يَوْمَ تَرَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ يَسْعٰى نُوْرُهُمْ بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ بُشْرٰىكُمُ الْيَوْمَ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُۚ ( الحديد: ١٢ )
Yawma taral mu'mineena walmu'minaati yas'aa nooruhum baina aydeehim wa biaymaanihim bushraakumul yawma jannaatun tajree min tahtihal anhaaru khaalideena feeha; zaalika huwal fawzul 'azeem (al-Ḥadīd 57:12)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நம்பிக்கை கொண்ட இத்தகைய ஆண்களையும் பெண்களையும் நீங்கள் காணும் அந்நாளில், அவர்களுடைய ஒளியின் பிரகாசம் அவர்களுக்கு முன்னும், வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, அவர்களை நோக்கி மலக்குகள்:) "இன்றைய தினம் உங்களுக்கு நற்செய்தி (என்றும்) தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியில் நுழைந்து விடுவீர்கள். என்றென்றும் அதில் தங்கியும் விடுவீர்கள்" என்றும் கூறுவார்கள். இதுதான் மகத்தான ஒரு வெற்றியாகும்.
English Sahih:
On the Day you see the believing men and believing women, their light proceeding before them and on their right, [it will be said], "Your good tidings today are [of] gardens beneath which rivers flow, wherein you will abide eternally." That is what is the great attainment. ([57] Al-Hadid : 12)
1 Jan Trust Foundation
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி|) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்).