Skip to main content

فَتَنَادَوْا۟
ஒருவரை ஒருவர் அழைத்தனர்
مُصْبِحِينَ
அவர்கள் அதிகாலையில் ஆனவுடன்

Fatanaadaw musbiheen

(அதனை அறியாத தோட்டக்காரர்கள்) விடியற்காலையில் ஒருவருக்கொருவர் சப்தமிட்டு அழைத்து,

Tafseer

أَنِ ٱغْدُوا۟
காலையில் செல்லுங்கள்
عَلَىٰ حَرْثِكُمْ
உங்கள் விவசாய நிலத்திற்கு
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰرِمِينَ
அறுவடை செய்பவர்களாக

Anighdoo 'alaa harsikum in kuntum saarimeen

"நீங்கள் விளைச்சலை அறுப்பதாயிருந்தால், அதனை அறுவடை செய்ய உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்" (என்றும் கூறிக்கொண்டார்கள்).

Tafseer

فَٱنطَلَقُوا۟
சென்றனர்
وَهُمْ يَتَخَٰفَتُونَ
அவர்கள்/ தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக

Fantalaqoo wa hum yatakhaafatoon

(தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டே சென்றார்கள்.

Tafseer

أَن لَّا
அதில் நுழைந்து விடக்கூடாது
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
عَلَيْكُم
உங்களிடம்
مِّسْكِينٌ
ஏழை ஒருவரும்

Al laa yadkhulannahal yawma 'alaikum miskeen

(யாசகம் கேட்கக்கூடிய) யாதொரு ஏழை உங்களிடம் இன்றைய தினம் அதில் நுழைந்து வராதிருக்கவும் (என்று மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்.)

Tafseer

وَغَدَوْا۟
இன்னும் காலையில் புறப்பட்டனர்
عَلَىٰ حَرْدٍ
ஒரு கெட்ட எண்ணத்துடன்
قَٰدِرِينَ
சக்தி உள்ளவர்களாக

Wa ghadaw 'alaa hardin qaadireen

தங்களுடைய எண்ணத்தில் (தங்களுடன் ஒரு ஏழையும் வராது) தடுத்துவிட்டதாக எண்ணிக்கொண்டு, அதிகாலையில் சென்றார்கள்.

Tafseer

فَلَمَّا رَأَوْهَا
அவர்கள் அதைப் பார்த்த போது
قَالُوٓا۟
கூறினார்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
لَضَآلُّونَ
வழிதவறி விட்டோம்

Falammaa ra awhaa qaalooo innaa ladaaalloon

(சென்று) அதனைப் பார்க்கவே, (விளைச்ச லெல்லாம் அழிந்து போயிருப்பதைக் கண்டு "இது நம்முடையதல்ல; வேறொருவருடைய தோட்டத்திற்கு) நிச்சயமாக நாம் வழிதவறியே வந்துவிட்டோம்" என்றார்கள்.

Tafseer

بَلْ
இல்லை, மாறாக
نَحْنُ
நாங்கள்
مَحْرُومُونَ
இழப்பிற்குள்ளாகி விட்டோம்

Bal nahnu mahroomoon

(பின்னர், அதனைத் தங்களுடைய தோட்டம்தான் என்று அறிந்து) அல்ல. நாம்தாம் நம்முடைய பலன்களை இழந்து விட்டோம் (என்று கூறினார்கள்).

Tafseer

قَالَ
கூறினார்
أَوْسَطُهُمْ
அவர்களில் நீதவான்
أَلَمْ أَقُل
நான் உங்களுக்கு கூறவில்லையா?
لَوْلَا تُسَبِّحُونَ
நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா

Qaala awsatuhum alam aqul lakum law laa tusabbihoon

அவர்களிலுள்ள ஒரு நடுநிலையாளன் அவர்களை நோக்கி "(அடிக்கடி) நான் உங்களுக்குக் கூறவில்லையா? (நான் கூறியபடி) நீங்கள் (இறைவனைத்) துதிசெய்து கொண்டிருக்க வேண்டாமா?" என்று கூறினார்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
رَبِّنَآ
எங்கள் இறைவன்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
كُنَّا
நாங்கள்ஆகிவிட்டோம்
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக

Qaaloo subhaana rabbinaaa innaa kunnaa zaalimeen

அதற்கவர்கள் "எங்கள் இறைவனே! நீ மிக்க பரிசுத்த மானவன்; நிச்சயமாக நாங்கள்தாம் (எங்களுக்கு) தீங்கிழைத்துக் கொண்டோம்" என்று கூறி,

Tafseer

فَأَقْبَلَ
முன்னோக்கினர்
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
عَلَىٰ بَعْضٍ
சிலரை
يَتَلَٰوَمُونَ
அவர்களுக்குள் பழித்தவர்களாக

Fa aqbala ba'duhum 'alaa ba'diny yatalaawamoon

பின்னர், அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி, ஒருவர் மற்றவரை நிந்தனை செய்து கொண்டனர்.

Tafseer