Skip to main content
bismillah

تَبَٰرَكَ
அருள் வளமிக்கவன்
ٱلَّذِى
எவன்
بِيَدِهِ
அவனுடைய கரத்தில்
ٱلْمُلْكُ
ஆட்சி
وَهُوَ
அவன்
عَلَىٰ كُلِّ
எல்லாப் பொருள்கள் மீதும்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Tabaarakal lazee biyadihil mulku wa huwa 'alaa kulli shai-in qadeer

(மனிதர்களே! வானம் பூமி ஆகிய) அனைத்தின் ஆட்சி எவன் கையில் இருக்கின்றதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவைகளைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.

Tafseer

ٱلَّذِى
எவன்
خَلَقَ
படைத்தான்
ٱلْمَوْتَ
மரணத்தை(யும்)
وَٱلْحَيَوٰةَ
வாழ்க்கையையும்
لِيَبْلُوَكُمْ
அவன் உங்களை சோதிப்பதற்காக
أَيُّكُمْ
உங்களில் யார்
أَحْسَنُ
மிக அழகானவர்
عَمَلًاۚ
செயலால்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்

Allazee khalaqal mawta walhayaata liyabluwakum ayyukum ahsanu 'amalaa; wa huwal 'azeezul ghafoor

உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கை யையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன்.

Tafseer

ٱلَّذِى خَلَقَ
எவன்/படைத்தான்
سَبْعَ سَمَٰوَٰتٍ
ஏழு வானங்களை
طِبَاقًاۖ
அடுக்கடுக்காக
مَّا تَرَىٰ
நீர் பார்ப்பதில்லை
فِى خَلْقِ
படைப்பில்
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனின்
مِن تَفَٰوُتٍۖ
எவ்வித ஏற்றத் தாழ்வையும்
فَٱرْجِعِ ٱلْبَصَرَ
நீர் மீண்டும் திருப்புவீராக!/பார்வையை
هَلْ تَرَىٰ
நீர் பார்க்கிறீரா?
مِن فُطُورٍ
ஏதாவது பிளவுகளை

Allazee khalaqa sab'a samaawaatin tibaaqam maa taraa fee khalqir rahmaani min tafaawutin farji'il basara hal taraa min futoor

அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தவன். (மனிதனே!) அந்த ரஹ்மானுடைய படைப்பில் நீ யாதொரு ஒழுங்கீனத்தையும் காணமாட்டாய். மற்றொரு முறை (அதனைக் கவனித்துப்) பார். அதில் யாதொரு பிளவை நீ காண்கின்றாயா?

Tafseer

ثُمَّ
பிறகு
ٱرْجِعِ
மீண்டும் திருப்புவீராக!
ٱلْبَصَرَ
பார்வையை
كَرَّتَيْنِ
இரு முறை
يَنقَلِبْ
திரும்பிவிடும்
إِلَيْكَ
உம் பக்கம்
ٱلْبَصَرُ
அந்தப் பார்வை
خَاسِئًا
இழிவடைந்ததாக
وَهُوَ
இன்னும் அது
حَسِيرٌ
கலைத்துவிடும்

Summar ji'il basara karrataini yanqalib ilaikal basaru khaasi'anw wa huwa haseer

(பின்னும்) பின்னும் இரு முறை பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்தபோதிலும் யாதொரு குறையும் காண முடியாது.) உன்னுடைய பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
زَيَّنَّا
அலங்கரித்தோம்
ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا
வானத்தை/கீழ்
بِمَصَٰبِيحَ
விளக்குகளால்
وَجَعَلْنَٰهَا
இன்னும் அவற்றை ஏற்படுத்தினோம்
رُجُومًا
எறிவதற்காக
لِّلشَّيَٰطِينِۖ
ஷைத்தான்களை
وَأَعْتَدْنَا
இன்னும் தயார் செய்துள்ளோம்
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابَ ٱلسَّعِيرِ
கொழுந்து விட்டெரியும் நரகநெருப்பின் வேதனையை

Wa laqad zaiyannas samaaa'ad dunyaa bimasaa beeha wa ja'alnaahaa rujoomal lish shayaateeni wa a'tadnaa lahum 'azaabas sa'eer

நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ள வர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். அன்றி, அவைகளை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம். (இதையன்றி) அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.

