قُلْ اَنَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلٰٓى اَعْقَابِنَا بَعْدَ اِذْ هَدٰىنَا اللّٰهُ كَالَّذِى اسْتَهْوَتْهُ الشَّيٰطِيْنُ فِى الْاَرْضِ حَيْرَانَ لَهٗٓ اَصْحٰبٌ يَّدْعُوْنَهٗٓ اِلَى الْهُدَى ائْتِنَا ۗ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰىۗ وَاُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِيْنَۙ ( الأنعام: ٧١ )
Qul anad'oo min doonil laahi maa laa yanfa'unaa wa laa yadurrunaa wa nuraddu 'alaaa a'qaabina ba'da iz hadaanal laahu kallazis tahwat hush Shayaateenu fil ardi hairaana lahooo ashaabuny yad'oo nahooo ilal huda' tinaa; qul inna hudal laahi huwal hudaa wa umirnaa linuslima li Rabbil 'aalameen (al-ʾAnʿām 6:71)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கேளுங்கள்: "அல்லாஹ்வை விட்டுவிட்டு நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவைகளையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா? (அவ்வாறாயின்) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் "தம்மிடம் வா" என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்." (மேலும்) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்."
English Sahih:
Say, "Shall we invoke instead of Allah that which neither benefits us nor harms us and be turned back on our heels after Allah has guided us? [We would then be] like one whom the devils enticed [to wander] upon the earth confused, [while] he has companions inviting him to guidance, [calling], 'Come to us.'" Say, "Indeed, the guidance of Allah is the [only] guidance; and we have been commanded to submit to the Lord of the worlds. ([6] Al-An'am : 71)
1 Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறும்| “நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் “எங்கள் இடம் வந்து விடு” என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.” இன்னும் கூறும்| “நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்.”