Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௭

فَاِنْ عُثِرَ عَلٰٓى اَنَّهُمَا اسْتَحَقَّآ اِثْمًا فَاٰخَرٰنِ يَقُوْمٰنِ مَقَامَهُمَا مِنَ الَّذِيْنَ اسْتَحَقَّ عَلَيْهِمُ الْاَوْلَيٰنِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ لَشَهَادَتُنَآ اَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَمَا اعْتَدَيْنَآ ۖاِنَّآ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ   ( المائدة: ١٠٧ )

Then if it is discovered
فَإِنْ عُثِرَ
கண்டுபிடிக்கப்பட்டால்
(on)
عَلَىٰٓ
மீது
that the two
أَنَّهُمَا
நிச்சயமாக அவ்விருவரும்
(were) guilty
ٱسْتَحَقَّآ
உரியவர்களாகி விட்டனர்
(of) sin
إِثْمًا
பாவத்திற்கு
then (let) two others
فَـَٔاخَرَانِ
வேறு இருவர்
stand
يَقُومَانِ
நிற்பார்கள்
(in) their place
مَقَامَهُمَا
அவ்விருவருடைய இடத்தில்
from
مِنَ
இருந்து
those who
ٱلَّذِينَ
எவர்கள்
have a lawful right
ٱسْتَحَقَّ
உரிமை ஏற்பட்டது
over them
عَلَيْهِمُ
அவர்களுக்கு
the former two
ٱلْأَوْلَيَٰنِ
நெருங்கிய இரு வாரிசுகள்
and let them both swear
فَيُقْسِمَانِ
அவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும்
by Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
"Surely our testimony
لَشَهَٰدَتُنَآ
நிச்சயமாக எங்கள்சாட்சியம்
(is) truer
أَحَقُّ
மிக உண்மையானது
than testimony of the other two
مِن شَهَٰدَتِهِمَا
அவ்விருவரின் சாட்சியத்தைவிட
and not we have transgressed
وَمَا ٱعْتَدَيْنَآ
நாங்கள்வரம்புமீறவில்லை
Indeed, we
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
then
إِذًا
அப்போது
(will be) of the wrongdoers"
لَّمِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்தான்

Fa in 'usira 'alaaa annahumas tahaqqaaa isman fa aakharaani yaqoomaani maqaamahumaa minal lazeenas tahaqqa 'alaihimul awlayaani fa yuqsimaani billaahi lashahaadatunaaa ahaqqu min shahaadatihimaaa wa ma'tadainaaa innaaa izal laminaz zaalimeen (al-Māʾidah 5:107)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியதிலும்) அவர்கள் பொய்யே கூறினார்கள் என்று நிச்சயமாக தெரியவந்தால் (இந்தப் பொய் சாட்சியத்தினால்) எவருக்கு நஷ்டமேற்பட்டதோ அவர் சார்பில் வேறு இருவர் (சத்தியம் செய்த) அவர்களுடைய இடத்தில் நின்று கொண்டு "அவர்களுடைய சாட்சியத்தைவிட எங்களுடைய சாட்சியம்தான் உண்மையானது (என உறுதி கூறுகிறோம்.) நாங்கள் தவறாக ஏதும் கூறவில்லை. அவ்வாறு கூறினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்" என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.

English Sahih:

But if it is found that those two were guilty of sin [i.e., perjury], let two others stand in their place [who are] foremost [in claim] from those who have a lawful right. And let them swear by Allah, "Our testimony is truer than their testimony, and we have not transgressed. Indeed, we would then be of the wrongdoers." ([5] Al-Ma'idah : 107)

1 Jan Trust Foundation

நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று| “அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது; நாங்கள் வரம்பு மீறவில்லை; (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக் காரர்களாகி விடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.