قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَهْلَكَنِيَ اللّٰهُ وَمَنْ مَّعِيَ اَوْ رَحِمَنَاۙ فَمَنْ يُّجِيْرُ الْكٰفِرِيْنَ مِنْ عَذَابٍ اَلِيْمٍ ( الملك: ٢٨ )
Qul ara'aytum in ahlaka niyal laahu wa mam ma'iya aw rahimanaa famai-yujeerul kaafireena min 'azaabin aleem (al-Mulk 67:28)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் விரும்புகின்றபடி) அல்லாஹ் அழித்து விட்டாலும் அல்லது அவன் எங்களுக்கு அருள் புரிந்தாலும் (அது எங்கள் விஷயம். ஆயினும்,) துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிக்கும் உங்களை பாதுகாப்பவர் யார் என்பதை(க் கவனித்து)ப் பார்த்தீர்களா?
English Sahih:
Say, [O Muhammad], "Have you considered: whether Allah should cause my death and those with me or have mercy upon us, who can protect the disbelievers from a painful punishment?" ([67] Al-Mulk : 28)
1 Jan Trust Foundation
கூறுவீராக| அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?