Skip to main content

وَهُوَ
அவன்தான்
ٱلْقَاهِرُ
ஆதிக்கமுள்ளவன்
فَوْقَ
மேல்
عِبَادِهِۦۖ
தன் அடியார்கள்
وَيُرْسِلُ
இன்னும் அனுப்புகிறான்
عَلَيْكُمْ
உங்கள் மீது
حَفَظَةً
காவலர்களை
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا جَآءَ
வந்தால்
أَحَدَكُمُ
உங்களில் ஒருவருக்கு
ٱلْمَوْتُ
மரணம்
تَوَفَّتْهُ
கைப்பற்றுகின்றனர்/ அவரை
رُسُلُنَا
நம் தூதர்கள்
وَهُمْ
அவர்கள்
لَا يُفَرِّطُونَ
குறைவு செய்யமாட்டார்கள்

Wa huwal qaahiru fawqa 'ibaadihee wa yursilu 'alaikum hafazatan hattaaa izaa jaaa'a ahadakumul mawtu tawaffathu rusulunaa wa hum laa yufarritoon

அவன் தன் அடியார்களை அடக்கியே ஆளுகின்றான்; அன்றி உங்களுக்குப் பாதுகாப்பாளர்களையும் ஏற்படுத்துகின்றான். அவர்கள் உங்களில் ஒவ்வொருவரையும் மரண (கால)ம் வரும் வரையில் பாதுகாத்து, பின்னர் அவரை இறக்கச் செய்கின்றனர்.அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை.

Tafseer

ثُمَّ
பிறகு
رُدُّوٓا۟
திருப்பப்படுவார்கள்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்விடம்
مَوْلَىٰهُمُ
அவர்களின் எஜமான்
ٱلْحَقِّۚ
உண்மையானவன்
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
لَهُ
அவனுக்கே
ٱلْحُكْمُ
அதிகாரம்
وَهُوَ
அவன்
أَسْرَعُ
மிகத் தீவிரமானவன்
ٱلْحَٰسِبِينَ
கணக்கிடுபவர்களில்

Summa ruddooo ilallaahi mawlaahumul haqq; alaa lahul hukmu wa Huwa asra'ul haasibeen

(இதன்) பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடமே கொண்டு வரப்படுவார்கள். (அந்நேரத்தில்) தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியது என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும். அன்றி அவன் கணக்கைத் தீர்ப்பதிலும் மிகத் தீவிரமானவன்.

Tafseer

قُلْ
கூறுவீராக
مَن
யார்
يُنَجِّيكُم
பாதுகாப்பவன்/உங்களை
مِّن ظُلُمَٰتِ
இருள்களில்
ٱلْبَرِّ
தரை
وَٱلْبَحْرِ
இன்னும் கடல்
تَدْعُونَهُۥ
பிரார்த்திக்கிறீர்கள்/அவனிடம்
تَضَرُّعًا
பணிவாக
وَخُفْيَةً
இன்னும் மறைவாக
لَّئِنْ أَنجَىٰنَا
பாதுகாத்தால்/எங்களை
مِنْ
இருந்து
هَٰذِهِۦ
இதில்
لَنَكُونَنَّ
நிச்சயம் ஆகிவிடுவோம்
مِنَ ٱلشَّٰكِرِينَ
நன்றியாளர்களில்

Qul mai yunajjeekum min zulumaatil barri walbahri tad'oonahoo tadarru'anw wa khufyatann la'in anjaanaa min haazihee lanakoonana minash shaakireen

நீங்கள் "தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் சிக்கி (மிக கஷ்டத்திற்குள்ளாகிவிட்ட சமயத்தில்) எங்களை இதிலிருந்து பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர் களாகி விடுவோம் என்று மறைவாகவும், பணிவாகவும் நீங்கள் பிரார்த்திக்கும் சமயத்தில் உங்களை பாதுகாப்பவன் யார்?" என்று (நபியே!) நீங்கள் (அவர்களைக்) கேட்டு,

Tafseer

قُلِ
கூறுவீராக
ٱللَّهُ
அல்லாஹ்தான்
يُنَجِّيكُم
பாதுகாக்கிறான்/உங்களை
مِّنْهَا
இதிலிருந்து
وَمِن
இன்னும் இருந்து
كُلِّ
எல்லா
كَرْبٍ
கஷ்டம்
ثُمَّ
பிறகு
أَنتُمْ
நீங்கள்
تُشْرِكُونَ
இணைவைக்கிறீர்கள்

