Skip to main content

قُلْ
கூறுவீராக
إِنَّنِى
நிச்சயமாக நான்
هَدَىٰنِى
நேர்வழி காட்டினான் எனக்கு
رَبِّىٓ
என் இறைவன்
إِلَىٰ صِرَٰطٍ
பாதையின் பக்கம்
مُّسْتَقِيمٍ
நேரானது
دِينًا
மார்க்கமாகும்
قِيَمًا
நிலையான
مِّلَّةَ
கொள்கை
إِبْرَٰهِيمَ
இப்ராஹீமுடைய
حَنِيفًاۚ
உறுதியுடையவர்
وَمَا كَانَ
அவர் இருக்கவில்லை
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Qul innanee hadaanee Rabbeee ilaa Siraatim Mustaqeemin deenan qiyamam Millata Ibraaheema haneefaa; wa maa kaana minal mushrikeen

"நிச்சயமாக என்னுடைய இறைவன் எனக்கு நேரான பாதையை அறிவித்து விட்டான். (அது) மிக்க உறுதியான மார்க்கமாகும். அன்றி இப்ராஹீமுடைய நேரான மார்க்கமுமாகும். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவில்லை" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

قُلْ إِنَّ
கூறுவீராக/நிச்சயமாக
صَلَاتِى
என் தொழுகை
وَنُسُكِى
இன்னும் என் பலி
وَمَحْيَاىَ
இன்னும் என் வாழ்வு
وَمَمَاتِى
இன்னும் என் மரணம்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
رَبِّ
இறைவன்
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரின்

Qul inna Salaatee wa nusukee wa mahyaaya wa mamaatee lillaahi Rabbil 'aalameen

(அன்றி,) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை.

Tafseer

لَا
அறவே இல்லை
شَرِيكَ لَهُۥۖ
இணை/அவனுக்கு
وَبِذَٰلِكَ
இதைக்கொண்டே
أُمِرْتُ
ஏவப்பட்டுள்ளேன்
وَأَنَا۠
நான்
أَوَّلُ
முதலாமவன்
ٱلْمُسْلِمِينَ
அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில்

Laa shareeka lahoo wa bizaalika umirtu wa ana awwalul muslimeen

அவனுக்கு யாதொரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன்" (என்றும் கூறுங்கள்.)

Tafseer

قُلْ
கூறுவீராக
أَغَيْرَ
அல்லாதவனையா?
ٱللَّهِ
அல்லாஹ்
أَبْغِى
தேடுவேன்
رَبًّا
இறைவனாக
وَهُوَ
அவன் இருக்க
رَبُّ
இறைவன்
كُلِّ شَىْءٍۚ
எல்லாவற்றின்
وَلَا تَكْسِبُ
செய்வதில்லை
كُلُّ نَفْسٍ
ஒவ்வொரு ஆன்மா
إِلَّا
தவிர
عَلَيْهَاۚ
தனக்கெதிராக
وَلَا تَزِرُ
சுமக்காது
وَازِرَةٌ
பாவம் செய்யக்கூடிய ஆன்மா
وِزْرَ
பாவத்தை
أُخْرَىٰۚ
மற்றொன்றின்
ثُمَّ
பிறகு
إِلَىٰ
பக்கம்தான்
رَبِّكُم
உங்கள் இறைவன்
مَّرْجِعُكُمْ
உங்கள் மீட்சி
فَيُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
بِمَا
எதை
كُنتُمْ
இருந்தீர்கள்
فِيهِ
அதில்
تَخْتَلِفُونَ
முரண்படுகிறீர்கள்

Qul aghairal laahi abhee Rabbanw wa Huwa Rabbu kulli shai'; wa laa taksibu kullu nafsin illaa 'alaihaa; wa laa taziru waaziratunw wizra ukhraa; summa ilaa Rabbikum marji'ukum fa yunabbi'ukum bimaa kuntum feehi takhtalifoon

அன்றி "அல்லாஹ்வே அனைவரையும் படைத்து வளர்த்து வருகையில் அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான் எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது. (இறந்த) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு, எது சரி என்பதை அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்/எவன்
جَعَلَكُمْ
ஆக்கினான்/உங்களை
خَلَٰٓئِفَ
வழித்தோன்றல்களாக
ٱلْأَرْضِ
பூமியில்
وَرَفَعَ
இன்னும் உயர்த்தினான்
بَعْضَكُمْ
உங்களில் சிலரை
فَوْقَ بَعْضٍ
சிலருக்கு மேல்
دَرَجَٰتٍ
பதவிகளில்
لِّيَبْلُوَكُمْ
அவன் உங்களை சோதிப்பதற்காக
فِى مَآ
எவற்றில்/கொடுத்தான்/உங்களுக்கு
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
سَرِيعُ
தீவிரமானவன்
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌۢ
பெரும் கருணையாளன்

Wa Huwal lazee ja'alakum khalaaa'ifal ardi wa rafa'a ba'dakum fawqa ba'din darajaatil liyabluwakum fee maaa aataakum; inna Rabbaka saree'ul 'iqaab; wa innahoo la Ghafoorur Raheem

அவன்தான் உங்களை பூமியில் முன் சென்றவர்களின் இடத்தில் வைத்தான். அன்றி, உங்களில் சிலரை மற்றவர்களை விட அந்தஸ்தில் உயர்த்தியும் இருக்கின்றான். (இதன் மூலம்) உங்களுக்குக் கொடுத்தவற்றில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிக்கின்றான். நிச்சயமாக உங்கள் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். ஆயினும், நிச்சயமாக அவன் மிக்க பிழை பொறுப்பவனும் பேரன்புடைய வனாகவும் இருக்கின்றான்.

Tafseer