Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௦

فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطٰنُ لِيُبْدِيَ لَهُمَا مَا وٗرِيَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا وَقَالَ مَا نَهٰىكُمَا رَبُّكُمَا عَنْ هٰذِهِ الشَّجَرَةِ ِالَّآ اَنْ تَكُوْنَا مَلَكَيْنِ اَوْ تَكُوْنَا مِنَ الْخٰلِدِيْنَ   ( الأعراف: ٢٠ )

Then whispered
فَوَسْوَسَ
ஊசலாட்டத்தை உண்டாக்கினான்
to both of them
لَهُمَا
அவ்விருவருக்கும்
the Shaitaan
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
to make apparent
لِيُبْدِىَ
(அவன்) வெளிப்படுத்துவதற்காக
to both of them
لَهُمَا
அவ்விருவருக்கு
what was concealed
مَا وُۥرِىَ
எது/மறைக்கப்பட்டது
from both of them
عَنْهُمَا
அவ்விருவரை விட்டு
of their shame
مِن سَوْءَٰتِهِمَا
அவ்விருவரின் வெட்கத் தலங்களை
And he said
وَقَالَ
கூறினான்
"(Did) not forbid you both
مَا نَهَىٰكُمَا
அவன் தடுக்கவில்லை/உங்களிருவரை
your Lord
رَبُّكُمَا
உங்களிருவரின் இறைவன்
from this
عَنْ هَٰذِهِ
விட்டு
[the] tree
ٱلشَّجَرَةِ
இம்மரம்
except
إِلَّآ
தவிர
that you two become
أَن تَكُونَا
நீங்கள் ஆகிவிடுவீர்கள்
Angels
مَلَكَيْنِ
இரு வானவர்களாக
or
أَوْ
அல்லது
you two become
تَكُونَا
நீங்கள் ஆகிவிடுவீர்கள்
of the immortals"
مِنَ ٱلْخَٰلِدِينَ
நிரந்தரமானவர்களில்

Fawaswasa lahumash Shaitaanu liyubdiya lahumaa maa wooriya 'anhumaa min saw aatihimaa wa qaala maa nahaakumaa Rabbukumaa 'an haazihish shajarati illaaa an takoonaa malakaini aw takoonaa minal khaalideen (al-ʾAʿrāf 7:20)

Abdul Hameed Baqavi:

(எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி "(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடுக்கவில்லை" என்று கூறியதுடன்,

English Sahih:

But Satan whispered to them to make apparent to them that which was concealed from them of their private parts. He said, "Your Lord did not forbid you this tree except that you become angels or become of the immortal." ([7] Al-A'raf : 20)

1 Jan Trust Foundation

எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.