Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௧

وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَۗ لَمْ يَكُنْ مِّنَ السّٰجِدِيْنَ  ( الأعراف: ١١ )

And certainly
وَلَقَدْ
திட்டவட்டமாக
We created you
خَلَقْنَٰكُمْ
உங்களைப் படைத்தோம்
then
ثُمَّ
பிறகு
We fashioned you
صَوَّرْنَٰكُمْ
வடிவமைத்தோம்/உங்களை
Then
ثُمَّ
பிறகு
We said
قُلْنَا
கூறினோம்
to the Angels
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
"Prostrate
ٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
to Adam"
لِءَادَمَ
ஆதமுக்கு
So they prostrated
فَسَجَدُوٓا۟
சிரம் பணிந்தனர்
except Iblees
إِلَّآ إِبْلِيسَ
இப்லீஸைத் தவிர
Not he was
لَمْ يَكُن
அவன் ஆகவில்லை
of those who prostrated
مِّنَ ٱلسَّٰجِدِينَ
சிரம் பணிந்தவர்களில்

Wa laqad khalaqnaakum summa sawwarnaakum summa qulnaa lilmalaaa'ikatis judoo li Aadama fa-sajadooo illaaa Ibleesa lam yakum minas saajideen (al-ʾAʿrāf 7:11)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருப்படுத்தினோம். பின்னர் நாம் மலக்குகளை நோக்கி "ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்" எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை.

English Sahih:

And We have certainly created you, [O mankind], and given you [human] form. Then We said to the angels, "Prostrate to Adam"; so they prostrated, except for Iblees. He was not of those who prostrated. ([7] Al-A'raf : 11)

1 Jan Trust Foundation

நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.