Skip to main content

وَفِىٓ أَنفُسِكُمْۚ
இன்னும் உங்களிலும்
أَفَلَا تُبْصِرُونَ
நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?

Wa feee anfusikum; afalaa tubsiroon

உங்களுக்கு உள்ளாகவும் (பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவைகளை) நீங்கள் ஆழ்ந்து கவனித்துப் பார்க்க வேண்டாமா?

Tafseer

وَفِى ٱلسَّمَآءِ
இன்னும் வானத்தில்
رِزْقُكُمْ
உங்கள் உணவும்
وَمَا تُوعَدُونَ
நீங்கள் வாக்களிக்கப்படுவதும்

Wa fissamaaa'i rizqukum wa maa too'adoon

உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட உங்களுடைய உணவு போன்றவை வானத்தில் இருக்கின்றன.

Tafseer

فَوَرَبِّ
அதிபதியின் மீது சத்தியமாக
ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ
வானம், பூமியுடைய
إِنَّهُۥ
நிச்சயமாக இது
لَحَقٌّ
உண்மைதான்
مِّثْلَ
போன்றே
مَآ أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள் பேசுவது

Fawa Rabbis samaaa'i wal ardi innahoo lahaqqum misla maa annakum tantiqoon

வானம், பூமியின் இறைவனின் மீது சத்தியமாக! நிச்சயமாக இது (உங்கள் வார்த்தைகளை) நீங்கள்தாம் கூறுகின்றீர்கள் என்பதில் சந்தேகமில்லாதிருப்பதைப்போல் (இந்தக் குர்ஆனில் உள்ள அனைத்தும்) உண்மையானதாகும்.

Tafseer

هَلْ أَتَىٰكَ
உமக்கு வந்ததா?
حَدِيثُ
செய்தி
ضَيْفِ
விருந்தினர்களின்
إِبْرَٰهِيمَ
இப்ராஹிமுடைய
ٱلْمُكْرَمِينَ
கண்ணியமான(வர்கள்)

Hal ataaka hadeesu daifi Ibraaheemal mukrameen

(நபியே!) இப்ராஹீமுடைய மிக்க கண்ணியமுள்ள விருந்தினர்களின் விஷயம் உங்களுக்கு எட்டியிருக்கின்றதா?

Tafseer

إِذْ دَخَلُوا۟
அவர்கள் நுழைந்த போது
عَلَيْهِ
அவரிடம்
فَقَالُوا۟
அவர்கள் கூறினர்
سَلَٰمًاۖ
ஸலாம்
قَالَ
கூறினார்
سَلَٰمٌ
“ஸலாம்”
قَوْمٌ
மக்கள்
مُّنكَرُونَ
அறியாத

Iz dakhaloo 'alaihi faqaaloo salaaman qaala salaamun qawmum munkaroon

அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி "உங்களுக்கு) சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!" என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், "உங்களுக்கும்) சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!" என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணிக் கொண்டு,)

Tafseer

فَرَاغَ
திரும்பிச் சென்றார்
إِلَىٰٓ أَهْلِهِۦ
தனது குடும்பத்தாரிடம்
فَجَآءَ
வந்தார்
بِعِجْلٍ سَمِينٍ
கொழுத்த காளைக் கன்றைக் கொண்டு

Faraagha ilaaa ahlihee fajaaa'a bi'ijlin sameen

விரைவாகத் தன் வீட்டினுள் சென்று கொழுத்ததொரு கன்றுவின் (பொரித்த) மாமிசத்தைக் கொண்டு வந்து,

Tafseer

فَقَرَّبَهُۥٓ
அதை நெருக்கமாக்கினார்
إِلَيْهِمْ
அவர்கள் பக்கம்
قَالَ
கூறினார்
أَلَا تَأْكُلُونَ
நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?

Faqarrabahooo ilaihim qaala alaa taakuloon

அதனை அவர்கள் முன் வைத்தார். (அதனை அவர்கள் புசிக்கவில்லை. ஆதலால், அவர்களை நோக்கி) "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கேட்டார்.

Tafseer

فَأَوْجَسَ
ஆகவே, உணர்ந்தார்
مِنْهُمْ
அவர்களினால்
خِيفَةًۖ
பயத்தை
قَالُوا۟
கூறினார்கள்
لَا تَخَفْۖ
பயப்படாதீர்
وَبَشَّرُوهُ
இன்னும் அவருக்கு நற்செய்தி கூறினார்கள்
بِغُلَٰمٍ
ஓர் ஆண் குழந்தையைக்கொண்டு
عَلِيمٍ
கல்வியாளரான

Fa awjasa minhm khee fatan qaaloo laa takhaf wa bashsharoohu bighulaamin 'aleem

(பின்னும் புசிக்காமலிருப்பதைக் கண்ட) அவர் இவர்களைப் பயந்தார். (இதனை அறிந்த அவர்கள் "இப்ராஹீமே!) நீங்கள் பயப்படாதீர்கள்" என்று கூறி, (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள்.

Tafseer

فَأَقْبَلَتِ
முன்னோக்கி வந்தால்
ٱمْرَأَتُهُۥ
அவருடைய மனைவி
فِى صَرَّةٍ
சப்தத்தோடு
فَصَكَّتْ
இன்னும் அறைந்தார்
وَجْهَهَا
தனது முகத்தை
وَقَالَتْ
இன்னும் கூறினாள்
عَجُوزٌ
கிழவி ஆயிற்றே
عَقِيمٌ
மலடியான(வள்)

Fa aqbalatim ra-atuhoo fee sarratin fasakkat wajhahaa wa qaalat 'ajoozun 'aqeem

(இதனைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தன் முகத்தில் அறைந்து கொண்டு "(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?)" என்று கூறினார்.

Tafseer

قَالُوا۟
கூறினார்கள்
كَذَٰلِكِ
அவ்வாறுதான்
قَالَ
கூறினான்
رَبُّكِۖ
உமது இறைவன்
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்

Qaaloo kazaaliki qaala Rabbuki innahoo huwal hakeemul 'aleem

அதற்கவர்கள், "இவ்வாறே உங்களது இறைவன் கூறுகின்றான். நிச்சயமாக அவன் மிக ஞானமுள்ளவனும், அனைத்தையும் நன்கறிந்தவனும் ஆவான்" என்றார்கள்

Tafseer