Feehaa faakihatunw wan nakhlu zaatul akmaam
(அன்றி,) அதில் (பலவகை) கனிவர்க்கங்களும் (குலைகள் நிறைந்த) பாளைகளையுடைய பேரீச்சை மரங்களும் உற்பத்தி யாகின்றன.
Walhabbu zul 'asfi war Raihaanu
உமியால் மூடப்பட்ட தானியங்களும், வாசனைப்புற் பூண்டுகளும் உண்டாகின்றன.
Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan
ஆகவே, (மனித, ஜின்களாகிய) நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Khalaqal insaana min salsaalin kalfakhkhaari
சுட்ட பாத்திரத்தைப் போல் தட்டினால் "கன் கன்" என்று) சப்தமிடும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான்.
Wa khalaqal jaaan mim maarijim min naar
நெருப்பின் கொழுந்தினால் அவன் ஜின்னைப் படைத்தான்.
Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Rabbul mashriqayni wa Rabbul maghribayni
(சூரியன், சந்திரன் இரண்டும்) உதிக்கும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன். மேலும், (அவைகள்) மறையும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன்.
Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan
ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Marajal bahrayni yalta qiyaani
இரு கடல்களையும் அவனே சந்திக்கச் செய்தான்.
Bainahumaa barzakhul laa yabghiyaan
ஆயினும், அவைகளுக்கிடையில் ஒரு தடுப்புண்டு. (அத்தடுப்பை) அவ்விரண்டும் மீறாது.