Skip to main content

قَالُوا۟
கூறினார்கள்
يَٰوَيْلَنَآ
எங்களின் நாசமே!
إِنَّا كُنَّا
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
طَٰغِينَ
வரம்பு மீறியவர்களாக

Qaaloo yaa wailanaaa innaa kunnaa taagheen

"நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்; எங்களுக்குக் கேடுதான்" என்று அவர்கள் கூறி,

Tafseer

عَسَىٰ
கூடும்
رَبُّنَآ
எங்கள் இறைவன்
أَن يُبْدِلَنَا
எங்களுக்கு பகரமாக தர(க்கூடும்)
خَيْرًا
சிறந்ததை
مِّنْهَآ
அதை விட
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
إِلَىٰ
பக்கம்
رَبِّنَا
எங்கள் இறைவன்
رَٰغِبُونَ
ஆசை உள்ளவர்கள்

'Asaa rabbunaaa any yubdilanaa khairam minhaaa innaaa ilaa rabbinaa raaghiboon

"நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்கு கின்றோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்" (என்றும் கூறினார்கள்.)

Tafseer

كَذَٰلِكَ
இவ்வாறுதான்
ٱلْعَذَابُۖ
தண்டனை
وَلَعَذَابُ
தண்டனை
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
أَكْبَرُۚ
மிகப் பெரியது
لَوْ كَانُوا۟
அவர்கள் இருக்க வேண்டுமே!
يَعْلَمُونَ
அறிந்தவர்களாக

Kazaalikal azaab, wa la'azaabul aakhirati akbar; law kaanoo ya'lamoon

(நபியே! உங்களை நிராகரிக்கும் இவர்களுக்கும்) இத்தகைய வேதனைதான் கிடைக்கும். மறுமையிலுள்ள வேதனையோ (இதனைவிட) மிகப் பெரிது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Tafseer

إِنَّ لِلْمُتَّقِينَ
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு
عِندَ رَبِّهِمْ
தங்கள் இறைவனிடம்
جَنَّٰتِ
சொர்க்கங்கள்
ٱلنَّعِيمِ
இன்பம் நிறைந்த

Inna lilmuttaqeena 'inda rabbihim jannaatin na'eem

நிச்சயமாக, இறை அச்சமுடையவர்களுக்கு, தங்கள் இறைவனிடத்தில் மிக்க இன்பம் தரும் சுவனபதிகளும் உண்டு.

Tafseer

أَفَنَجْعَلُ
ஆக்குவோமா?
ٱلْمُسْلِمِينَ
முற்றிலும் பணிந்தவர்களை
كَٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளைப் போல்

Afanaj'alul muslimeena kalmujrimeen

(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?

Tafseer

مَا لَكُمْ
உங்களுக்கு என்ன ஆனது
كَيْفَ
எப்படி
تَحْكُمُونَ
நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்

Maa lakum kaifa tahhkumoon

உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பு அளிக்கின்றீர்கள்?

Tafseer

أَمْ لَكُمْ
?/உங்களுக்கு
كِتَٰبٌ
வேதம்
فِيهِ
அதில்
تَدْرُسُونَ
படிக்கின்றீர்களா

Am lakum kitaabun feehi tadrusoon

அல்லது உங்களிடம் (ஏதும்) வேத நூல் இருக்கின்றதா? அதில் நீங்கள் (இவ்விருவரும் சமமெனப்) படித்திருக்கின்றீர்களா?

Tafseer

إِنَّ
நிச்சயமாக
لَكُمْ فِيهِ
உங்களுக்கு/அதில்
لَمَا تَخَيَّرُونَ
நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?

Inna lakum feehi lamaa takhaiyaroon

நீங்கள் விரும்பியதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று அதில் இருக்கின்றதா?

Tafseer

أَمْ لَكُمْ
?/உங்களுக்கு
أَيْمَٰنٌ
ஒப்பந்தங்கள்
عَلَيْنَا
நம்மிடம்
بَٰلِغَةٌ
உறுதியான
إِلَىٰ يَوْمِ
மறுமை நாள் வரை
إِنَّ لَكُمْ
நிச்சயமாக உங்களுக்கு
لَمَا تَحْكُمُونَ
நீங்கள் தீர்ப்பளிப்பதெல்லாம்

Am lakum aymaanun 'alainaa baalighatun ilaa yawmil qiyaamati inna lakum lamaa tahkumoon

அல்லது நீங்கள் கட்டளையிடுவதெல்லாம் மறுமை நாள் வரையில், நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்குமென்று நாம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக் கின்றோமா?

Tafseer

سَلْهُمْ
அவர்களிடம் கேட்பீராக
أَيُّهُم
அவர்களில் யார்
بِذَٰلِكَ
இதற்கு
زَعِيمٌ
பொறுப்பாளர்

Salhum ayyuhum bizaa lika za'eem

(நபியே!) அவர்களை நோக்கி நீங்கள் கேளுங்கள்: "(அவ்வாறாயின்) இதற்கு அவர்களுக்கு யார் பொறுப்பாளி?

Tafseer