Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௮

وَاِذَا فَعَلُوْا فَاحِشَةً قَالُوْا وَجَدْنَا عَلَيْهَآ اٰبَاۤءَنَا وَاللّٰهُ اَمَرَنَا بِهَاۗ قُلْ اِنَّ اللّٰهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاۤءِۗ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ   ( الأعراف: ٢٨ )

And when they do
وَإِذَا فَعَلُوا۟
அவர்கள் செய்தால்
immorality
فَٰحِشَةً
ஒரு மானக்கேடானதை
they say
قَالُوا۟
கூறுகின்றனர்
"We found
وَجَدْنَا
கண்டோம்
on it
عَلَيْهَآ
இதன் மீது
our forefathers
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
and Allah
وَٱللَّهُ
அல்லாஹ்வும்
(has) ordered us
أَمَرَنَا
ஏவினான்/எங்களுக்கு
of it" Say
بِهَاۗ قُلْ
இதை/கூறுவீராக
"Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(does) not order
لَا يَأْمُرُ
ஏவ மாட்டான்
immorality
بِٱلْفَحْشَآءِۖ
மானக்கேடானதை
Do you say
أَتَقُولُونَ
கூறுகிறீர்களா?
about Allah
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
what
مَا
எவற்றை
not?" you know?"
لَا تَعْلَمُونَ
அறியமாட்டீர்கள்

Wa izaa fa'aloo faahishatan qaaloo wajadnaa 'alaihaaa aabaaa'ana wallaahu amaranaa bihaa; qul innal laaha laa yaamuru bilfahshaaa'i a-taqooloona 'alal laahi mmaa laa ta'lamoon (al-ʾAʿrāf 7:28)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும்போது, அதனைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் "எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். அன்றி இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளை யிட்டிருக்கின்றான்" என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க் கூறலாமா?" என்று கூறுங்கள்.

English Sahih:

And when they commit an immorality, they say, "We found our fathers doing it, and Allah has ordered us to do it." Say, "Indeed, Allah does not order immorality. Do you say about Allah that which you do not know?" ([7] Al-A'raf : 28)

1 Jan Trust Foundation

(நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் - நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.