Skip to main content

وَمِمَّنْ
எவர்களிலிருந்து
خَلَقْنَآ
படைத்தோம்
أُمَّةٌ
ஒரு கூட்டம்
يَهْدُونَ
நேர்வழி காட்டுகின்றனர்
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
وَبِهِۦ
இன்னும் அதைக்கொண்டே
يَعْدِلُونَ
நீதமாக நடக்கின்றனர்

Wa mimman khalaqnaaa ummatuny yahdoona bilhaqqi wa bihee ya'diloon

நாம் படைத்தவர்களில் சிலருண்டு; அவர்கள் சத்திய வழியை(ப் பின்பற்றுவதுடன், மற்ற மக்களுக்கும்) அறிவித்து அதனைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
سَنَسْتَدْرِجُهُم
விட்டுவிட்டுப் பிடிப்போம்/அவர்களை
مِّنْ حَيْثُ
விதத்தில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Wallazeena kazzaboo bi Aayaatinaa sanastadrijuhum min haisu laa ya'lamoon

எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கு கிறார்களோ அவர்களை அவர்கள் உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் படிப்படியாக (கீழ் நிலைக்கு இறக்கி நரகத்திலும்) புகுத்தி விடுவோம்.

Tafseer

وَأُمْلِى
அவகாசமளிப்பேன், பிற்படுத்துவேன்
لَهُمْۚ
அவர்களுக்கு
إِنَّ كَيْدِى
நிச்சயமாக என் சூழ்ச்சி
مَتِينٌ
மிக உறுதியானது

Wa umlee lahum; inna kaidee mateen

(இவ்வுலகில்) நாம் அவர்களுக்கு (நீண்ட) அவகாசம் அளிக்கின்றோம். நிச்சயமாக நம்முடைய சூழ்ச்சி (திட்டம்) மிக்க உறுதியானது; (தப்பிக்க முடியாதது.)

Tafseer

أَوَلَمْ يَتَفَكَّرُوا۟ۗ
அவர்கள் சிந்திக்கவில்லையா?
مَا بِصَاحِبِهِم
இல்லை/அவர்களுடைய தோழருக்கு
مِّن جِنَّةٍۚ
அறவே பைத்தியம்
إِنْ هُوَ
இல்லை/அவர்
إِلَّا نَذِيرٌ
தவிர/எச்சரிப்பவர்
مُّبِينٌ
தெளிவானவர்

Awalam yatafakkaroo maa bisaahibihim min jinnah; in huwa illaa nazeerum mubeen

(நம் தூதராகிய) அவர்களுடைய (இத்)தோழருக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா? அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே அன்றி வேறில்லை.

Tafseer

أَوَلَمْ يَنظُرُوا۟
அவர்கள் கவனிக்கவில்லையா?
فِى مَلَكُوتِ
பேராட்சியில்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَمَا خَلَقَ
இன்னும் எவற்றைப்படைத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِن شَىْءٍ
பொருளிலும்
وَأَنْ عَسَىٰٓ
என்பதிலும்/கூடும்
أَن يَكُونَ
நெருங்கி இருக்க
أَجَلُهُمْۖ
அவர்களுடைய தவணை
فَبِأَىِّ حَدِيثٍۭ
எந்த செய்தியை?
بَعْدَهُۥ
இதற்குப் பின்னர்
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்

Awalam yanzuroo fee malakootis samaawaati wal ardi wa maa khalaqal laahu min shai'inw wa an 'asaaa ai yakoona qadiqtaraba ajaluhum fabi aiyi hadeesim ba'dahoo yu'minoon

வானங்கள், பூமியினுடைய ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்களையும் அவர்கள் பார்க்க வில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதையும் (அவர்கள் எண்ணவில்லையா?) இவ் வேதத்திற்குப் பின்னர் எதைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.

Tafseer

مَن
எவரை
يُضْلِلِ
வழிகெடுப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
فَلَا
அறவே இல்லை
هَادِىَ
நேர்வழிசெலுத்துபவர்
لَهُۥۚ
அவரை
وَيَذَرُهُمْ
இன்னும் விட்டுவிடுகிறான் அவர்களை
فِى طُغْيَٰنِهِمْ
அவர்களுடைய அட்டூழியத்தில்
يَعْمَهُونَ
கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக

Mai yadlilil laahu falaa haadiyaa lah; wa yazaruhum fee tughyaanihim ya'mahoon

எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ அவர்களை நேரான வழியில் செலுத்த ஒருவராலும் முடியாது; அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே தட்டழி(ந்து கெட்டலை)யும்படி விட்டுவிடுகின்றான்.

