Skip to main content
bismillah

الٓمٓصٓ
அலிஃப், லாம், மீம், ஸாத்

Alif-Laaam-Meeem-Saaad

அலிஃப், லாம், மீம், ஸாத்.

Tafseer

كِتَٰبٌ
ஒரு வேதம்
أُنزِلَ
இறக்கப்பட்டது
إِلَيْكَ
உம் மீது
فَلَا يَكُن
இருக்க வேண்டாம்
فِى صَدْرِكَ
உம் இதயத்தில்
حَرَجٌ
நெருக்கடி
مِّنْهُ
இதில்
لِتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காக
بِهِۦ
இதைக் கொண்டு
وَذِكْرَىٰ
இன்னும் ஒரு நல்லுபதேசம்
لِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Kitaabun unzila ilaika falaa yakum fee sadrika harajum minhu litunzira bihee wa zikraa lilmu'mineen

(நபியே!) இவ்வேதம் உங்கள்மீது இறக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி உங்களுடைய உள்ளங்களில் யாதொரு தயக்கமும் வேண்டாம். இதனைக் கொண்டு நீங்கள் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு (இது) ஒரு நல்லுபதேசமாகும்.

Tafseer

ٱتَّبِعُوا۟
பின்பற்றுங்கள்
مَآ
எது
أُنزِلَ
இறக்கப்பட்டது
إِلَيْكُم
உங்களுக்கு
مِّن
இருந்து
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
وَلَا تَتَّبِعُوا۟
பின்பற்றாதீர்கள்
مِن دُونِهِۦٓ
அதைத் தவிர
أَوْلِيَآءَۗ
பொறுப்பாளர்களை
قَلِيلًا مَّا
மிகக் குறைவாக
تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுணர்வு பெறுவது

Ittabi'oo maaa unzila 'ilaikum mir Rabbikum wa laa tattabi'oo min dooniheee awliyaaa'; qaleelam maa tazakkaroon

(மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவன் அருளியதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குக்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவு.

Tafseer

وَكَم مِّن
எத்தனையோ நகரங்கள்
أَهْلَكْنَٰهَا
அழித்தோம்/அவற்றை
فَجَآءَهَا
வந்தது அவற்றுக்கு
بَأْسُنَا
நம் வேதனை
بَيَٰتًا
இரவில்
أَوْ
அல்லது
هُمْ
அவர்கள்
قَآئِلُونَ
பகலில் தூங்குபவர்கள்

Wa kam min qaryatin ahlaknaahaa fajaaa'ahaa baasunaa bayaatan aw hum qaaa'iloon

(பாவிகள் வசித்திருந்த) எத்தனையோ நகரங்களை நாம் அழித்திருக்கின்றோம். அவற்றில் இருந்தவர்கள் இரவிலோ, பகலிலோ நித்திரையில் இருக்கும்பொழுது நம்முடைய வேதனை அவர்களை வந்தடைந்தது.

Tafseer

فَمَا كَانَ
இருக்கவில்லை
دَعْوَىٰهُمْ
அவர்களுடைய வாதம்
إِذْ
வந்த போது
جَآءَهُم
அவர்களிடம்
بَأْسُنَآ
நம் வேதனை
إِلَّآ
தவிர
أَن قَالُوٓا۟
அவர்கள் கூறியது
إِنَّا
நிச்சயமாக நாம்
كُنَّا
இருந்தோம்
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக

Famaa kaana da'waahum iz jaaa'ahum baasunaa illaaa an qaalooo innaa kunnaa zaalimeen

அவர்களிடம் நம்முடைய வேதனை வந்த சமயத்தில் "நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்" என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்கள் கூறவில்லை.

Tafseer

فَلَنَسْـَٔلَنَّ
நிச்சயம் விசாரிப்போம்
ٱلَّذِينَ
எவர்களை
أُرْسِلَ
அனுப்பப்பட்டார்(கள்)
إِلَيْهِمْ
அவர்களிடம்
وَلَنَسْـَٔلَنَّ
இன்னும் நிச்சயம் விசாரிப்போம்
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை

Falanas 'alannal lazeena ursila ilaihim wa lanas 'alannal mursaleen

ஆகவே (இதைப் பற்றி நம்முடைய) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம்.

Tafseer

فَلَنَقُصَّنَّ
நிச்சயம் விவரிப்போம்
عَلَيْهِم
அவர்களுக்கு
بِعِلْمٍۖ
உறுதியான ஞானத்துடன்
وَمَا كُنَّا
நாம் இருக்கவில்லை
غَآئِبِينَ
மறைந்தவர்களாக

Falanaqussanna 'alaihim bi'ilminw wa maa kunnaa ghaaa'ibeen

(அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை.

Tafseer

وَٱلْوَزْنُ
நிறுக்கப்படுதல்
يَوْمَئِذٍ
அன்றைய தினம்
ٱلْحَقُّۚ
உண்மைதான்
فَمَن ثَقُلَتْ
ஆகவேஎவர்/கனமானது
مَوَٰزِينُهُۥ
அவருடைய நிறுவைகள்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்

Walwaznu Yawma'izinil haqq; faman saqulat mawaa zeenuhoo fa-ulaaa'ika humul muflihoon

(ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

Tafseer

وَمَنْ خَفَّتْ
எவர்/இலேசானது
مَوَٰزِينُهُۥ
அவருடைய நிறுவைகள்
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ٱلَّذِينَ خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்தவர்கள்
أَنفُسَهُم
தங்களுக்கே
بِمَا كَانُوا۟
எதன்காரணமாக/ இருந்தனர்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களுக்கு
يَظْلِمُونَ
அநீதியிழைக்கின்றனர்

Wa man khaffat mawaazeenuhoo fa ulaaa'ikal lazeena khasirooo anfusahum bimaa kaanoo bi Aayaatinaa yazlimoon

எவர்களுடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கின்றதோ அவர்கள் நம்முடைய வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
مَكَّنَّٰكُمْ
இடமளித்தோம்/உங்களுக்கு
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَجَعَلْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
لَكُمْ
உங்களுக்கு
فِيهَا
அதில்
مَعَٰيِشَۗ
வாழ்வாதாரங்களை
قَلِيلًا مَّا
மிகக் குறைவாக
تَشْكُرُونَ
நன்றி செலுத்துகிறீர்கள்

Wa laqad makkannaakum fil ardi wa ja'alnaa lakum feehaa ma'aayish; qaleelam maa tashkuroon

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களுக்குப் பூமியில் எல்லா வசதிகளையும் அளித்து, அதில் உங்களுக்கு வாழ்வதற்குத் தேவையான காரணங்களை ஏற்படுத்தினோம். (இவ்வாறிருந்தும்) நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகக் குறைவு.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் அஃராஃப்
القرآن الكريم:الأعراف
ஸஜ்தா (سجدة):206
ஸூரா (latin):Al-A'raf
ஸூரா:7
வசனம்:206
Total Words:3325
Total Characters:14010
Number of Rukūʿs:24
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:39
Starting from verse:954