Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௬௫

قُلْ هُوَ الْقَادِرُ عَلٰٓى اَنْ يَّبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ اَوْ مِنْ تَحْتِ اَرْجُلِكُمْ اَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَّيُذِيْقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍۗ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ لَعَلَّهُمْ يَفْقَهُوْنَ   ( الأنعام: ٦٥ )

Say
قُلْ
கூறுவீராக
"He
هُوَ
அவன்தான்
(is) All Able
ٱلْقَادِرُ
சக்தியுள்ளவன்
[on]
عَلَىٰٓ
மீது
to send
أَن يَبْعَثَ
அனுப்புவதற்கு
upon you
عَلَيْكُمْ
உங்கள் மீது
punishment
عَذَابًا
வேதனையை
from
مِّن
இருந்து
above you
فَوْقِكُمْ
உங்களுக்கு மேல்
or
أَوْ
அல்லது
from
مِن
இருந்து
beneath
تَحْتِ
கீழ்
your feet
أَرْجُلِكُمْ
உங்கள் கால்கள்
or
أَوْ
அல்லது
(to) confuse you
يَلْبِسَكُمْ
கலந்து/உங்களை
(into) sects
شِيَعًا
(பல) பிரிவுகளாக
and make (you) taste -
وَيُذِيقَ
இன்னும் சுவைக்க வைப்பதற்கும்
some of you
بَعْضَكُم
உங்களில் சிலருக்கு
violence
بَأْسَ
ஆற்றலை
(of) others"
بَعْضٍۗ
சிலருடைய
See
ٱنظُرْ
கவனிப்பீராக
how
كَيْفَ
எவ்வாறு
We explain
نُصَرِّفُ
விவரிக்கிறோம்
the Signs
ٱلْءَايَٰتِ
வசனங்களை
so that they may understand
لَعَلَّهُمْ يَفْقَهُونَ
அவர்கள் விளங்குவதற்காக

Qul huwal Qaadiru 'alaaa ai yab'asa 'alaikum 'azaabam min fawqikum aw min tahti arjulikum aw yalbisakum shiya'anw wa yuzeeqa ba'dakum baasa ba'd; unzur kaifa nusarriful Aayaati la'allahum yafqahoon (al-ʾAnʿām 6:65)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு (யாதொரு) வேதனை உண்டுபண்ணவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, உங்களுக்குள் சிலர் சிலருடன் போர் புரியும்படிச் (செய்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீங்கள் அனுபவிக்கும்படிச்) செய்யவும் அவன் சக்தி உடையவனாகவே இருக்கின்றான்." அவர்கள் விளங்கிக்கொள்வதற்காக நாம் (நம்முடைய) வசனங்களை எவ்வாறு பல வகைகளில் (தெளிவு படுத்திக்) கூறுகின்றோம் என்று நீங்கள் கவனியுங்கள்.

English Sahih:

Say, "He is the [one] Able to send upon you affliction from above you or from beneath your feet or to confuse you [so you become] sects and make you taste the violence of one another." Look how We diversify the signs that they might understand. ([6] Al-An'am : 65)

1 Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.