Skip to main content

قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் சமுதாயமே
لَيْسَ
இல்லை
بِى
என்னிடம்
ضَلَٰلَةٌ
வழிகேடு
وَلَٰكِنِّى
எனினும் நிச்சயமாக நான்
رَسُولٌ
ஒரு தூதர்
مِّن رَّبِّ
இறைவனிடமிருந்து
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Qaala yaa qawmi laisa bee dalaalatunw wa laakinnee Rasoolum mir Rabbil 'aalameen

அதற்கவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நான் எத்தகைய வழிகேட்டிலும் இல்லை; மாறாக, நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாக்கும் இறைவனுடைய ஒரு தூதன்" என்று கூறினார்.

Tafseer

أُبَلِّغُكُمْ
எடுத்துரைக்கிறேன்/உங்களுக்கு
رِسَٰلَٰتِ
தூது(செய்தி)களை
رَبِّى
என் இறைவனின்
وَأَنصَحُ
இன்னும் உபதேசிக்கிறேன்
لَكُمْ
உங்களுக்கு
وَأَعْلَمُ
இன்னும் அறிகிறேன்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
مَا لَا
எவற்றை/அறியமாட்டீர்கள்

Uballighukum Risaalaati Rabbee wa ansahu lakum wa a'lamu minal laahi maa laa ta'lamoon

(அன்றி) "நான் என் இறைவனின் தூதையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்.

Tafseer

أَوَعَجِبْتُمْ
வியக்கிறீர்களா?
أَن
வந்ததைப் பற்றி
جَآءَكُمْ
உங்களுக்கு
ذِكْرٌ
நல்லுபதேசம்
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
عَلَىٰ رَجُلٍ
ஒரு மனிதர் மீது
مِّنكُمْ
உங்களிலுள்ள
لِيُنذِرَكُمْ
அவர் எச்சரிப்பதற்காக/உங்களை
وَلِتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அஞ்சுவதற்காக
وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ
இன்னும் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக

awa'ajibtum an jaaa'akum zikrum mir Rabbikum 'alaa rajulim minkum liyunzirakum wa litattaqoo wa la'allakum turhamoon

உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்களா? உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற் காகவும், நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காகவும் (அது வந்திருக்கின்றது.) அதனால் நீங்கள் (இறைவனின்) அருளை அடையலாம்" (என்றும் கூறினார்.)

Tafseer

فَكَذَّبُوهُ
பொய்ப்பித்தனர்/அவரை
فَأَنجَيْنَٰهُ
ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
مَعَهُۥ
அவருடன்
فِى ٱلْفُلْكِ
கப்பலில்
وَأَغْرَقْنَا
இன்னும் மூழ்கடித்தோம்
ٱلَّذِينَ
எவர்களை
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَآۚ
நம் வசனங்களை
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தனர்
قَوْمًا
சமுதாயமாக
عَمِينَ
குருடானவர்கள்

Fakazzaboohu fa anjai naahu wallazeena ma'ahoo fil fulki wa aghraqnal lazeena kazzaboo bi Aayaatinaa; innahum kaanoo qawman 'ameen

பின்னும் அவரை அவர்கள் பொய்யரெனவே கூறிவிட்டனர். ஆதலால் அவரையும், அவரைச் சார்ந்தோர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு, நம்முடைய வசனங்கள் பொய்யென்று கூறியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தைக் காண முடியாத) குருடர்களாகவே இருந்தனர்.

Tafseer

وَإِلَىٰ عَادٍ
‘ஆது’க்கு/சகோதரர்
أَخَاهُمْ
அவர்களுடைய
هُودًاۗ
ஹூதை
قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் சமுதாயமே!
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا لَكُم
உங்களுக்கில்லை
مِّنْ إِلَٰهٍ
வணங்கப்படும் ஒரு கடவுளும்
غَيْرُهُۥٓۚ
அவனையன்றி
أَفَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச வேண்டாமா?

Wa ilaa 'aadin akhaahum Hoodaa; qaala yaa qawmi' budul laaha maa lakum min ilaahin ghairuh; afalaa tattaqoon

"ஆத்" (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம்முடைய தூதராக அனுப்பினோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. (ஆகவே) நீங்கள் (அவனுக்கு) பயப்பட வேண்டாமா?" என்று கூறினார்.

Tafseer

قَالَ
கூறினர்
ٱلْمَلَأُ
தலைவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
مِن
இருந்து
قَوْمِهِۦٓ
அவரின் சமுதாயம்
إِنَّا
நிச்சயமாக நாம்
لَنَرَىٰكَ
உம்மை காண்கிறோம்
فِى سَفَاهَةٍ
மடமையில்
وَإِنَّا
நிச்சயமாக நாம்
لَنَظُنُّكَ
உம்மை எண்ணுகிறோம்
مِنَ ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களில்

Qaalal mala ul lazeena kafaroo min qawmiheee innaa lanaraaka fee safaahatinw wa innaa lannazunnuka minal kaazibeen

அதற்கு அந்த மக்களிலிருந்த நிராகரித்தவர்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நிச்சயமாக நாம் உங்களை மடமையில் (ஆழ்ந்து) கிடப்பவராகவே காண்கிறோம். அன்றி நிச்சயமாக நாம் உங்களை பொய்யரில் ஒருவரெனவே மதிக்கிறோம்" என்று கூறினார்கள்.

