Skip to main content

قُلْ
கூறுவீராக!
تَرَبَّصُوا۟
நீங்கள் எதிர்பாருங்கள்
فَإِنِّى
நிச்சயமாக நானும்
مَعَكُم
உங்களுடன்
مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ
எதிர்பார்ப்பவர்களில்

Qul tarabbasoo fa innee ma'akum minal mutarabbiseen

ஆகவே (அவர்களை நோக்கி, அதனை) "நீங்களும் எதிர் பார்த்திருங்கள். (என்ன நடக்கிறது என்பதை) நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்" என்று கூறுங்கள்.

Tafseer

أَمْ تَأْمُرُهُمْ
அவர்களை ஏவுகின்றதா?
أَحْلَٰمُهُم
அவர்களது அறிவுகள்
بِهَٰذَآۚ
இதற்கு
أَمْ هُمْ
அல்லது அவர்கள்
قَوْمٌ
மக்களா?
طَاغُونَ
வரம்பு மீறுகின்ற(வர்கள்)

Am taamuruhum ahlaamuhum bihaazaaa am hum qawmun taaghoon

(நபியே! உங்களை குறிகாரர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறும்படி) அவர்களுடைய அறிவுதான் அவர்களைத் தூண்டுகின்றதா? அல்லது (இயற்கையாகவே) அவர்கள் விஷமிகள்தானா?

Tafseer

أَمْ يَقُولُونَ
அல்லது கூறுகிறார்களா?
تَقَوَّلَهُۥۚ
இதை புனைந்து கூறுகிறார்
بَل لَّا
மாறாக/நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

Am yaqooloona taqawwalah; bal laa yu'minoon

அல்லது (நமது நபியாகிய) இவர் பொய்யாகவே அதனைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? அன்று! (மனமுரண்டாகவே) இதனை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.

Tafseer

فَلْيَأْتُوا۟ بِحَدِيثٍ
இது போன்ற ஒரு பேச்சை அவர்கள் கொண்டு வரட்டும்!
إِن كَانُوا۟
இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்

Falyaatoo bihadeesim misliheee in kaanoo saadiqeen

(நபியே! இதனை நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர் களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்துகொண்டு) இதைப் போன்ற யாதொரு வாக்கியத்தைக் கொண்டு வரவும்.

Tafseer

أَمْ خُلِقُوا۟
இவர்கள் படைக்கப்பட்டார்களா?
مِنْ غَيْرِ
ஏதும் இன்றி
أَمْ
அல்லது
هُمُ
இவர்கள்தான்
ٱلْخَٰلِقُونَ
படைத்தவர்களா?

Am khuliqoo min ghairi shai'in am humul khaaliqoon

அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா?

Tafseer

أَمْ خَلَقُوا۟
இவர்கள்தான் படைத்தார்களா?
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
وَٱلْأَرْضَۚ
பூமியையும்
بَل
மாறாக
لَّا يُوقِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Am khalaqus samaawaati wal ard; bal laa yooqinoon

அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? அன்று. (இவைகளை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை.

Tafseer

أَمْ عِندَهُمْ
இவர்களிடம் இருக்கின்றனவா?
خَزَآئِنُ
பொக்கிஷங்கள்
رَبِّكَ
உமது இறைவனின்
أَمْ هُمُ
அல்லது அவர்கள் அடக்கிவிடக் கூடியவர்களா?

Am'indahum khazaaa'inu rabbika am humul musaitiroon

அல்லது இவர்களிடமே உங்களது இறைவனின் பொக்கிஷங்கள் அனைத்தும் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் அதனைப் பங்கிடக்கூடிய அதிகாரிகளா?

Tafseer

أَمْ لَهُمْ
?/அவர்களுக்கு
سُلَّمٌ
ஓர் ஏணி
يَسْتَمِعُونَ
செவியுறுகின்றனரா
فِيهِۖ
அதில்
فَلْيَأْتِ
வரட்டும்
مُسْتَمِعُهُم
அவர்களில் செவியுற்றவர்
بِسُلْطَٰنٍ مُّبِينٍ
தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு

Am lahum sullamuny yastami'oona feehi falyaati mustami'uhum bisultaanim mubeen

அல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து (அங்குச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவைகளை) இவர்கள் கேட்டு வந்ததற்குத் தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு வரவும்.

Tafseer

أَمْ لَهُ
?/அவனுக்கு
ٱلْبَنَٰتُ
பெண் பிள்ளைகளும்
وَلَكُمُ
உங்களுக்கு
ٱلْبَنُونَ
ஆண் பிள்ளைகளும்

Am lahul banaatu wa lakumul banoon

அல்லது (நீங்கள் கூறுகின்றபடி) அல்லாஹ்வுக்குப் பெண் சந்ததிகள்; உங்களுக்கு மட்டும் ஆண் சந்ததிகளா?

Tafseer

أَمْ تَسْـَٔلُهُمْ
அவர்களிடம் நீர் கேட்கின்றீரா?
أَجْرًا
கூலி எதையும்
فَهُم
அவர்கள்
مِّن مَّغْرَمٍ
கடன் தொகையினால்
مُّثْقَلُونَ
சுமைக்குள்ளாகி விட்டார்களா?

Am tas'aluhum ajran fahum mim maghramim musqaloon

அல்லது நீங்கள் ஏதும் அவர்களிடம் கூலி கேட்டு அந்தப் பளுவை இவர்கள் சுமக்க முடியாமல் இருக்கின்றனரா?

Tafseer