Qulil laahu yunajjjeekum minhaa wa min kulli karbin summa antum tushrikoon

"இதிலிருந்தும் மற்ற கஷ்டங்களிலிருந்தும் உங்களை பாதுகாப்பவன் அல்லாஹ்தான். (இவ்வாறிருந்தும்) பின்னும் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே!" என்று நீங்கள் கூறுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
هُوَ
அவன்தான்
ٱلْقَادِرُ
சக்தியுள்ளவன்
عَلَىٰٓ
மீது
أَن يَبْعَثَ
அனுப்புவதற்கு
عَلَيْكُمْ
உங்கள் மீது
عَذَابًا
வேதனையை
مِّن
இருந்து
فَوْقِكُمْ
உங்களுக்கு மேல்
أَوْ
அல்லது
مِن
இருந்து
تَحْتِ
கீழ்
أَرْجُلِكُمْ
உங்கள் கால்கள்
أَوْ
அல்லது
يَلْبِسَكُمْ
கலந்து/உங்களை
شِيَعًا
(பல) பிரிவுகளாக
وَيُذِيقَ
இன்னும் சுவைக்க வைப்பதற்கும்
بَعْضَكُم
உங்களில் சிலருக்கு
بَأْسَ
ஆற்றலை
بَعْضٍۗ
சிலருடைய
ٱنظُرْ
கவனிப்பீராக
كَيْفَ
எவ்வாறு
نُصَرِّفُ
விவரிக்கிறோம்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
لَعَلَّهُمْ يَفْقَهُونَ
அவர்கள் விளங்குவதற்காக

Qul huwal Qaadiru 'alaaa ai yab'asa 'alaikum 'azaabam min fawqikum aw min tahti arjulikum aw yalbisakum shiya'anw wa yuzeeqa ba'dakum baasa ba'd; unzur kaifa nusarriful Aayaati la'allahum yafqahoon

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு (யாதொரு) வேதனை உண்டுபண்ணவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, உங்களுக்குள் சிலர் சிலருடன் போர் புரியும்படிச் (செய்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீங்கள் அனுபவிக்கும்படிச்) செய்யவும் அவன் சக்தி உடையவனாகவே இருக்கின்றான்." அவர்கள் விளங்கிக்கொள்வதற்காக நாம் (நம்முடைய) வசனங்களை எவ்வாறு பல வகைகளில் (தெளிவு படுத்திக்) கூறுகின்றோம் என்று நீங்கள் கவனியுங்கள்.

Tafseer

وَكَذَّبَ بِهِۦ
பொய்ப்பித்தனர்/இதை
قَوْمُكَ
உம் சமுதாயம்
وَهُوَ
இதுதான்
ٱلْحَقُّۚ
உண்மை
قُل
கூறுவீராக
لَّسْتُ
நானில்லை
عَلَيْكُم
உங்கள் மீது
بِوَكِيلٍ
பொறுப்பாளனாக

Wa kaz zaba bihee qawmuka wa huwal haqq; qul lastu'alaikum biwakeel

(நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாயிருந்தும், உங்களுடைய மக்கள் இதனையும் பொய்யாக்குகின்றனர். ஆகவே (அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நான் உங்களுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனல்ல."

Tafseer

لِّكُلِّ
ஒவ்வொரு
نَبَإٍ
செய்தி
مُّسْتَقَرٌّۚ
நிகழும் நேரமுண்டு
وَسَوْفَ تَعْلَمُونَ
அறியத்தான் போகிறீர்கள்

Likulli naba im mustaqar runw wa sawfa ta'lamoon

ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. (நான் சொல்வதன் உண்மையை) பின்னர் (வேதனை வரும்போது) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

Tafseer

وَإِذَا رَأَيْتَ
நீர் கண்டால்
ٱلَّذِينَ
எவர்களை
يَخُوضُونَ
மூழ்குகிறார்கள்
فِىٓ ءَايَٰتِنَا
நம் வசனங்களில்
فَأَعْرِضْ
புறக்கணிப்பீராக
عَنْهُمْ
அவர்களை
حَتَّىٰ
வரை
يَخُوضُوا۟
மூழ்குவார்கள்
فِى حَدِيثٍ
பேச்சில்
غَيْرِهِۦۚ
அது அல்லாத
وَإِمَّا يُنسِيَنَّكَ
மறக்கடித்தால்/உம்மை
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
فَلَا تَقْعُدْ
அமராதீர்
بَعْدَ
பின்னர்
ٱلذِّكْرَىٰ
நினைவு
مَعَ
உடன்
ٱلْقَوْمِ
கூட்டம்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Wa izaa ra aital lazeena yakhoodoona feee Aayaatinaa fa a'rid 'anhum hattaa yakkhoodoo fee hadeesin ghairih; wa immaa yunsiyannakash Shaitaanu falaa taq'ud ba'dazzikraa ma'al qawmiz zaalimeen

(நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்கிப் போவோர்களை நீங்கள் கண்டால், அவர்கள் அதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரையில் நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். (இக்கட்டளையை) ஷைத்தான் உங்களுக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீங்களும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் அமர்ந்திருக்க வேண்டாம்.

