فَتَرَى الَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يُّسَارِعُوْنَ فِيْهِمْ يَقُوْلُوْنَ نَخْشٰٓى اَنْ تُصِيْبَنَا دَاۤىِٕرَةٌ ۗفَعَسَى اللّٰهُ اَنْ يَّأْتِيَ بِالْفَتْحِ اَوْ اَمْرٍ مِّنْ عِنْدِهٖ فَيُصْبِحُوْا عَلٰى مَآ اَسَرُّوْا فِيْٓ اَنْفُسِهِمْ نٰدِمِيْنَۗ ( المائدة: ٥٢ )
Fataral lazeena fee quloobihim maraduny yusaari'oona feehim yaqooloona nakhshaaa an tuseebanaa daaa'irah; fa'asallaahu ai yaatiya bilfathi aw amrim min 'indihee fa yusbihoo 'alaa maaa asarroo feee anfusihim naadimeen (al-Māʾidah 5:52)
Abdul Hameed Baqavi:
(நபியே!) எவர்களுடைய உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கின்றதோ அவர்களிடம் (தோழமை கொள்ளவே) அவர்கள் விரைந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள்! அன்றி "(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு யாதொரு ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசக் கருத்)தைப் பற்றி கவலை அடைவார்கள்.
English Sahih:
So you see those in whose hearts is disease [i.e., hypocrisy] hastening into [association with] them, saying, "We are afraid a misfortune may strike us." But perhaps Allah will bring conquest or a decision from Him, and they will become, over what they have been concealing within themselves, regretful. ([5] Al-Ma'idah : 52)
1 Jan Trust Foundation
எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) “எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்” என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.