Skip to main content

وَلَقَدْ جَآءَ
திட்டவட்டமாக/வந்தன
ءَالَ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு
ٱلنُّذُرُ
எச்சரிக்கை

Wa laqad jaaa'a Aala Fir'awnan nuzur

நிச்சயமாக, ஃபிர்அவ்னுடைய மக்களிடம் பல எச்சரிக்கைகள் வந்தன.

Tafseer

كَذَّبُوا۟
அவர்கள் பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளை
كُلِّهَا فَأَخَذْنَٰهُمْ
எல்லாம்/ஆகவே அவர்களை தண்டித்தோம்
أَخْذَ
தண்டனையால்
عَزِيزٍ
மிக்க மிகைத்தவன்
مُّقْتَدِرٍ
மகா வல்லமை உடையவனின்

Kazzaboo bi Aayaatinaa kullihaa fa akhaznaahum akhza 'azeezim muqtadir

நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கிக் கொண்டே வந்தார்கள். ஆகவே, மிக்க சக்திவாய்ந்த பலசாலி பிடிப்பதைப் போல் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.

Tafseer

أَكُفَّارُكُمْ خَيْرٌ
உங்களுடைய நிராகரிப்பாளர்கள் சிறந்தவர்களா?
مِّنْ أُو۟لَٰٓئِكُمْ
அவர்களை விட
أَمْ لَكُم
அவர்கள் உங்களுக்கு இருக்கிறதா?
بَرَآءَةٌ
விடுதலை பத்திரம்
فِى ٱلزُّبُرِ
வேதங்களில்

Akuffaarukum khairum min ulaaa'ikum am lakum baraaa'atun fiz Zubur

(மக்காவாசிகளே!) உங்களிலுள்ள நிராகரிப்பவர்கள் (அழிந்து போன) இவர்களைவிட மேலானவர்களா? அல்லது, (உங்களைத் தண்டிக்கப்படாது என்பதற்காக) உங்களுக்கு (ஏதேனும்) விடுதலைச் சீட்டு உண்டா?

Tafseer

أَمْ يَقُولُونَ
அல்லது கூறுகிறார்களா?
نَحْنُ
நாங்கள் ஆவோம்
جَمِيعٌ
கூட்டம்
مُّنتَصِرٌ
பழிதீர்த்துக் கொள்கின்ற

Am yaqooloona nahnu jamee'um muntasir

அல்லது, (நபியே!) நாங்கள் பெருங்கூட்டத்தினர் என்றும், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளக் கூடியவர்கள். (எங்களுக்கு யாதொரு பயமுமில்லை;) என்றும் இவர்கள் கூறுகின்றனரா?

Tafseer

سَيُهْزَمُ
விரைவில் தோற்கடிக் கப்படுவார்கள்
ٱلْجَمْعُ
இந்த கூட்டங்கள்
وَيُوَلُّونَ
இன்னும் காட்டுவார்கள்
ٱلدُّبُرَ
புறமுதுகு

Sa yuhzamul jam'u wa yuwalloonad dubur

அதிசீக்கிரத்தில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள்.

Tafseer

بَلِ
மாறாக
ٱلسَّاعَةُ
மறுமைதான்
مَوْعِدُهُمْ
வாக்களிக்கப்பட்ட நேரமாகும் இவர்களின்
وَٱلسَّاعَةُ
மறுமை
أَدْهَىٰ
மிக பயங்கரமானதும்
وَأَمَرُّ
மிக கசப்பானதாகும்

Balis Saa'atu maw'iduhum was Saa'atu adhaa wa amarr

அன்றி, மறுமை நாள்தான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தவணை. அந்த மறுமை நாள் மிக்க திடுக்கமானதாகவும், மிக்க கசப்பாகவும் இருக்கும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகள்
فِى ضَلَٰلٍ
வழிகேட்டிலும்
وَسُعُرٍ
மிகப் பெரிய சிரமத்திலும்

Innal mujrimeena fee dalaalinw wa su'ur

நிச்சயமாகக் குற்றவாளிகள் (இம்மையில்) வழிகேட்டிலும் (மறுமையில்) நரகத்திலும்தான் இருப்பார்கள்.

Tafseer

يَوْمَ
நாளில்
يُسْحَبُونَ
இழுக்கப்படுவார்கள்
فِى ٱلنَّارِ
நரகத்தில்
عَلَىٰ وُجُوهِهِمْ
அவர்களின் முகங்கள் மீது
ذُوقُوا۟
சுவையுங்கள்!
مَسَّ
கடுமையை
سَقَرَ
சகர் நரகத்தின்

Yawma yushaboona fin Naari'alaa wujoohimim zooqoo massa saqar

இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி "(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்" என்று கூறப்படும்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
خَلَقْنَٰهُ
அவற்றைப் படைத்தோம்
بِقَدَرٍ
ஓர் அளவில்

Innaa kulla shai'in khalaqnaahu biqadar

நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான திட்டப்படியே படைத்திருக்கின்றோம்.

Tafseer

وَمَآ أَمْرُنَآ
நமது கட்டளை இல்லை
إِلَّا وَٰحِدَةٌ
ஒன்றைத் தவிர
كَلَمْحٍۭ
சிமிட்டுவதைப் போல்
بِٱلْبَصَرِ
கண்

Wa maaa amrunaaa illaa waahidatun kalamhim bilbasar

(யாதொரு பொருளையும் நாம் படைக்க நாடினால்) நம்முடைய கட்டளை(யெல்லாம்) கண் சிமிட்டுவதைப் போன்ற ஒன்றுதான்.

Tafseer