Tafseer

وَمَا
இல்லை
عَلَى
மீது
ٱلَّذِينَ
எவர்கள்
يَتَّقُونَ
அஞ்சுகிறார்கள்
مِنْ
இருந்து
حِسَابِهِم
அவர்களுடைய கணக்கு
مِّن شَىْءٍ
எதுவும்
وَلَٰكِن
எனினும்
ذِكْرَىٰ
உபதேசித்தல்
لَعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் தவிர்ந்து கொள்வதற்காக

Wa maa 'alal lazeena yattaqoona min hisaabihim min shai'inw wa laakin zikraa la'allahum yattaqoon

(வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து யாதொன்றும் இறை அச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் (இதனைத்) தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும்.

Tafseer

وَذَرِ
விடுவீராக
ٱلَّذِينَ
எவர்களை
ٱتَّخَذُوا۟
எடுத்துக் கொண்டனர்
دِينَهُمْ
தங்கள் மார்க்கத்தை
لَعِبًا
விளையாட்டாக
وَلَهْوًا
இன்னும் கேளிக்கையாக
وَغَرَّتْهُمُ
இன்னும் மயக்கியது/அவர்களை
ٱلْحَيَوٰةُ
வாழ்க்கை
ٱلدُّنْيَاۚ
உலகம்
وَذَكِّرْ
இன்னும் நினைவூட்டுவீராக
بِهِۦٓ
இதன் மூலம்
أَن تُبْسَلَ
ஆபத்திற்குள்ளாகும்
نَفْسٌۢ
ஓர் ஆன்மா
بِمَا
எதன் காரணமாக
كَسَبَتْ
செய்தது
لَيْسَ
இருக்க மாட்டார்
لَهَا
அதற்கு
مِن دُونِ
அல்லாஹ்வைத் தவிர
وَلِىٌّ
பாதுகாவலர்
وَلَا
இன்னும் இல்லை
شَفِيعٌ
பரிந்துரையாளர்
وَإِن تَعْدِلْ
அது ஈடுகொடுத்தால்
كُلَّ عَدْلٍ
எவ்வளவு ஈடு
لَّا يُؤْخَذْ
ஏற்கப்படாது
مِنْهَآۗ
அதனிடமிருந்து
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
أُبْسِلُوا۟
ஆபத்திற்குள்ளாக்கப் பட்டனர்
بِمَا كَسَبُوا۟ۖ
எதன் காரணமாக/செய்தனர்
لَهُمْ
இவர்களுக்கு
شَرَابٌ
குடிபானமும்
مِّنْ حَمِيمٍ
இருந்து/கொதி நீர்
وَعَذَابٌ
வேதனை
أَلِيمٌۢ
துன்புறுத்தக்கூடியது
بِمَا
எதன் காரணமாக
كَانُوا۟
இருந்தனர்
يَكْفُرُونَ
நிராகரிக்கிறார்கள்

Wa zaril lazeenat takhazoo deenahum la'ibanwwa lahwanw wa gharrat humul ha yaatud dunyaa; wa zakkir biheee an tubsala nafsum bimaa kasabat laisa lahaa min doonil laahi waliyyunw wa laa shafee'unw wa in ta'dil kulla 'adlil laa yu'khaz minhaa; ulaaa 'ikal lazeena ubsiloo bimaa kasaboo lahum sharaabum min hameeminw wa 'azaabun aleemum bimaa kaanoo yakkfuroon

(நபியே!) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக்கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டு விடுங்கள். எனினும், ஒவ்வொரு ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில்) ஆபத்திற்குள்ளாகும் என்ற உண்மையை நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள். (அந்நாளில்) அதற்குப் பரிந்து பேசுபவர்களோ, உதவி செய்பவர்களோ அல்லாஹ்வையன்றி ஒருவரும் இருக்க மாட்டார். (சாத்தியமான) அனைத்தையும் (பாவிகள் தங்கள் வேதனைக்குப்) பிரதியாகக் கொடுத்தபோதிலும் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள் தங்கள் (தீய) செயல்களின் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்களின் நிராகரிப்பின் காரணமாக மிக்க துன்புறுத்தும் வேதனையுடன் (குடிப்பதற்கு) கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும்.

Tafseer