Wa fee 'Aadin iz arsalnaa 'alaihimur reehal'aqeem
"ஆது" என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு.) அவர்கள் மீது நாம் நாசகரமானதொரு காற்றை அனுப்பிய சமயத்தில்,
Maa tazaru min shai'in atat 'alaihi illaa ja'alat hu karrameem
அது பட்டதையெல்லாம் தூசியா(க்கிப் பறக்கடி)க்காமல் விடவில்லை.
Wa fee Samooda iz qeela lahum tamatta''oo hattaa heen
"ஸமூது" என்னும் மக்களிலும் (ஒரு படிப்பினையுண்டு.) "நீங்கள் ஒரு காலம் வரையில் சுகமாக வாழ்ந்திருங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு,
Fa'ataw 'an amri Rabbihim fa akhazal humus saa'iqatu wa hum yanzuroon
அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
Famas tataa'oo min qiyaaminw wa maa kaanoo muntasireen
ஆகவே, அவர்கள் நிற்கவும் முடியவில்லை. (உட்காரவும் முடியவில்லை;) நம்மிடம் பழிவாங்கவும் முடியவில்லை. (இருந்த வாறே அழிந்துவிட்டனர்.)
Wa qawma Noohim min qablu innahum kaano qawman faasiqeen
இதற்கு முன்னர் (இருந்த) நூஹுடைய மக்களையும் (அழித்து விட்டோம்.) நிச்சயமாக அவர்களும் பாவம் செய்யும் மக்களாகவே இருந்தனர்.
Wassamaaa'a banainaa haa bi aydinw wa innaa lamoosi'oon
(எவருடைய உதவியுமின்றி) நம்முடைய சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதனை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசால மாக்கியும் வைத்திருக்கின்றோம்.
Wal arda farashnaahaa fani'mal maahidoon
பூமியை நாம் (விசாலமாக) விரித்தோம். விரிப்பவர் களிலெல்லாம் மிக்க மேலான விதத்தில் விரிப்பவர் நாமே.
Wa min kulli shai'in khalaqnaa zawjaini la'allakum tazakkaroon
ஒவ்வொரு வஸ்துக்களையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கின்றோம். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக!
Fafirrooo ilal laahi innee lakum minhu nazeerum mubeen
ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.