Skip to main content

وَهُوَ
அவன்
ٱلَّذِىٓ
எவன்
أَنشَأَ
உற்பத்தி செய்தான்
جَنَّٰتٍ
தோட்டங்களை
مَّعْرُوشَٰتٍ
கொடிகள் நிறைந்தவை
وَغَيْرَ مَعْرُوشَٰتٍ
கொடிகளற்றவை
وَٱلنَّخْلَ
இன்னும் பேரீத்த மரங்களை
وَٱلزَّرْعَ
இன்னும் விளைச்சலை
مُخْتَلِفًا
மாறுபட்டதாக
أُكُلُهُۥ
அதன் கனிகள்
وَٱلزَّيْتُونَ
இன்னும் ஒலிவத்தை
وَٱلرُّمَّانَ
இன்னும் மாதுளையை
مُتَشَٰبِهًا
ஒன்றுக்கொன்று ஒப்பானதாக
وَغَيْرَ مُتَشَٰبِهٍۚ
இன்னும் ஒன்றுக்கொன்று ஒப்பாகாததாக
كُلُوا۟
புசியுங்கள்
مِن ثَمَرِهِۦٓ
அதன்கனிகளிலிருந்து
إِذَآ أَثْمَرَ
அவை காய்த்தால்
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
حَقَّهُۥ
அதனுடைய கடமையை
يَوْمَ
நாளில்
حَصَادِهِۦۖ
அவற்றின் அறுவடை
وَلَا تُسْرِفُوٓا۟ۚ
விரயம் செய்யாதீர்கள்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلْمُسْرِفِينَ
விரயம் செய்பவர்களை

Wa Huwal lazee ansha-a jannaatim ma'rooshaatinw wa ghaira ma'rooshaatinw wan nakhla wazzar'a mukhtalifan ukuluhoo wazzaitoona warrum maana mutashaabihanw wa ghaira mutashaabih; kuloo min samariheee izaaa asmara wa aatoo haqqahoo yawma hasaadihee wa laa tusrifoo; innahoo laa yuhibbul musrifeen

(பந்தலில்) படர்ந்த கொடிகளும், படராத செடிகளும், (பலா) பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கக்கூடிய விதவிதமான (பயிர், பச்சைகளையும்) தானியங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோன்றக்கூடிய ஒலிவம், மாதுளை (மற்றும் பலவகை கனிவர்க்கங்கள்) ஆகியவைகளையும் அவனே படைத்திருக்கின்றான். ஆகவே, அவை பலனளித்தால் அவற்றை (தாராளமாகப்) புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும்போது (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தையும் கொடுத்துவிடுங்கள். அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

Tafseer

وَمِنَ ٱلْأَنْعَٰمِ
இன்னும் கால்நடைகளில்
حَمُولَةً
சுமக்கத் தகுதியானதை
وَفَرْشًاۚ
இன்னும் சுமக்கத் தகுதியற்றதை
كُلُوا۟
புசியுங்கள்
مِمَّا
எவற்றிலிருந்து
رَزَقَكُمُ
உணவளித்தான்/உங்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
وَلَا تَتَّبِعُوا۟
இன்னும் பின்பற்றாதீர்கள்
خُطُوَٰتِ
அடிச்சுவடுகளை
ٱلشَّيْطَٰنِۚ
ஷைத்தானின்
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَكُمْ
உங்களுக்கு
عَدُوٌّ
எதிரி
مُّبِينٌ
வெளிப்படையான

Wa minal an'aami hamoolatanw wa farshaa; kuloo mimmaa razaqakumul laahu wa laa tattabi'oo khutuwaatish Shaitaan; innahoo lakum 'aduwwum mubeen

(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பெரிய) கால்நடைகளில், சுமை சுமக்கக் கூடியவற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கின்றான். ஆகவே) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக் கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.

