'Fakaifa kaana 'azaabee wa nuzur
நம்முடைய வேதனையும், அச்சமூட்டுதலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)?
Wa laqad yassamal Quraana liz zikri fahal mim muddakir
(மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?
Kazzabat Samoodu binnuzur
(இவ்வாறே) ஸமூது என்னும் மக்களும், தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை (செய்த ஸாலிஹ் நபி)யைப் பொய்யாக்கினர்.
Faqaalooo a-basharam minnaa waahidan nattabi'uhooo innaa izal lafee dalaalinw wa su'ur
(பொய்யாக்கியதுடன்) "நம்மிலுள்ள ஒரு மனிதனையா நாம் பின்பற்றுவது? பின்பற்றினால், நிச்சயமாக நாம் வழிகேட்டில் சென்று கஷ்டத்திற்குள்ளாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
'A-ulqiyaz zikru 'alaihi mim baininaa bal huwa kazzaabun ashir
அன்றி "நமக்குள் (நம்மையன்றி) இவர் மீதுதானா வேதம் இறக்கப்பட்டது? அன்று! இவர் பெரும் பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர்" என்றனர்.
Sa-ya'lamoona ghadam manil kazzaabul ashir
பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர் யாரென்பதை, வெகுவிரைவில் நாளைய தினமே அறிந்துகொள்வார்கள்.
Innaa mursilun naaqati fitnatal lahum fartaqibhum wastabir
(ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக, மெய்யாகவே ஒரு பெண் ஒட்டகத்தை நாம் அனுப்பி வைப்போம். ஆகவே, (ஸாலிஹ் நபியே!) நீங்கள் பொறுமையாயிருந்து அவர்களைக் கவனித்து வாருங்கள்.
Wa nabbi'hum annal maaa'a qismatum bainahum kullu shirbim muhtadar
(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம் என்றும், அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள் (என்றும் நாம் கூறினோம்).
Fanaadaw saahibahum fata'aataa fa'aqar
எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்களுடைய நண்பனை அழைத்தனர். அவன் அதனை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்துவிட்டான்.
Fakaifa kaana 'azaabee wa nuzur
ஆகவே, நம்முடைய வேதனையும், நம்முடைய எச்சரிக்கையும் எவ்வாறாயிற்று (என்பதை இவர்கள் கவனிப் பார்களா)?