Skip to main content

تِلْكَ ٱلْقُرَىٰ
அந்த ஊர்கள்
نَقُصُّ
விவரிக்கிறோம்
عَلَيْكَ
உமக்கு
مِنْ
இருந்து
أَنۢبَآئِهَاۚ
அவற்றின் செய்திகள்
وَلَقَدْ
திட்டவட்டமாக
جَآءَتْهُمْ
வந்தனர்/அவர்களிடம்
رُسُلُهُم
அவர்களுடைய தூதர்கள்
بِٱلْبَيِّنَٰتِ
அத்தாட்சிகளைக் கொண்டு
فَمَا كَانُوا۟
அவர்கள் இல்லை
لِيُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக
بِمَا
எதை
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
مِن قَبْلُۚ
முன்னர்
كَذَٰلِكَ
இவ்வாறே
يَطْبَعُ
முத்திரையிடுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ قُلُوبِ
உள்ளங்கள் மீது
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களின்

Tilkal quraa naqussu 'alaika min ambaaa'ihaa; wa laqad jaaa'at hum Rusuluhum bilbaiyinaati famaa kaanoo liyu'minoo bimaa kazzaboo min qabl; kazaalika yatba'ul laahu 'alaa quloobil kaafireen

(நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகின்றோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கி விட்டால் (பின்னர் அதனை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.

Tafseer

وَمَا وَجَدْنَا
நாம் காணவில்லை
لِأَكْثَرِهِم
அவர்களில் அதிகமானவர்களுக்கு
مِّنْ عَهْدٍۖ
எந்த வாக்குறுதியையும்
وَإِن وَجَدْنَآ
நிச்சயமாக கண்டோம்
أَكْثَرَهُمْ
அவர்களில் அதிகமானவர்களை
لَفَٰسِقِينَ
பாவிகளாகவே

Wa maa wajadnaa li aksarihim min 'ahd; wa inw wajadnaaa aksarahum lafaasiqeen

அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குறுதி(யை நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை. அன்றி, நாம் அவர்களில் பெரும்பாலானவர்களை பாவிகளாகவே கண்டோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
بَعَثْنَا
அனுப்பினோம்
مِنۢ
பின்னர்
بَعْدِهِم
பின்னர் அவர்களுக்கு
مُّوسَىٰ
மூஸாவை
بِـَٔايَٰتِنَآ
நம் அத்தாட்சிகளைக் கொண்டு
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
وَمَلَإِي۟هِۦ
இன்னும் அவனுடைய தலைவர்களிடம்
فَظَلَمُوا۟
அநீதியிழைத்தனர்
بِهَاۖ
அவற்றுக்கு
فَٱنظُرْ
கவனிப்பீராக
كَيْفَ كَانَ
எவ்வாறு இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلْمُفْسِدِينَ
விஷமிகளின்

Summa ba'asnaa mim ba'dihim Moosaa bi Aayaatinaaa ilaa Fir'awana wa mala'ihee fazalamoo bihaa fanzur kaifa kaana 'aaqibatul mufsideen

இதற்குப் பின்னரும் மூஸாவை நம்முடைய அத்தாட்சி களுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பி வைத்தோம். எனினும், அவர்களோ அந்த அத்தாட்சிகளை அவமதித்து (நிராகரித்து) விட்டனர். (இத்தகைய) விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள்.

Tafseer

وَقَالَ
கூறினார்
مُوسَىٰ
மூஸா
يَٰفِرْعَوْنُ
ஃபிர்அவ்னே
إِنِّى
நிச்சயமாக நான்
رَسُولٌ
ஒரு தூதர்
مِّن رَّبِّ
இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Wa qaala Moosaa yaa Fir'awnu inee Rasoolum mir Rabbil 'aalameen

மூஸா (ஃபிர்அவ்னை நோக்கி) "ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரின் இறைவனால் (உன்னிடம்) அனுப்பப்பட்ட ஒரு தூதர்" என்று கூறினார்.

Tafseer

حَقِيقٌ
பேராசை உள்ளவன், கடமைப் பட்டவன், தகுதி உள்ளவன்
عَلَىٰٓ أَن
நான் கூறாமலிருப்பதற்கு
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
إِلَّا ٱلْحَقَّۚ
உண்மையைத் தவிர
قَدْ جِئْتُكُم
வந்துவிட்டேன்/உங்களிடம்
بِبَيِّنَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
فَأَرْسِلْ
ஆகவே அனுப்பிவை
مَعِىَ
என்னுடன்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை

Haqeequn 'alaaa al laaa aqoola 'alal laahi illal haqq; qad ji'tukum bibaiyinatim mir Rabbikum fa arsil ma'iya Baneee Israaa'eel

(அன்றி,) "நான் அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதனையும்) கூறாமலிருப்பது (என்மீது) கடமையாகும். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியை நிச்சயமாக நான் உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். ஆதலால் (நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும்) இஸ்ராயீலின் சந்ததிகளை என்னுடன் அனுப்பிவை" (என்றும் கூறினார்.)

Tafseer

قَالَ
கூறினான்
إِن كُنتَ
நீர் இருந்தால்/வந்தீர்
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியைக் கொண்டு
فَأْتِ
வாரீர்
بِهَآ
அதைக் கொண்டு
إِن كُنتَ
நீர் இருந்தால்
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்

Qaala in kunta ji'ta bi Aayatin faati bihaaa in kunta minas saadiqeen

அதற்கவன் "நீங்கள் அத்தாட்சி கொண்டு வந்திருப்பதாக கூறும் உங்கள் கூற்றில் நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அதனைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினான்.

Tafseer

فَأَلْقَىٰ
ஆகவே, எறிந்தார்
عَصَاهُ
தன் தடியை
فَإِذَا
அப்போது
هِىَ
அது
ثُعْبَانٌ
பெரிய பாம்பாக
مُّبِينٌ
தெளிவானது

Qa alqaa 'asaahu fa izaa hiya su'baanum mubeen

ஆகவே (மூஸா) தன் (கைத்)தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு மலைப்பாம்பாகி விட்டது.

Tafseer

وَنَزَعَ
இன்னும் வெளியில் எடுத்தார்
يَدَهُۥ
தன் கையை
فَإِذَا
அப்போது
هِىَ
அது
بَيْضَآءُ
மிக வெண்மையானதாக
لِلنَّٰظِرِينَ
பார்ப்பவர்களுக்கு

Wa naza'a yadahoo fa izaa hiya baidaaa'u linnaazireen

அன்றி, அவர் தன்னுடைய கையை (சட்டைப் பையிலிட்டு) வெளியில் எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு மிக வெண்மை யானதாக(வும், மிக பிரகாசமானதாகவும்) இருந்தது.

Tafseer

قَالَ
கூறினார்(கள்)
ٱلْمَلَأُ
தலைவர்கள்
مِن قَوْمِ
சமுதாயத்தின்
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
إِنَّ هَٰذَا
நிச்சயமாக இவர்
لَسَٰحِرٌ
சூனியக்காரர்
عَلِيمٌ
கற்றறிந்தவர்

Qaalal mala-u min qawmi Fir'awna inna haazaa lasaa hirun 'aleem

(இதனைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கின்றார்" என்று கூறினார்கள்.

Tafseer

يُرِيدُ
நாடுகிறார்
أَن يُخْرِجَكُم
உங்களை வெளியேற்ற
مِّنْ
இருந்து
أَرْضِكُمْۖ
உங்கள் பூமியிலிருந்து
فَمَاذَا
ஆகவே என்ன?
تَأْمُرُونَ
கட்டளையிடுகிறீர்கள்

Yureedu ai yukhrijakum min ardikum famaazaa taamuroon

(அதற்கு ஃபிர்அவ்ன்) "இவர் உங்களை உங்களுடைய பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?" (என்று கேட்டான்.)

Tafseer