Tafseer

ثَمَٰنِيَةَ أَزْوَٰجٍۖ
எட்டு ஜோடிகளை
مِّنَ ٱلضَّأْنِ
செம்மறி ஆட்டில்
ٱثْنَيْنِ
இரண்டை
وَمِنَ ٱلْمَعْزِ
இன்னும் வெள்ளாட்டில்
ٱثْنَيْنِۗ
இரண்டை
قُلْ
கூறுவீராக
ءَآلذَّكَرَيْنِ
இரு ஆண்களையா?
حَرَّمَ
தடைசெய்தான்
أَمِ
அல்லது
ٱلْأُنثَيَيْنِ
இரு பெண்களையா
أَمَّا
அல்லது/எவை
ٱشْتَمَلَتْ
சுமந்தன
عَلَيْهِ
அவற்றை
أَرْحَامُ
கர்ப்பங்கள்
ٱلْأُنثَيَيْنِۖ
இரு பெண்கள்
نَبِّـُٔونِى
அறிவியுங்கள்/எனக்கு
بِعِلْمٍ
கல்வியுடன்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Samaaniyata azwaaj minad daanis naini wa minal ma'zis nain; qul 'aazzaka raini harrama amil unsaiyayni ammash tamalat 'alaihi arhaamul unsayaini nabbi 'oonee bi'ilmin in kuntum saadiqeen

(நபியே! அந்த மூடர்களை நோக்கி நீங்கள் கேளுங்கள்: "புசிக்கக் கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) எட்டு வகைகள் இருக்கின்றன. (அவையாவன:) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இருவகை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை (உண்டு.) இவ்விரு வகை ஆண்களையோ அல்லது பெண்களையோ அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கின்றான்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் ஆதாரத்துடன் இதனை நீங்கள் எனக்கு அறிவியுங்கள்.

Tafseer

وَمِنَ ٱلْإِبِلِ
இன்னும் ஒட்டகையிலும்
ٱثْنَيْنِ
இரண்டை
وَمِنَ ٱلْبَقَرِ
இன்னும் மாட்டிலும்
ٱثْنَيْنِۗ
இரண்டை
قُلْ
கூறுவீராக
ءَآلذَّكَرَيْنِ
இரு ஆண்களையா?
حَرَّمَ
தடை செய்தான்
أَمِ
அல்லது
ٱلْأُنثَيَيْنِ
இரு பெண்களையா
أَمَّا
அல்லது/எவை
ٱشْتَمَلَتْ
சுமந்தன
عَلَيْهِ
அவற்றை
أَرْحَامُ
கர்ப்பங்கள்
ٱلْأُنثَيَيْنِۖ
இரு பெண்களின்
أَمْ كُنتُمْ
இருந்தீர்களா?
شُهَدَآءَ
சாட்சிகளாக
إِذْ وَصَّىٰكُمُ
போது/கட்டளையிட்டான்/உங்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
بِهَٰذَاۚ فَمَنْ
இதை/யார்
أَظْلَمُ
மிகப் பெரிய அநியாயக்காரன்
مِمَّنِ
எவனைவிட
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
عَلَى
மீது
ٱللَّهِ
அல்லாஹ்
كَذِبًا
பொய்யை
لِّيُضِلَّ
வழி கெடுப்பதற்காக
ٱلنَّاسَ
மக்களை
بِغَيْرِ عِلْمٍۗ
கல்வி இன்றி
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Wa minal ibilis naini wa minal baqaris nain; qul 'aaazzakaraini harrama amil unsayaini ammash tamalat 'alaihi arhaamul unsayaini am kuntum shuhadaaa'a iz wassaakumul laahu bihaazaa; faman azlamu mimmanif taraa 'alal laahi kazibal liyuddillan naasa bighari 'ilm; innal laaha laa yahdil qawmaz zaalimeen

ஒட்டகையிலும் (ஆண், பெண்) இரு வகை, பசுவிலும் இரு வகை (உண்டு. இவ்விருவகைகளிலுள்ள) ஆண்களையா? (அல்லது இவ்விரு வகைகளிலுள்ள) பெண்களையா? அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கின்றான்? இவ்வாறு (தடுத்து) அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகின்றீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்டபோது நீங்களும் முன்னால் இருந்தீர்களா?" (என்றும் நபியே! நீங்கள் அவர்களைக் கேளுங்கள்.) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறி, யாதொரு ஆதாரமின்றியே (அறிவில்லாத) மக்களை வழி கெடுப்பவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.

Tafseer

قُل
கூறுவீராக
لَّآ أَجِدُ
நான் காணவில்லை
فِى مَآ
எதில்/வஹீ அறிவிக்கப்பட்டது
إِلَىَّ
என் பக்கம்
مُحَرَّمًا
தடுக்கப்பட்டதாக
عَلَىٰ طَاعِمٍ
புசிப்பவர் மீது
يَطْعَمُهُۥٓ
அதை புசிப்பார்
إِلَّآ
தவிர
أَن يَكُونَ
இருப்பது
مَيْتَةً
செத்ததாக
أَوْ
அல்லது
دَمًا
இரத்தமாக
مَّسْفُوحًا
ஓடக்கூடியது
أَوْ
அல்லது
لَحْمَ
மாமிசமாக
خِنزِيرٍ
பன்றியின்
فَإِنَّهُۥ
ஏனெனில் நிச்சயமாக அது
رِجْسٌ
அசுத்தம்
أَوْ فِسْقًا
அல்லது/பாவமாக
أُهِلَّ
பெயர் கூறப்பட்டது
لِغَيْرِ
அல்லாதவருக்கு
ٱللَّهِ
அல்லாஹ்
بِهِۦۚ
அதைக் கொண்டு
فَمَنِ
எவர்
ٱضْطُرَّ
நிர்ப்பந்திக்கப்பட்டார்
غَيْرَ بَاغٍ
நாடாதவராக
وَلَا عَادٍ
வரம்பு மீறாதவராக
فَإِنَّ رَبَّكَ
நிச்சயமாக உம் இறைவன்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Qul laaa ajidu fee maaa oohiya ilaiya muharraman 'alaa taa'iminy yat'amuhooo illaaa ai yakoona maitatan aw damam masfoohan aw lahma khinzeerin fa innahoo rijsun aw fisqan uhilla lighairil laahi bih; famanid turra ghaira baa ghinw wa laa 'aadin fa inna Rabbaka Ghafoorur Raheem

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹீல் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.)" தவிர வரம்பு மீறி பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (இவைகளை புசித்து) விட்டால் (அது அவர்கள் மீது குற்றமாகாது.) நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَعَلَى
மீது
ٱلَّذِينَ هَادُوا۟
யூதர்கள்
حَرَّمْنَا
தடை செய்தோம்
كُلَّ
எல்லாவற்றையும்
ذِى ظُفُرٍۖ
நகமுடையது
وَمِنَ ٱلْبَقَرِ
இன்னும் மாட்டில்
وَٱلْغَنَمِ
இன்னும் ஆட்டில்
حَرَّمْنَا
தடைசெய்தோம்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
شُحُومَهُمَآ
இரண்டின் கொழுப்புகளை
إِلَّا
தவிர
مَا حَمَلَتْ
எதை/சுமந்தன
ظُهُورُهُمَآ
அவை இரண்டின் முதுகுகள்
أَوِ
அல்லது
ٱلْحَوَايَآ
சிறு குடல்கள்
أَوْ
அல்லது
مَا
எது
ٱخْتَلَطَ
கலந்துவிட்டது
بِعَظْمٍۚ
எலும்புடன்
ذَٰلِكَ
அது
جَزَيْنَٰهُم
கூலி கொடுத்தோம்/அவர்களுக்கு
بِبَغْيِهِمْۖ
அவர்களுடைய அழிச்சாட்டியத்தினால்
وَإِنَّا
நிச்சயமாக நாம்
لَصَٰدِقُونَ
உண்மையாளர்களே

Wa 'alal lazeena haadoo harramnaa kulla zee zufurinw wa minal baqari walghanami harramnaa 'alihim shuh oomahumaaa illaa maa hamalat zuhooruhumaaa awil hawaayaaa aw makhtalata bi'azm zaalika jazainaahum bibaghyihim wa innaa lasaa diqoon