Tafseer

يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
عَنِ ٱلسَّاعَةِ
நேரத்தைப் பற்றி
أَيَّانَ
எப்போது
مُرْسَىٰهَاۖ
அது நிகழ்வது
قُلْ
கூறுவீராக
إِنَّمَا
எல்லாம்
عِلْمُهَا
அதன் அறிவு
عِندَ
இடம்தான்
رَبِّىۖ
என் இறைவன்
لَا يُجَلِّيهَا
வெளிப்படுத்த மாட்டான்/அதை
لِوَقْتِهَآ
அதன் நேரத்தில்
إِلَّا
தவிர
هُوَۚ
அவனை
ثَقُلَتْ
கனத்து விட்டது
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
لَا تَأْتِيكُمْ
அது வராது/உங்களிடம்
إِلَّا
தவிர
بَغْتَةًۗ
திடீரென்றே
يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
كَأَنَّكَ
நிச்சயமாக போன்று/நீர்
حَفِىٌّ
அறிந்தவர்
عَنْهَاۖ
அதைப் பற்றி
قُلْ
கூறுவீராக
إِنَّمَا
எல்லாம்
عِلْمُهَا
அதன் அறிவு
عِندَ
இடம்
ٱللَّهِ
அல்லாஹ்
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَ
அதிகமானோர்
ٱلنَّاسِ
மக்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Yas'aloonaka 'anis Saa'ati aiyaana mursaahaa qul innamaa 'ilmuhaa 'inda Rabbee laa yujallaeehaa liwaqtihaaa illaa Hoo; saqulat fis samaawaati wal ard; laa taateekum illaa baghtah; yas'aloonaka ka annaka hafiyyun 'anhaa qul innamaa 'ilmuhaa 'indal laahi wa laakinna aksaran naasi laa ya'lamoon

(நபியே!) இறுதி நாளைப் பற்றி அது எப்பொழுது வரும் என அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதனை முற்றிலும் அறிந்து கொண்டவராக உங்களை அவர்கள் எண்ணி, (அதனைப் பற்றி) உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதனை முற்றிலும் அறிந்து கொண்டவராக உங்களை அவர்கள் எண்ணி, (அதனைப் பற்றி) உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அதன் அறிவு அல்லாஹ்விடத்தில் தான் இருக்கிறது; மனிதரில் பெரும் பாலானவர்கள் இதனை அறிய மாட்டார்கள்."

Tafseer

قُل
கூறுவீராக
لَّآ أَمْلِكُ
நான் உரிமை பெறமாட்டேன்
لِنَفْسِى
எனக்கு
نَفْعًا
எந்த ஒரு பலனையும்
وَلَا ضَرًّا
எந்த ஒரு கெடுதியையும்
إِلَّا
தவிர
مَا شَآءَ
எதை/நாடினான்
ٱللَّهُۚ
அல்லாஹ்
وَلَوْ كُنتُ
நான் இருந்திருந்தால்
أَعْلَمُ
அறிபவனாக
ٱلْغَيْبَ
மறைவானவற்றை
لَٱسْتَكْثَرْتُ
அதிகம்பெற்றிருப்பேன்
مِنَ ٱلْخَيْرِ
நன்மையில்
وَمَا مَسَّنِىَ
என்னை தீண்டி இருக்காது
ٱلسُّوٓءُۚ
தீங்கு
إِنْ أَنَا۠
நான் இல்லை
إِلَّا
தவிர
نَذِيرٌ
எச்சரிப்பவராக
وَبَشِيرٌ
இன்னும் நற்செய்தி கூறுபவராக
لِّقَوْمٍ
மக்களுக்கு
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறார்கள்

Qul laaa amliku linafsee naf'anw wa laa darran illaa maa shaaa'al laah; wa law kuntu a'alamul ghaiba lastaksartu minal khairi wa maa massaniyas soo'; in ana illaa nazeerunw wa basheerul liqawminy yu'minoon

(அன்றி) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்கு சக்தி இல்லை. நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; யாதொரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே அன்றி வேறில்லை."

