Skip to main content

وَلَقَدْ
திட்டவட்டமாக
خَلَقْنَٰكُمْ
உங்களைப் படைத்தோம்
ثُمَّ
பிறகு
صَوَّرْنَٰكُمْ
வடிவமைத்தோம்/உங்களை
ثُمَّ
பிறகு
قُلْنَا
கூறினோம்
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
ٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
لِءَادَمَ
ஆதமுக்கு
فَسَجَدُوٓا۟
சிரம் பணிந்தனர்
إِلَّآ إِبْلِيسَ
இப்லீஸைத் தவிர
لَمْ يَكُن
அவன் ஆகவில்லை
مِّنَ ٱلسَّٰجِدِينَ
சிரம் பணிந்தவர்களில்

Wa laqad khalaqnaakum summa sawwarnaakum summa qulnaa lilmalaaa'ikatis judoo li Aadama fa-sajadooo illaaa Ibleesa lam yakum minas saajideen

நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை) உருப்படுத்தினோம். பின்னர் நாம் மலக்குகளை நோக்கி "ஆதமுக்கு (சிரம்) பணியுங்கள்" எனக் கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள் அனைவரும் அவருக்குப்) பணிந்தார்கள். அவன் பணியவில்லை.

Tafseer

قَالَ مَا
கூறினான்/எது?
مَنَعَكَ
உம்மை தடுத்தது
أَلَّا تَسْجُدَ
நீ சிரம் பணியாதிருக்க
إِذْ
போது
أَمَرْتُكَۖ
கட்டளையிட்டேன்/உனக்கு
قَالَ
கூறினான்
أَنَا۠
நான்
خَيْرٌ
மேலானவன்
مِّنْهُ
அவரைவிட
خَلَقْتَنِى
என்னை படைத்தாய்
مِن نَّارٍ
நெருப்பால்
وَخَلَقْتَهُۥ
இன்னும் படைத்தாய்/அவரை
مِن طِينٍ
களிமண்ணால்

Qaala maa mana'aka allaa tasjuda iz amartuka qaala ana khairum minhu khalaqtanee min naarinw wa khalaqtahoo min teen

(ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி) "நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ (சிரம்) பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?" என்று கேட்க, (அதற்கு இப்லீஸ்) "நான் அவரைவிட மேலானவன். (ஏனென்றால்,) நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக் கின்றாய். (களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது)" என்று (இறுமாப்புடன்) கூறினான்.

Tafseer

قَالَ
கூறினான்
فَٱهْبِطْ
ஆகவே இறங்கிவிடு
مِنْهَا
இதிலிருந்து
فَمَا يَكُونُ
அனுமதியில்லை
لَكَ
உமக்கு
أَن تَتَكَبَّرَ
நீ பெருமை கொள்வதற்கு
فِيهَا
இதில்
فَٱخْرُجْ
வெளியேறி விடு!
إِنَّكَ
நிச்சயமாக நீ
مِنَ ٱلصَّٰغِرِينَ
இழிவானவர்களில்

Qaala fahbit minhaa famaa yakoonu laka an tatakabbara feehaa fakhruj innaka minas saaghireen

(அதற்கு இறைவன்) "இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். (ஆதலால் இதிலிருந்து) நீ வெளியேறிவிடு" என்று கூறினான்.

Tafseer

قَالَ
கூறினான்
أَنظِرْنِىٓ
அவகாசமளி/எனக்கு
إِلَىٰ
வரை
يَوْمِ
நாள்
يُبْعَثُونَ
எழுப்பப்படுவார்கள்

Qaala anzirneee ilaa Yawmi yub'asoon

(அதற்கு இப்லீஸாகிய) அவன் ("இறந்தவர்களை) எழுப்பும் நாள் வரையில் எனக்கு அவகாசம் அளி" என்று கேட்டான்.

Tafseer

قَالَ
கூறினான்
إِنَّكَ
நிச்சயமாக நீ
مِنَ ٱلْمُنظَرِينَ
அவகாசமளிக்கப்பட்டவர்களில்

Qaala innaka minal munzareen

(அதற்கு இறைவன்) "நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசம் அளிக்கப்பட்டிருக்கின்றாய்" என்று கூறினான்.

Tafseer

قَالَ
கூறினான்
فَبِمَآ
காரணமாக
أَغْوَيْتَنِى
நீ வழிகெடுத்தாய்/என்னை
لَأَقْعُدَنَّ
நிச்சயமாக உட்காருவேன்
لَهُمْ
அவர்களுக்காக
صِرَٰطَكَ
உன் பாதையில்
ٱلْمُسْتَقِيمَ
நேரானது

Qaala fabimaaa aghway tanee la aq'udanna lahum Siraatakal Mustaqeem

(அதற்கு இப்லீஸ், இறைவனை நோக்கி) "நீ என்னை பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகிய) அவர்கள் உன்னுடைய நேரான வழியில் செல்லாது (தடைசெய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்" (என்றும்)

Tafseer

ثُمَّ لَءَاتِيَنَّهُم
பிறகு/நிச்சயம் வருவேன்/அவர்களிடம்
مِّنۢ بَيْنِ
அவர்களுக்கு முன் புறத்திலிருந்து
وَمِنْ خَلْفِهِمْ
இன்னும் அவர்களுக்கு பின் புறத்திலிருந்து
وَعَنْ أَيْمَٰنِهِمْ
இன்னும் அவர்களின் வலது புறத்திலிருந்து
وَعَن شَمَآئِلِهِمْۖ
இன்னும் அவர்களின் இடது புறத்திலிருந்து
وَلَا تَجِدُ
நீ காணமாட்டாய்
أَكْثَرَهُمْ
அதிகமானவர்களை அவர்களில்
شَٰكِرِينَ
நன்றி செலுத்துபவர்களாக

Summa la aatiyannahum mim baine aideehim wa min khalfihim wa 'an aimaanihim wa 'an shamaaa'ilihim wa laa tajidu aksarahum shaakireen

"நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர் களாக நீ காணமாட்டாய்" என்றும் கூறினான்.

Tafseer

قَالَ
கூறினான்
ٱخْرُجْ
வெளியேறு
مِنْهَا
இதிலிருந்து
مَذْءُومًا
நீ இகழப்பட்டவனாக
مَّدْحُورًاۖ
விரட்டப்பட்டவனாக
لَّمَن تَبِعَكَ
எவர்/பின்பற்றினார்/உன்னை
مِنْهُمْ
அவர்களில்
لَأَمْلَأَنَّ
நிச்சயம் நிரப்புவேன்
جَهَنَّمَ
நரகத்தை
مِنكُمْ
உங்களைக் கொண்டு
أَجْمَعِينَ
அனைவரை

Qaalakh ruj mnhaa maz'oomam madhooraa; laman tabi'aka minhum la amla'anna Jahannama minkum ajma'een

(அதற்கு இறைவன்) "நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் (ஆக) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான்.

Tafseer

وَيَٰٓـَٔادَمُ
ஆதமே
ٱسْكُنْ
வசித்திரு
أَنتَ
நீ
وَزَوْجُكَ
இன்னும் உம் மனைவி
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
فَكُلَا
(இருவரும்)புசியுங்கள்
مِنْ حَيْثُ
இடத்தில்
شِئْتُمَا
(இருவரும்)நாடினீர்கள்
وَلَا تَقْرَبَا
(இருவரும்) நெருங்காதீர்கள்
هَٰذِهِ ٱلشَّجَرَةَ
இந்த மரத்தை
فَتَكُونَا
(இருவரும்) ஆகிவிடுவீர்கள்
مِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்

Wa yaaa Aadamus kun anta wa zawjukal Jannata fakulaa min haisu shi'tumaa wa laa taqrabaa haazihish shajarata fatakoonaa minza zaalimeen

(பின்னர், இறைவன் ஆதமை நோக்கி) "ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில் கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்" (என்று கூறினான்.)

Tafseer

فَوَسْوَسَ
ஊசலாட்டத்தை உண்டாக்கினான்
لَهُمَا
அவ்விருவருக்கும்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
لِيُبْدِىَ
(அவன்) வெளிப்படுத்துவதற்காக
لَهُمَا
அவ்விருவருக்கு
مَا وُۥرِىَ
எது/மறைக்கப்பட்டது
عَنْهُمَا
அவ்விருவரை விட்டு
مِن سَوْءَٰتِهِمَا
அவ்விருவரின் வெட்கத் தலங்களை
وَقَالَ
கூறினான்
مَا نَهَىٰكُمَا
அவன் தடுக்கவில்லை/உங்களிருவரை
رَبُّكُمَا
உங்களிருவரின் இறைவன்
عَنْ هَٰذِهِ
விட்டு
ٱلشَّجَرَةِ
இம்மரம்
إِلَّآ
தவிர
أَن تَكُونَا
நீங்கள் ஆகிவிடுவீர்கள்
مَلَكَيْنِ
இரு வானவர்களாக
أَوْ
அல்லது
تَكُونَا
நீங்கள் ஆகிவிடுவீர்கள்
مِنَ ٱلْخَٰلِدِينَ
நிரந்தரமானவர்களில்

Fawaswasa lahumash Shaitaanu liyubdiya lahumaa maa wooriya 'anhumaa min saw aatihimaa wa qaala maa nahaakumaa Rabbukumaa 'an haazihish shajarati illaaa an takoonaa malakaini aw takoonaa minal khaalideen

(எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி "(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடுக்கவில்லை" என்று கூறியதுடன்,

Tafseer