Skip to main content

إِنَّا
நிச்சயமாக நாம்
لَمَّا
மிக அதிகமாகிய போது
طَغَا ٱلْمَآءُ
தண்ணீர்
حَمَلْنَٰكُمْ
உங்களை ஏற்றினோம்
فِى ٱلْجَارِيَةِ
கப்பலில்

Innaa lammaa taghal maaa'u hamalnaakum fil jaariyah

(நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில்) தண்ணீர் பெருக்கெடுத்த போது, நிச்சயமாக நாம் உங்(கள் மூதாதை)களைக் கப்பலில் ஏற்றி (காப்பாற்றி)க் கொண்டோம்.

Tafseer

لِنَجْعَلَهَا
அதை ஆக்குவதற்காகவும்
لَكُمْ
உங்களுக்கு
تَذْكِرَةً
ஓர் உபதேசமாக
وَتَعِيَهَآ
அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும்
أُذُنٌ
செவிகள்
وَٰعِيَةٌ
கவனித்து செவியுறுகின்ற

Linaj'alahaa lakum tazki ratanw-wa ta'iyahaa unzununw waa'iyah

அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதனைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்).

Tafseer

فَإِذَا نُفِخَ
ஊதப்பட்டால்
فِى ٱلصُّورِ
சூரில்
نَفْخَةٌ
ஊதுதல்
وَٰحِدَةٌ
ஒரு முறை

Fa izaa nufikha fis soori nafkhatunw waahidah

(பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு,

Tafseer

وَحُمِلَتِ
சுமக்கப்பட்டு
ٱلْأَرْضُ
பூமி(யும்)
وَٱلْجِبَالُ
மலைகளும்
فَدُكَّتَا
இரண்டும் அடித்து நொறுக்கப்பட்டால்
دَكَّةً
அடியாக
وَٰحِدَةً
ஒரே

Wa humilatil ardu wal jibaalu fadukkataa dakkatanw waahidah

பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடொன்று மோதி பலமாக அடிப்பட்டால்,

Tafseer

فَيَوْمَئِذٍ
அந்நாளில்தான்
وَقَعَتِ
நிகழும்
ٱلْوَاقِعَةُ
நிகழக்கூடிய நாள்

Fa yawma'izinw waqa'atil waaqi'ah

அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும்.

Tafseer

وَٱنشَقَّتِ
இன்னும் பிளந்து விடும்
ٱلسَّمَآءُ
வானம்
فَهِىَ
அது
يَوْمَئِذٍ
அந்நாளில்
وَاهِيَةٌ
பலவீனப்பட்டு விடும்

Wanshaqqatis samaaa'u fahiya yawma 'izinw-waahiyah

அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகிவிடும்.

Tafseer

وَٱلْمَلَكُ عَلَىٰٓ
வானவர்கள்/அதன் ஓரங்களில் இருப்பார்கள்
وَيَحْمِلُ
சுமப்பார்(கள்)
عَرْشَ
அர்ஷை
رَبِّكَ
உமது இறைவனின்
فَوْقَهُمْ
தங்களுக்கு மேல்
يَوْمَئِذٍ
அந்நாளில்
ثَمَٰنِيَةٌ
எட்டு வானவர்கள்

Wal malaku 'alaaa arjaaa'ihaa; wa yahmilu 'Arsha Rabbika fawqahum yawma'izin samaaniyah

(நபியே!) மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள். அன்றி, அந்நாளில் உங்கள் இறைவனின் அர்ஷை, எட்டு மலக்குகள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள்.

Tafseer

يَوْمَئِذٍ
அந்நாளில்
تُعْرَضُونَ
நீங்கள் சமர்ப்பிக்கப்படுவீர்கள்
لَا تَخْفَىٰ
மறைந்துவிடாது
مِنكُمْ
உங்களிடமிருந்து
خَافِيَةٌ
மறையக்கூடியது எதுவும்

Yawma'izin tu'radoona laa takhfaa min kum khaafiyah

(மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்துவிடாது.

Tafseer

فَأَمَّا مَنْ
ஆகவே, யார்
أُوتِىَ
கொடுக்கப்பட்டாரோ
كِتَٰبَهُۥ
தனது செயலேடு
بِيَمِينِهِۦ
தனது வலது கரத்தில்
فَيَقُولُ
அவர் கூறுவார்
هَآؤُمُ
வாருங்கள்!
ٱقْرَءُوا۟
படியுங்கள்!
كِتَٰبِيَهْ
எனது செயலேட்டை

Fa ammaa man ootiya kitaabahoo biyameenihee fa yaqoolu haaa'umuq ra'oo kitaabiyah

எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு அவனுடைய வலது கையில் கொடுக்கப்படுகின்றானோ அவன் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்) "இதோ! என்னுடைய ஏடு; இதனை நீங்கள் படித்துப் பாருங்கள்" என்றும்,

Tafseer

إِنِّى
நிச்சயமாக நான்
ظَنَنتُ
நம்பினேன்
أَنِّى
நிச்சயமாக நான்
مُلَٰقٍ
சந்திப்பேன்
حِسَابِيَهْ
எனது விசாரணையை

Innee zannantu annee mulaaqin hisaabiyah

"நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்" என்றும் கூறுவான்.

Tafseer