Tafseer

هُوَ
அவன்
ٱلَّذِى
எவன்
خَلَقَكُم
உங்களைப் படைத்தான்
مِّن
இருந்து
نَّفْسٍ
ஒரு மனிதர்
وَٰحِدَةٍ
ஒரே
وَجَعَلَ
இன்னும் உருவாக்கினான்
مِنْهَا
இன்னும் அவரிலிருந்தே
زَوْجَهَا
அவருடைய மனைவியை
لِيَسْكُنَ
அவர் வசிப்பதற்காக, நிம்மதி பெறுவதற்காக
إِلَيْهَاۖ
அவளுடன்
فَلَمَّا
எப்போது
تَغَشَّىٰهَا
மூடினார்/அவளை
حَمَلَتْ
கர்ப்பமானாள்
حَمْلًا
கர்ப்பம்
خَفِيفًا
லேசான
فَمَرَّتْ
நடந்தாள்
بِهِۦۖ
அதைக் கொண்டு
فَلَمَّآ أَثْقَلَت
போது/கனமானாள்
دَّعَوَا
இருவரும் பிரார்த்தித்தனர்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
رَبَّهُمَا
அவ்விருவரின் இறைவனை
لَئِنْ ءَاتَيْتَنَا
நீ கொடுத்தால்/எங்களுக்கு
صَٰلِحًا
நல்ல குழந்தையை
لَّنَكُونَنَّ
நிச்சயமாக ஆகிவிடுவோம்
مِنَ ٱلشَّٰكِرِينَ
நன்றிசெலுத்துவோரில்

Huwal lazee khalaqakum min nafsinw waahidatinw wa ja'ala minhaa zawjahaa liyas kuna ilaihaa falammaa taghash shaahaa hamalat hamlan khafeefan famarrat bihee falammaaa asqalad da'awal laaha Rabbahumaa la'in aayaitanaa saalihal lanakoo nanna minash shaakireen

ஒரே மனிதரிலிருந்து உங்களை படைத்தவன் அவன்தான்; அவருடன் (சுகமாகக்) கூடி வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரிலிருந்தே உற்பத்தி செய்தான். அவளை அவர் (தன் தேகத்தைக் கொண்டு) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமானாள். பின்னர் அதனை(ச் சுமந்து) கொண்டு திரிந்தாள். அவள் சுமை பளுவாகவே "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நல்லதொரு சந்ததியை அளித்தால் நிச்சயமாக நாங்கள் உனக்கு நன்றி செலுத்திக் கொண்டிருப்போம்" என்று அவ்விருவரும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

Tafseer

فَلَمَّآ
போது
ءَاتَىٰهُمَا
கொடுத்தான்/அவ்விருவருக்கும்
صَٰلِحًا
நல்ல குழந்தையை
جَعَلَا
அவ்விருவரும் ஆக்கினர்
لَهُۥ
அவனுக்கு
شُرَكَآءَ
இணைகளை
فِيمَآ
எதில்
ءَاتَىٰهُمَاۚ
கொடுத்தான்/அவ்விருவருக்கு
فَتَعَٰلَى
உயர்ந்தவன்
ٱللَّهُ
அல்லாஹ்
عَمَّا
எவற்றைவிட்டு
يُشْرِكُونَ
இணைவைக்கிறார்கள்

Falammaaa aataahumaa saalihan ja'alaa lahoo shurakaaa'a feemaaa aataahumaa; fata'aalal laahu 'ammaa yushrikoon

(அவர்கள் பிரார்த்தனையின்படி) அவர்களுக்கு (இறைவன்) நல்லதோர் சந்ததியை அளித்தாலோ அதனை அவர்களுக்கு அளித்ததில் (அவர்களுடைய தெய்வங்களும் துணையாய் இருந்தன என அவைகளை இறைவனுக்குக்) கூட்டாக்குகின்றனர். (அவர்கள் கூறும்) இணை துணைகளிலிருந்து அல்லாஹ் மிக உயர்ந்தவன்.

Tafseer