Wa iz qeela lahumuskunoo haazihil qaryata wa kuloo minhaa haisu shi'tum wa qooloo hittatunw wadkhulul baaba sujjadan naghfir lakum khateee'aatikum; sanazeedul muhsineen
(அன்றி அவர்களை நோக்கி) "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (விரும்பிய பொருள்களைப்) புசித்துக் கொள்ளுங்கள். அன்றி "ஹித்ததுன்" (எங்கள் பாவச்சுமையை அகற்றுவாயாக!) என்று கூறிக்கொண்டே தலை குனிந்தவர்களாக அதன் வாயிலில் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்து விடுவோம். நன்மை செய்பவர்களுக்கு பின்னும் அதிகமாகவே நாம் (நற்)கூலி கொடுப்போம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,
Fabaddalal lazeena zalamoo minhum qawlan ghairal lazee qeela lahum fa arsalnaa 'alaihim rijzam minas samaaa'i bimaa kaanoo yazlimoon
அவர்களில் வரம்பு மீறியவர்களோ, அவர்களுக்குக் கூறப்பட்ட ("ஹித்ததுன்" என்ப)தை மாற்றி ("ஹின்த்ததுன்" கோதுமை என்று) கூறினார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்.
Was'alhum 'anil qaryatil latee kaanat haadiratal bahri iz ya'doona fis Sabt iz taateehim heetaanuhum yawma Sabtihim shurra'anw wa yawma laa yasbitoona laa taateehim; kazaalika nabloohum bimaa kaanoo yafsuqoon
(நபியே) கடற்கரையிலிருந்த ஒரு ஊர் (மக்களைப்) பற்றி நீங்கள் அவர்களைக் கேளுங்கள். (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமை யன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில் உள்ள) மீன்கள் அவர்கள் முன் வந்து (நீர் மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம்.
Wa iz qaalat ummatum minhum lima ta'izoona qaw manil laahu muhlikuhum aw mu'azzibuhum 'azaaban shadeedan qaaloo ma'ziratan ilaa Rabbikum wa la'allahum tattaqoon
(இதனை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதனைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (இவர்களை நோக்கி) "அல்லாஹ் எவர்களை அழித்துவிடவேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்" என்று கூறினார்கள். அதற்கவர்கள் "இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்" என்றும் பதில் கூறினார்கள்.
Falammaa nasoo maa zukkiroo bihee anjainal lazeena yanhawna 'anis sooo'i wa akhaznal lazeena zalamoo bi'azaabim ba'eeim bimaa kaanooyafsuqoon
அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு) விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம்.
Falammaa 'ataw 'ammmaa nuhoo 'anhu qulna lahum kkoonoo qiradatan khaasi'een
ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்" என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.)
Wa iz ta azzana Rabbuka la yab'asannna 'alaihim ilaa Yawmil Qiyaamati mai yasoomuhum sooo'al 'azaab; inna Rabbaka lasaree'ul 'iqaab; wa innahoo la Ghafoorur Raheem
(நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக் கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரையில் நாம் செய்து வருவோம் என்று உங்களது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். நிச்சயமாக உங்களுடைய இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
Wa qatta'naahum fil ardi umamam minhumus aalihoona wa min hum doona zaalika wa balawnaahum bilhasanaati wassaiyi aati la'allahum yarji'oon
அவர்களை இப்புவியில் பல பிரிவுகளாகப் பிரித்து (பூமியின் பல பாகங்களிலும் சிதறடித்து) விட்டோம். அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றனர்; இது அல்லாத (பொல்லாத)வர்களும் அவர்களில் இருக்கின்றனர். அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக சௌகரியங்களைக் கொண்டும், துன்பங்களைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.
Fakhalafa mim ba'dihim khalfunw warisul Kitaaba yaa khuzoona 'arada haazal adnaa wa yaqooloona sayughfaru lanaa wa iny yaatihim 'aradum misluhoo yaakhuzooh; alam yu'khaz 'alaihim 'aradum misluhoo yaakhuzooh; alam yu'khaz 'alaihim meesaaqul Kitaabi al laa yaqooloo 'alal laahi illal haqqa wa darasoo maa feeh; wad Daarul Aakhirtu khairul lillazeena yattaqoon; afalaa ta'qiloon
அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய இடத்தை (சிறிதும் தகுதியற்ற) பலர் அடைந்தனர். அவர்கள், (தாங்கள்தாம்) வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் என(க் கூறி), இவ்வற்ப (உலகின்) பொருளைப் பெற்றுக்கொண்டு (அதற்கேற்றவாறு வேத வசனங்களைப் புரட்டுகின்றனர். அன்றி, இக்குற்றத்தைப் பற்றி) "நாங்கள் மன்னிக்கப்படுவோம்" என்றும் கூறுகின்றனர். (வேதத்தில் இவர்கள் புரட்டியதை தொடர்ந்து முன்பு போல் புரட்டுவதற்காக) இதேபோன்ற அற்பப் பொருள்கள் பின்னரும் அவர்களிடம் வரும் சமயத்தில் அதனையும் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதனையும்) கூறக்கூடாது என்று (அவர்களுடைய) வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? அதனை அவர்களும் படித்து (அறிந்து வைத்து)ள்ளனர். (எனினும் அதிலுள்ளவற்றைப் பொருட்படுத்துவது இல்லை.) இறை அச்சமுடையவர்களுக்கு மறுமையின் வீடே மிக மேலானது. (யூதர்களே! இவ்வளவு கூட) நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டாமா?
Wallazeena yumas sikoona bil Kitaabi wa aqaamus Salaata innaa laa nudee'uajral musliheen
எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகின்றார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை.