Wa as haabush shimaali maaa as haabush shimaal
இடப்பக்கத்தில் உள்ளவர்களோ, இவர்களின் துர்ப்பாக்கியம் தான் என்னே!
Fee samoominw wa hameem
(அவர்கள்) கொடிய வெப்பத்திலும், முற்றிலும் கொதிக்கும் நீரிலும்,
Wa zillim miny yahmoom
அடர்ந்த இருண்ட புகையின் மத்தியிலும் இருப்பார்கள்.
Laa baaridinw wa laa kareem
(அங்குக்) குளிர்ச்சியான பானமும் இருக்காது; சங்கையான எதுவும் இருக்காது.
Innaahum kaanoo qabla zaalika mutrafeen
இதற்கு முன்னர் இவர்கள், நிச்சயமாக பெரும் சுகபோகங்களில் இருந்தனர்.
Wa kaanoo yusirroona 'alal hinsil 'azeem
எனினும், பெரும் பாவங்களைச் செய்வதில் உறுதியாக இருந்தனர்.
Wa kaanoo yaqooloona a'izaa mitnaa wa kunnaa turaabanw wa izaaman'ainnaa lamab'oosoon
அன்றி, என்னே! நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்பாகவும் போனதன் பின்னர், மெய்யாகவே நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா?
Awa aabaaa'unal awwaloon
(அவ்வாறே) முன் சென்றுபோன நம்முடைய மூதாதையர்களுமா (எழுப்பப்படுவார்கள்)? என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தனர்.
Qul innal awwaleena wal aakhireen
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக உங்களில் முன்னுள்ளோரும் சரி, பின்னுள்ளோரும் சரி;
Lamajmoo'oona ilaa meeqaati yawmim ma'loon
நீங்கள் யாவருமே குறிப்பிட்ட ஒரு நாளில் தவறாமல் (உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.