Tafseer

قَالَ
கூறினார்
يَٰقَوْمِ
என் சமுதாயமே
لَيْسَ
இல்லை
بِى
என்னிடம்
سَفَاهَةٌ
மடமை
وَلَٰكِنِّى
எனினும் நிச்சயமாக நான்
رَسُولٌ
ஒரு தூதர்
مِّن رَّبِّ
இறைவனிடமிருந்து
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Qaala yaa qawmi laisa bee safaahatunw wa laakinnee Rasoolum mir Rabbil 'aalameen

அதற்கு அவர் "என்னுடைய மக்களே! மடமை என்னிடம் இல்லை. ஆனால், நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாக்கும் இறைவனின் ஒரு தூதனே!" என்று கூறினார்.

Tafseer

أُبَلِّغُكُمْ
எடுத்துரைக்கிறேன்/உங்களுக்கு
رِسَٰلَٰتِ
தூதுகளை
رَبِّى
என் இறைவனின்
وَأَنَا۠
நான்
لَكُمْ
உங்களுக்கு
نَاصِحٌ
உபதேசி(ப்பவன்)
أَمِينٌ
நம்பிக்கைக்குரிய

Uballighukum Risaalaati Rabbee wa ana lakum naasihun ameen

(அன்றி) "என் இறைவனின் தூதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். அன்றி, நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய உபதேசியாகவும் இருக்கின்றேன்.

Tafseer

أَوَعَجِبْتُمْ
நீங்கள் வியக்கிறீர்களா?
أَن
வந்ததைப் பற்றி
جَآءَكُمْ
உங்களுக்கு
ذِكْرٌ
நல்லுபதேசம்
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
عَلَىٰ رَجُلٍ
ஒரு மனிதர் மீது
مِّنكُمْ
உங்களில்
لِيُنذِرَكُمْۚ
உங்களை எச்சரிப்பதற்காக
وَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
إِذْ
சமயம்
جَعَلَكُمْ
ஆக்கினான்
خُلَفَآءَ
பிரதிநிதிகளாக
مِنۢ بَعْدِ
பின்னர்
قَوْمِ
சமுதாயத்திற்கு
نُوحٍ
நூஹூடைய
وَزَادَكُمْ
இன்னும் அதிகப்படுத்தினான் உங்களுக்கு
فِى ٱلْخَلْقِ
படைப்பில்
بَصْۜطَةًۖ
விரிவை
فَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
ءَالَآءَ
அருட்கொடைகளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

awa 'ajibtum an jaaa'akum zikrum mir Rabbikum 'alaa rajulim minkum liyunzirakum; wazkurooo iz ja'alakum khulafaaa'a mim ba'di qawmi noohinw wa zaadakum filkhalqi bastatan fazkurooo aalaaa'al laahi la'allakum tuflihoon

"உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களில் ஒருவர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வருவதைப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்? நூஹுடைய மக்களுக்குப் பின்னர் அவன் உங்களை (பூமியில்) அதிபதிகளாக்கி வைத்து தேகத்திலும், (வலுவிலும் மற்றவர்களை விட) உங்களுக்கு அதிகமாகவே கொடுத்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறலாம்" (என்றும் கூறினார்.)

Tafseer

قَالُوٓا۟
கூறினர்
أَجِئْتَنَا
எங்களிடம் வந்தீரா?
لِنَعْبُدَ
நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَحْدَهُۥ
அவன் ஒருவனை மட்டும்
وَنَذَرَ
இன்னும் நாங்கள் விட்டுவிட்டு
مَا
எவற்றை
كَانَ
இருந்தார்(கள்)
يَعْبُدُ
வணங்குவார்(கள்)
ءَابَآؤُنَاۖ
எங்கள் மூதாதைகள்
فَأْتِنَا
வருவீராக/எங்களிடம்
بِمَا
எதைக் கொண்டு
تَعِدُنَآ
எச்சரிக்கிறீர்/எங்களை
إِن كُنتَ
நீர் இருந்தால்
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்

Qaalooo aji'tanaa lina'budal laaha wahdahoo wa nazara maa kaana ya'budu aabaaa'u naa faatinaa bimaa ta'idunaaa in kunta minas saadiqeen

அதற்கவர்கள் "எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந் தவைளை நாங்கள் புறக்கணித்துவிட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்யவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள்? (நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.) மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் நீங்கள் நமக்கு அச்சமூட்டுவதை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer