Skip to main content

فَأَخَذَتْهُمُ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
ٱلرَّجْفَةُ
நிலநடுக்கம்
فَأَصْبَحُوا۟
காலையை அடைந்தனர்
فِى دَارِهِمْ
தங்கள் பூமியில்
جَٰثِمِينَ
இறந்தவர்களாக

Fa akhazat humur rajfatu fa asbahoo fee daarihim jaasimeen

ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
شُعَيْبًا
ஷுஐபை
كَأَن لَّمْ
வசிக்காதவர்கள் போல்
فِيهَاۚ
அதில்
ٱلَّذِينَ
எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
شُعَيْبًا
ஷுஐபை
كَانُوا۟
ஆகிவிட்டார்கள்
هُمُ ٱلْخَٰسِرِينَ
அவர்கள்தான்/நஷ்டவாளிகளாக

Allazeena kazzaboo Shu'aiban ka al alm yaghnaw feehaa; allazeena kazzaboo Shu'aiban kaanoo humul khaasireen

ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் ஒருக்காலத்திலுமே வசித்திராதவர்களைப் போல (யாதொரு அடையாளமுமின்றி அழிந்து விட்டனர்.) எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்ட மடைந்தார்கள்.

Tafseer

فَتَوَلَّىٰ
ஆகவே விலகினார்
عَنْهُمْ
அவர்களை விட்டு
وَقَالَ
இன்னும் கூறினார்
يَٰقَوْمِ
என் சமுதாயமே
لَقَدْ أَبْلَغْتُكُمْ
திட்டமாக எடுத்துரைத்தேன்/உங்களுக்கு
رِسَٰلَٰتِ
தூதுகளை
رَبِّى
என் இறைவனின்
وَنَصَحْتُ
இன்னும் உபதேசித்தேன்
لَكُمْۖ
உங்களுக்கு
فَكَيْفَ
ஆகவே எவ்வாறு
ءَاسَىٰ
துயர்கொள்வேன் மீது
عَلَىٰ
சமுதாயத்தின்
قَوْمٍ
நிராகரிப்பாளர்களான
كَٰفِرِينَ
Err

Fatawalla 'anhum wa qaala yaa qawmi laqad ablaghtukum Risaalaati Rabbee wa nasahtu lakum fakaifa aasaa'alaa qawmin kaafireen

(அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூதையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே (அதனை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்" என்று கூறினார்.

Tafseer

وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
فِى قَرْيَةٍ
ஓர் ஊரில்
مِّن نَّبِىٍّ
எந்த ஒரு நபியையும்
إِلَّآ أَخَذْنَآ
தவிர/பிடித்தோம்
أَهْلَهَا
அதில் வசிப்பவர்களை
بِٱلْبَأْسَآءِ
வறுமையைக் கொண்டு
وَٱلضَّرَّآءِ
இன்னும் நோயைக் கொண்டு
لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ
அவர்கள் பணிவதற்காக

Wa maaa arsalnaa fee qaryatim min Nabiyyin illaaa akhaznaaa ahlahaa bil baasaaa'i waddarraaa'i la'allahum yaddarra'oon

நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வொரு ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை.

Tafseer

ثُمَّ
பிறகு
بَدَّلْنَا
மாற்றினோம்
مَكَانَ
இடத்தில்
ٱلسَّيِّئَةِ
துன்பத்தின்
ٱلْحَسَنَةَ
இன்பத்தை
حَتَّىٰ
இறுதியாக
عَفَوا۟
அவர்கள் அதிகரிக்கவே
وَّقَالُوا۟
இன்னும் கூறினர்
قَدْ مَسَّ
அடைந்திருக்கிறது
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை(யும்)
ٱلضَّرَّآءُ
நோய்
وَٱلسَّرَّآءُ
இன்னும் சுகம்
فَأَخَذْنَٰهُم
ஆகவே பிடித்தோம்/அவர்களை
بَغْتَةً
திடீரென
وَهُمْ لَا
அவர்கள் உணராமல் இருக்கும் நிலையில்

Summa baddalnaa makaa nas saiyi'atil hasanata hattaa 'afaw wa qaaloo qad massa aabaa'anad darraaa'u wassarraaa'u fa akhaznaahum baghtatanw wa hum laa yash'uroon

பின்னர் நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) "நம்முடைய மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கின்றது" என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக் கொண்டோம்.

Tafseer

وَلَوْ أَنَّ
இருந்தால்/நிச்சயமாக/ஊர்வாசிகள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَٱتَّقَوْا۟
இன்னும் அஞ்சினர்
لَفَتَحْنَا
திறந்திருப்போம்
عَلَيْهِم
அவர்கள் மீது
بَرَكَٰتٍ
அருள்வளங்களை
مِّنَ
இருந்து
ٱلسَّمَآءِ
வானம்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَلَٰكِن
எனினும்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
فَأَخَذْنَٰهُم
ஆகவே பிடித்தோம்/அவர்களை
بِمَا كَانُوا۟
அல்லது செய்து கொண்டிருந்ததன் காரணமாக

Wa law anna ahlal quraaa aamanoo wattaqaw lafatahnaa 'alaihim barakaatim minas samaaa'i wal ardi wa laakin kazzaboo fa akhaznaahum bimaa kaanoo yaksiboon

அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கை கொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.

Tafseer

أَفَأَمِنَ
?/அச்சமற்றார்(கள்)
أَهْلُ ٱلْقُرَىٰٓ
ஊர்வாசிகள்
أَن يَأْتِيَهُم
வருவதை/அவர்களுக்கு
بَأْسُنَا
நம் வேதனை
بَيَٰتًا
இரவில்
وَهُمْ نَآئِمُونَ
அவர்கள் தூங்கியவர்களாக இருக்கும்போது

Afa amina ahlul quraaa ai yaatiyahum baasunaa bayaatanw wa hum naaa'imoon

(நபியே!) இவ்வூரார் (தங்கள் வீடுகளில்) இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் பொழுதே நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்றிருக் கின்றனரா?

Tafseer

أَوَأَمِنَ
?/அச்சமற்றார்(கள்)
أَهْلُ ٱلْقُرَىٰٓ
ஊர்வாசிகள்
أَن يَأْتِيَهُم
வருவதை/அவர்களுக்கு
بَأْسُنَا
நம் வேதனை
ضُحًى
முற்பகலில்
وَهُمْ يَلْعَبُونَ
அவர்கள் விளையாடும்போது

Awa amina ahlul quraaa ai yaatiyahum baasunaa duhanw wa hum yal'aboon

அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும்போதே நம்முடைய வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?

Tafseer

أَفَأَمِنُوا۟
அச்சமற்றார்களா?
مَكْرَ
சூழ்ச்சியை
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
فَلَا يَأْمَنُ
அச்சமற்றிருக்க மாட்டார்(கள்)
مَكْرَ
சூழ்ச்சியை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
إِلَّا ٱلْقَوْمُ
மக்களைத் தவிர
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகளான

Afa aminoo makral laah; falaa yaamanu makral laahi illal qawmul khaasiroon

அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்கமாட்டார்கள்.

Tafseer

أَوَلَمْ يَهْدِ
தெளிவாகவில்லையா?
لِلَّذِينَ
எவர்களுக்கு
يَرِثُونَ
வாரிசாகிறார்கள்
ٱلْأَرْضَ
பூமிக்கு
مِنۢ بَعْدِ
பின்னர்
أَهْلِهَآ
அதில் வசித்தவர்களுக்கு
أَن لَّوْ
என்பது/நாம் நாடினால்
أَصَبْنَٰهُم
சோதித்திருப்போம்/அவர்களை
بِذُنُوبِهِمْۚ
அவர்களுடைய பாவங்களின் காரணமாக
وَنَطْبَعُ
இன்னும் முத்திரையிடுவோம்
عَلَىٰ
மீது
قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்கள்
فَهُمْ
ஆகவே, அவர்கள்
لَا يَسْمَعُونَ
செவியுறமாட்டார்கள்

Awa lam yahdi lillazeena yarisoonal arda mim ba'di ahlihaaa al law nashaaa'u asabnaahum bizunoobihim; wa natba'u 'alaa quloobihim fahum laa yasma'oon

பூமியில் (அழிந்துபோன) முன்னிருந்தவர்களுக்குப் பின்னர் அதற்கு வாரிசான இவர்களையும் நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணமாக (அவ்வாறே அழித்து) தண்டிப்போம் என்ற விஷயம் இவர்களுக்கு நல்லறிவைத் தரவில்லையா? நாம் இவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம். ஆகவே, இவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற மாட்டார்கள்.

Tafseer