrogant." ([7] Al-A'raf : 48)

1 Jan Trust Foundation

சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்| “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”