Fa'tarafoo bizambihim fasuhqal li as haabis sa'eer
தங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
Innal lazeena yakhshawna rabbahum bilghaibi lahum maghfiratunw wa ajrun kabeer
நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு.
Wa asirroo qawlakum awijharoo bihee innahoo 'aleemum bizaatis sudoor
(மனிதர்களே!) நீங்கள் உங்கள் வார்த்தைகளை இரகசியமாகக் கூறுங்கள் அல்லது பகிரங்கமாகவே கூறுங்கள். (எவ்விதம் கூறியபோதிலும், இறைவன் அதனை நன்கறிந்து கொள்வான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன், (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவைகளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.
Alaa ya'lamu man khalaq wa huwal lateeful khabeer
(அனைவரையும்) படைத்தவன் (அவைகளில் உள்ளவைகளை) அறிய மாட்டானா? அவனோ உட்கிருபை உடையவனாகவும் (அனைத்தையும்) வெகு நுட்பமாக அறியக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
Huwal lazee ja'ala lakumul arda zaloolan famshoo fee manaakibihaa wa kuloo mir rizqihee wa ilaihin nushoor
அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவைகளைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது.
'A-amintum man fissamaaa'i aiyakhsifa bi kumul arda fa izaa hiya tamoor
வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து நடு நடுங்(கிக்) கு(முறு)ம்.
Am amintum man fissamaaa'i ai yursila 'alaikum haasiban fasata'lamoona kaifa nazeer
அல்லது வானத்திலிருப்பவன், உங்கள் மீது கல்மழையை பொழிய மாட்டான் என்று நீங்கள் பயமற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின், எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
Wa laqad kazzabal lazeena min qablihim fakaifa kaana nakeer
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (இவர்களைப் போலவே நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர். அந்நிராகரிப்பு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனித்தீர்களா?
Awalam yaraw ilat tairi fawqahum saaaffaatinw wa yaqbidn; maa yumsikuhunna illaar rahmaan; innahoo bikulli shai im baseer
இறக்கைகளை விரித்துக் கொண்டும், மடக்கிக் கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் (அணி அணியாகச் செல்லும் பறவைகளை இவர்கள் கவனிக்கவில்லையா? ரஹ்மானைத் தவிர, (மற்றெவரும்) அவைகளை (ஆகாயத்தில் தூக்கி)ப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை! நிச்சயமாக அவன் அனைத்தையும் உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.
Amman haazal lazee huwa jundul lakum yansurukum min doonir rahmaan; inilkaafiroona illaa fee ghuroor
ரஹ்மானையன்றி உங்களுக்கு உதவி செய்யக்கூடிய படைகள் எவை? இந்நிராகரிப்பவர்கள் வெறும் மாயையிலன்றி வேறில்லை.