Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௪௮

سَيَقُوْلُ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَاۤءَ اللّٰهُ مَآ اَشْرَكْنَا وَلَآ اٰبَاۤؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَيْءٍۗ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰى ذَاقُوْا بَأْسَنَاۗ قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَنَاۗ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْتُمْ اِلَّا تَخْرُصُوْنَ  ( الأنعام: ١٤٨ )

Will say
سَيَقُولُ
கூறுகிறார்(கள்)
those who associate partners (with Allah)
ٱلَّذِينَ أَشْرَكُوا۟
இணைவைப்பவர்கள்
"If Had willed
لَوْ شَآءَ
நாடியிருந்தால்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
not we (would) have associated partners (with Allah)
مَآ أَشْرَكْنَا
இணைவைத்திருக்க மாட்டோம்
and not our forefathers
وَلَآ ءَابَآؤُنَا
இன்னும் எங்கள் மூதாதைகள்
and not we (would) have forbidden
وَلَا حَرَّمْنَا
இன்னும் தடை செய்திருக்க மாட்டோம்
[of] anything"
مِن شَىْءٍۚ
எதையும்
Likewise
كَذَٰلِكَ
இவ்வாறே
denied
كَذَّبَ
பொய்ப்பித்தார்(கள்)
those who
ٱلَّذِينَ
எவர்கள்
(were from) before them
مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னர்
until
حَتَّىٰ
இறுதியாக
they tasted
ذَاقُوا۟
சுவைத்தனர்
Our wrath
بَأْسَنَاۗ
நம் தண்டனையை
Say
قُلْ
கூறுவீராக
"Is with you
هَلْ عِندَكُم
உங்களிடம் உண்டா?
[of] any knowledge
مِّنْ عِلْمٍ
கல்வியில் ஏதும்
then produce it
فَتُخْرِجُوهُ
வெளிப்படுத்துங்கள் அதை
for us?
لَنَآۖ
நமக்கு
Not you follow
إِن تَتَّبِعُونَ
நீங்கள் பின்பற்றுவதில்லை
except
إِلَّا
தவிர
the assumption
ٱلظَّنَّ
சந்தேகம்
and not you (do)
وَإِنْ أَنتُمْ
இல்லை/நீங்கள்
but
إِلَّا
தவிர
guess"
تَخْرُصُونَ
கற்பனை செய்கிறீர்கள்

Sayaqoolul lazeena ashrakoo law shaaa'al laahu maaa ashraknaa wa laaa aabaa'unaa wa laa harramnaa min shai'; kazaalika kazzabal lazeena min qablihim hattaa zaaqoo baasanaa; qul hal 'indakum min 'ilmin fatukh rijoohu lanaa in tattabi'oona illaz zanna wa in antum illaa takhhrusoon (al-ʾAnʿām 6:148)

Abdul Hameed Baqavi:

"அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்களுடைய மூதாதைகளும், (அல்லாஹ்வுக்கு யாதொன்றையும்) இணை வைத்திருக்க மாட்டோம்; (புசிக்கக் கூடிய) யாதொன்றையும் (ஆகாதென) நாங்கள் தடுத்திருக்க மாட்டோம்" என்று இணை வைத்து வணங்கும் இவர்கள் கூறக்கூடும். (நபியே! இவர்கள் பரிகசிக்கும்) இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம்முடைய வேதனையைச் சுவைக்கும் வரையில் (நபிமார்களைப்) பொய்யாக்கியே வந்தனர். ஆகவே (நீங்கள் அவர்களை நோக்கி "இதற்கு) உங்களிடம் ஏதும் ஆதாரமுண்டா? (இருந்தால்) அதனை நம்மிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் சுயமாகவே கற்பனை செய்து கொண்ட (உங்களுடைய) வீண் எண்ணத்தில் மூழ்கிக் கிடப்பவர் களேயன்றி வேறில்லை" என்று கூறுங்கள்.

English Sahih:

Those who associated [others] with Allah will say, "If Allah had willed, we would not have associated [anything] and neither would our fathers, nor would we have prohibited anything." Likewise did those before deny until they tasted Our punishment. Say, "Do you have any knowledge that you can produce for us? You follow not except assumption, and you are not but misjudging." ([6] Al-An'am : 148)

1 Jan Trust Foundation

(அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் - இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.