(நபியே!) நகத்தையுடைய பிராணிகள் (பிளவில்லாத குளம்புகளை உடைய ஒட்டகை, தீப்பறவை, வாத்து போன்ற) அனைத்தையும் (புசிக்கக் கூடாது என்று) யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம். அன்றி, ஆடு, மாடு ஆகியவற்றிலும், அவற்றின் முதுகிலோ அல்லது வயிற்றிலோ அல்லது எலும்புடன் கலந்தோ உள்ளவைகளைத் தவிர (மற்ற பாகங்களில் உள்ள) கொழுப்புக் களையும் நாம் அவர்களுக்கு விலக்கியே இருந்தோம். அவர்கள் (நமக்கு) மாறு செய்ததற்குத் தண்டனையாக இவ்வாறு (தடுத்துத்) தண்டித்து இருந்தோம். நிச்சயமாக நாம்தான் உண்மை கூறுகின்றோம். (இதற்கு மாறாகக் கூறும் யூதர்கள் பொய்யர்களே!)

Tafseer

فَإِن كَذَّبُوكَ
அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
فَقُل
கூறுவீராக
رَّبُّكُمْ
உங்கள் இறைவன்
ذُو رَحْمَةٍ
கருணையுடையவன்
وَٰسِعَةٍ
விசாலமானது
وَلَا يُرَدُّ
திருப்பப்படாது
بَأْسُهُۥ
அவனது தண்டனை
عَنِ ٱلْقَوْمِ
மக்களை விட்டு
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகள்

Fa in kazzabooka faqur Rabbukum zoo rahmatinw waasi'atinw waasi'atinw wa laa yuraddu baasuhoo 'anil qawmil mujrimeen

(நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உங்களைப் பொய்யரெனக் கூறினால் (அவர்களை நோக்கி) "உங்களுடைய இறைவன் மிக விரிவான அன்புடையவன்தான். எனினும் அவனது தண்டனை, குற்றவாளிகளை விட்டும் ஒருக்காலும் அகற்றப்பட மாட்டாது" என்று கூறிவிடுங்கள்.

Tafseer

سَيَقُولُ
கூறுகிறார்(கள்)
ٱلَّذِينَ أَشْرَكُوا۟
இணைவைப்பவர்கள்
لَوْ شَآءَ
நாடியிருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
مَآ أَشْرَكْنَا
இணைவைத்திருக்க மாட்டோம்
وَلَآ ءَابَآؤُنَا
இன்னும் எங்கள் மூதாதைகள்
وَلَا حَرَّمْنَا
இன்னும் தடை செய்திருக்க மாட்டோம்
مِن شَىْءٍۚ
எதையும்
كَذَٰلِكَ
இவ்வாறே
كَذَّبَ
பொய்ப்பித்தார்(கள்)
ٱلَّذِينَ
எவர்கள்
مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னர்
حَتَّىٰ
இறுதியாக
ذَاقُوا۟
சுவைத்தனர்
بَأْسَنَاۗ
நம் தண்டனையை
قُلْ
கூறுவீராக
هَلْ عِندَكُم
உங்களிடம் உண்டா?
مِّنْ عِلْمٍ
கல்வியில் ஏதும்
فَتُخْرِجُوهُ
வெளிப்படுத்துங்கள் அதை
لَنَآۖ
நமக்கு
إِن تَتَّبِعُونَ
நீங்கள் பின்பற்றுவதில்லை
إِلَّا
தவிர
ٱلظَّنَّ
சந்தேகம்
وَإِنْ أَنتُمْ
இல்லை/நீங்கள்
إِلَّا
தவிர
تَخْرُصُونَ
கற்பனை செய்கிறீர்கள்

Sayaqoolul lazeena ashrakoo law shaaa'al laahu maaa ashraknaa wa laaa aabaa'unaa wa laa harramnaa min shai'; kazaalika kazzabal lazeena min qablihim hattaa zaaqoo baasanaa; qul hal 'indakum min 'ilmin fatukh rijoohu lanaa in tattabi'oona illaz zanna wa in antum illaa takhhrusoon

"அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்களுடைய மூதாதைகளும், (அல்லாஹ்வுக்கு யாதொன்றையும்) இணை வைத்திருக்க மாட்டோம்; (புசிக்கக் கூடிய) யாதொன்றையும் (ஆகாதென) நாங்கள் தடுத்திருக்க மாட்டோம்" என்று இணை வைத்து வணங்கும் இவர்கள் கூறக்கூடும். (நபியே! இவர்கள் பரிகசிக்கும்) இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம்முடைய வேதனையைச் சுவைக்கும் வரையில் (நபிமார்களைப்) பொய்யாக்கியே வந்தனர். ஆகவே (நீங்கள் அவர்களை நோக்கி "இதற்கு) உங்களிடம் ஏதும் ஆதாரமுண்டா? (இருந்தால்) அதனை நம்மிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் சுயமாகவே கற்பனை செய்து கொண்ட (உங்களுடைய) வீண் எண்ணத்தில் மூழ்கிக் கிடப்பவர் களேயன்றி வேறில்லை" என்று கூறுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
فَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
ٱلْحُجَّةُ
ஆதாரம்
ٱلْبَٰلِغَةُۖ
முழுமையானது
فَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
لَهَدَىٰكُمْ
நேர்வழி படுத்தியிருப்பான்/உங்கள்
أَجْمَعِينَ
அனைவரையும்

Qul falillaahil hujjatul baalighatu falaw shaaa'a lahadaakum ajma'een

(அன்றி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(மறுக்க முடியாத) முழுமையான ஆதாரம் அல்லாஹ்வுடையதே! (அவர்களுடைய ஆதாரம் முற்றிலும் தவறானது.) அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்தியிருப்பான்."

Tafseer

قُلْ
கூறுவீராக
هَلُمَّ
அழைத்து வாருங்கள்
شُهَدَآءَكُمُ
உங்கள் சாட்சிகளை
ٱلَّذِينَ
எவர்கள்
يَشْهَدُونَ
சாட்சியளிப்பார்கள்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
حَرَّمَ
தடைசெய்தான்
هَٰذَاۖ
இதை
فَإِن شَهِدُوا۟
அவர்கள் சாட்சிஅளித்தால்
فَلَا تَشْهَدْ
சாட்சியளிக்காதீர்
مَعَهُمْۚ
அவர்களுடன்
وَلَا تَتَّبِعْ
இன்னும் பின்பற்றாதீர்
أَهْوَآءَ
ஆசைகளை
ٱلَّذِينَ
எவர்களின்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِٱلْءَاخِرَةِ
இறுதிநாளை
وَهُم
இன்னும் அவர்கள்
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
يَعْدِلُونَ
இணைவைக்கின்றனர்

Qul halumma shuhadaaa'akumul lazeena yash hadoona annal laaha harrama haazaa fa in shahidoo falaa tashhad ma'ahum; wa laa tattabi' ahwaaa'al lazeena kazzaboo bi Aayaatinaa wallazeena laa yu'minoona bil Aakhirati wa hum bi Rabbihim ya'diloon

(மேலும் அவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ் இதனைத் தடுத்தே இருந்தான் என்று நீங்கள் உறுதிப்படுத்துவதற்காக உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்" என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு அவர்களை அழைத்து வந்து) அவர்களும் (அவ்வாறே பொய்) சாட்சி கூறியபோதிலும் (அதற்காக) நீங்களும் அவர்களுடன் சேர்ந்து (அவ்வாறு) கூறவேண்டாம். அன்றி, நம்முடைய வசனங்கள் பொய்யெனக் கூறியவர்களின் விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். எவர்கள் இறுதிநாளை நம்பிக்கை கொள்ள வில்லையோ அவர்கள்தான் தங்கள் இறைவனுக்கு (பலவற்றை) இணையாக்குகின்றனர்.

Tafseer