Skip to main content

هَمَّازٍ
அதிகம் புறம் பேசுபவன்
مَّشَّآءٍۭ بِنَمِيمٍ
அதிகம் கோள் சொல்பவன்

Hammaazim mash shaaa'im binameem

(அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம்கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக் கொண்டு திரிபவன்.

Tafseer

مَّنَّاعٍ
அதிகம் தடுப்பவன்
لِّلْخَيْرِ
நன்மையை
مُعْتَدٍ
வரம்பு மீறி
أَثِيمٍ
பெரும் பாவி

Mannaa'il lilkhairi mu'tadin aseem

(அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும் பாவி;

Tafseer

عُتُلٍّۭ
அசிங்கமானவன்
بَعْدَ
பிறகு
ذَٰلِكَ
இதற்கு
زَنِيمٍ
ஈனன்

'Utullim ba'da zaalika zaneem

கடின சுபாவமுள்ளவன். இவ்வளவெல்லாம் இருந்தும் ஜாதியிலும் ஈனன்.

Tafseer

أَن كَانَ
இருந்த காரணத்தால்
ذَا مَالٍ
செல்வ(மு)ம் உடையவனாக
وَبَنِينَ
ஆண் பிள்ளைகளும்

An kaana zaa maalinw-wa baneen

ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கின்றது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு),

Tafseer

إِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
عَلَيْهِ
அவன் மீது
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
قَالَ
கூறுகின்றான்
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகள்
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்

Izaa tutlaa 'alaihi aayaatunaa qaala asaateerul awwaleen

நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள் என்று கூறுகிறான்.

Tafseer

سَنَسِمُهُۥ
விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்
عَلَى ٱلْخُرْطُومِ
மூக்கின் மீது

Sanasimuhoo 'alal khurtoom

(என்றென்றும் இருக்கக்கூடியவாறும், அனைவரும் அறியக்கூடியவாறும்) அவனுடைய மூக்கில் அதிசீக்கிரத்தில் ஒரு அடையாளமிடுவோம்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
بَلَوْنَٰهُمْ
அவர்களை சோதித்தோம்
كَمَا بَلَوْنَآ
நாம் சோதித்ததுபோல்
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
தோட்ட முடையவர்களை
إِذْ أَقْسَمُوا۟
அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!
لَيَصْرِمُنَّهَا
அதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும்
مُصْبِحِينَ
அவர்கள் அதிகாலையில் இருக்கும் போது

Innaa balawnaahum kamaa balawnaaa As-haabal jannati iz 'aqsamoo la-yasri munnahaa musbiheen

(யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள்.

Tafseer

وَلَا يَسْتَثْنُونَ
அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று கூறவில்லை

Wa laa yastasnoon

எனினும், (இன்ஷா அல்லாஹ்) "இறைவன் அருள் புரிந்தால்" என்று கூறவில்லை.

Tafseer

فَطَافَ
இரவில் சுற்றியது
عَلَيْهَا
அதன் மீது
طَآئِفٌ
ஒரு கட்டளை
مِّن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
وَهُمْ نَآئِمُونَ
அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது

Fataafa 'alaihaa taaa'i fum mir rabbika wa hum naaa'imoon

ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உங்களது இறைவனின் புறத்தால் ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து (அழித்து) விட்டது.

Tafseer

فَأَصْبَحَتْ
ஆகிவிட்டது
كَٱلصَّرِيمِ
அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று

Fa asbahat kassareem

பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று.

Tafseer