Tafseer

وَلِلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்களுக்கு
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனை
عَذَابُ
தண்டனை
جَهَنَّمَۖ
நரகத்தின்
وَبِئْسَ
இன்னும் மிகக் கெட்டது
ٱلْمَصِيرُ
மீளுமிடங்களில்

Wa lillazeena kafaroo bi rabbihim 'azaabu jahannama wa bi'sal maseer

(இவர்களையன்றி) இன்னும் எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனையுண்டு. அது மகாகெட்ட தங்குமிடம்.

Tafseer

إِذَآ أُلْقُوا۟
அவர்கள் எறியப்பட்டால்
فِيهَا
அதில்
سَمِعُوا۟
செவியுறுவார்கள்
لَهَا
அதில்
شَهِيقًا
கடுமையான சப்தத்தை
وَهِىَ
இன்னும் அது
تَفُورُ
கொதிக்கும்

Izaaa ulqoo feehaa sami'oo lahaa shaheeqanw wa hiya tafoor

அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள். அது கோபத்தால் வெடித்து விடுவதைப் போல் குமுறிக் கொண்டிருக்கும்.

Tafseer

تَكَادُ
அது நெருங்கிவிடும்
تَمَيَّزُ
தெரித்துவிட
مِنَ ٱلْغَيْظِۖ
கோபத்தால்
كُلَّمَآ أُلْقِىَ
எறியப்படும் போதெல்லாம்
فِيهَا
அதில்
فَوْجٌ
ஒரு கூட்டம்
سَأَلَهُمْ
அவர்களிடம் கேட்பார்(கள்)
خَزَنَتُهَآ
அதன் காவலாளிகள்
أَلَمْ يَأْتِكُمْ
உங்களிடம் வரவில்லையா?
نَذِيرٌ
ஓர் எச்சரிப்பாளர்

Takaadu tamayyazu minal ghaizi kullamaaa uliqya feehaa fawjun sa alahum khazanatuhaaa alam yaatikum nazeer

அதில் ஒரு கூட்டத்தினரை எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலாளர் அவர்களை நோக்கி ("இவ்வேதனையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் உங்களிடம் வரவில்லையா" என்று கேட்பார்கள்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
بَلَىٰ
ஏன் வரவில்லை
قَدْ
திட்டமாக
جَآءَنَا
எங்களிடம் வந்தார்
نَذِيرٌ
எச்சரிப்பாளர்
فَكَذَّبْنَا
ஆனால் பொய்ப்பித்தோம்
وَقُلْنَا
இன்னும் கூறினோம்
مَا نَزَّلَ
இறக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
مِن شَىْءٍ
எதையும்
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
إِلَّا
தவிர
فِى ضَلَٰلٍ
வழிகேட்டிலேயே
كَبِيرٍ
பெரிய

Qaaloo balaa qad jaaa'anaa nazeerun fakazzabnaa wa qulnaa maa nazzalal laahu min shai in in antum illaa fee dalaalin kabeer

அதற்கவர்கள் "மெய்தான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் (உங்கள் மீது) யாதொன்றையும் இறக்கி வைக்கவே இல்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலன்றி இருக்க வில்லை என்று (அவர்களை நோக்கி) நாங்கள் கூறினோம்" எனறு கூறுவார்கள்.

Tafseer

وَقَالُوا۟
இன்னும் கூறுவார்கள்
لَوْ كُنَّا
நாங்கள் இருந்தால்
نَسْمَعُ
செவி ஏற்பவர்களாக
أَوْ
அல்லது
نَعْقِلُ
சிந்தித்து புரிபவர்களாக
مَا كُنَّا
ஆகி இருக்க மாட்டோம்
فِىٓ أَصْحَٰبِ
நரகவாசிகளில்

Wa qaaloo law kunnaa nasma'u awna'qilu maa kunnaa feee as haabis sa'eer

அன்றி "(அத்தூதர்களின் வார்த்தைகளுக்கு) நாங்கள் செவிசாய்த்து அவைகளை நாங்கள் சிந்தித்திருந்தால், நாங்கள் நரகவாசிகளாகி இருக்கவே மாட்டோம்" என்று கூறி,

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் முல்க்
القرآن الكريم:الملك
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Mulk
ஸூரா:67
வசனம்:30
Total Words:330
Total Characters:1313
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:77
Starting from verse:5241